Thursday, April 08, 2010

என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை*

தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல்இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன்சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு 'இந்துமக்கள் கட்சி' சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதை எளிமைப்படுத்தி பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்தக் கலாசாரஅடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்:

  • இடம் : ICSA அரங்கம், 107, பாந்தியன் சாலை, எழும்பூர் - 8
  • (எழும்பூர் மியூசியம் எதிரில்)
  • நாள் : 15.4.2010 வியாழக்கிழமை, மாலை 5 மணி

பங்கேற்பாளர்கள் :

அ. மார்க்ஸ், ச. தமிழ்ச்செல்வன், தேவபேரின்பன், வெளி ரங்கராஜன், சி. மோகன், கே.ஏ. குணசேகரன், கோ. சுகுமாரன், வ.ஐ.ச. ஜெயபாலன், ராஜன்குறை, இந்திரன், சமயவேல், இராமாநுஜம், ஆதவன் தீட்சண்யா, அன்பாதவன், யவனிகா ஸ்ரீராம், லதா ராமகிருஷ்ணன், பிரளயன், பா. வெங்கடேசன், ஓவியா, ரஜினி, அஜிதா, சங்கர்ராம சுப்ரமணியன், என்.டி. ராஜ்குமார், சுகிர்தராணி, பசுமைக்குமார், கரிகாலன், மணிமுடி, லீனா மணிமேகலை, கம்பீரன், மு. சிவகுருநாதன், மணல்வீடு ஹரிக்கிருஷ்ணன், மோனிகா, மணிவண்ணன், கே.டி. காந்திராஜன், அய்யப்பமாதவன், பீர் முகம்மது, சிராஜுதீன், அசதா, அஜயன்பாலா, செல்மா பிரியதர்சன், நீலகண்டன், இசை, இளங்கோ கிருஷ்ணன், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன், பொன் வாசுதேவன், விசுவநாதன் கணேசன், யாழனி முனுசாமி, விஜய் மகேந்திரன், சந்திரா, பாக்யம் சங்கர், வசுமித்ரா, சிநேகிதன், சுபஸ்ரீ, மீனா, அமுதா, கவின்மலர், நிர்மலா கொற்றவை.

எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய அனைவரும் வாருங்கள்.

தொடர்புக்கு :
கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்
3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை - 20
பேசி : 94441 20582
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
*கண்டன ஒன்றுகூடலுக்கான தலைப்பு ஈழத்துப் பெண் கவிஞர் பெண்ணியாவின்கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

Tuesday, April 06, 2010

TRAITOR

By Shobasakthi Translated By Anushiya Ramaswamy

‘As I live my days locked up in a wretched prison in this frozen country, I start to write the story of my beloved child, Nirami. The story begins with the birth of God.’


Nirami, Nesakumaran’s fourteen-year-old daughter, is awaiting her abortion in the hospital room of an unnamed European city; she refuses to name her rapist.

தொடர்ந்து படிக்க...
http://www.shobasakthi.com/shobasakthi/

Wednesday, March 10, 2010

அன்புள்ள ஹெலன் டெமூத்

ன்னையே!

நான் உங்களைப் பற்றி எழுதிய ஒரு குறிப்பால் கடந்த சில நாட்களாக ‘தேசம்’ இணையத்தளத்திலும் நேற்றுமுதல் ‘தமிழ் அரங்கம்’ இணையத்தளத்திலும் நீங்கள் சந்திக்கும் அவமதிப்புகளையிட்டு மனம் பதைபதைத்து இந்தக் கடித்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

நான் பத்து வருடங்களிற்கு முன்புதான் முதன்முதலாக உங்களது பெயரை ஷீலா ரௌபாத்தம் எழுதிய ‘அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்’ என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து அறிந்துகொண்டேன். அந்த நூலின் 70வது பக்கத்தில் ஷீலா ரௌபாத்தம் இவ்வாறு உங்களைக் குறித்து எழுதியிருந்தார்..........

தொடர்ந்து படிக்க: www.shobasakthi.com

Thursday, March 04, 2010

பழி நாணுவார் : ஷோபாசக்தி

இந்தக் கட்டுரை இரு பகுதிகளாலானது. கட்டுரையின் இரண்டாவது பகுதி, உருவாகிவரும் ‘செங்கடல்’ திரைப்படம் குறித்தும் நான் படப்பிடிப்பில் ஊதியம் கேட்ட தொழிலாளர்களைத் தாக்கினேன் என்றும் கடந்த இரண்டு மாதங்களாகப் பத்திரிகைகளிலும் இணையங்களிலும் வெளியான செய்திகளின் / விமர்சனங்களின் யோக்கியதையை ஆராய்வது. முதற்பகுதி, எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் இப்போது இணையத்தளங்களில் என்மீதும் எனது தோழர்கள் மீதும் படுதீவிரமாகச் செய்துவரும் சேறடிப்புகளிற்கான எதிர்வினை....
எதிர்வினையைப் படிக்க: www.shobasakthi.com