Wednesday, June 21, 2006

வெள்ளாள ஜனநாயகம் - சுகன்

தூ! நீங்கள் மனிசரே இல்லையா?
தூ! உங்களுக்கு வெட்கமேயில்லையா?
தூ! உங்களுக்குச் சுரணையேயில்லையா?

மூகத்தளத்திலும் இணையத்தளத்திலும் பத்திரிகை - ஊடக வெளிகளிலும் இந்தநாள் வரை கேவலப்படுத்தப்படும் சமூகமாக பஞ்சமர், இழிசனர், தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் என நானாவித பழிப்புக்கும் விளிப்புக்கும் சிரிப்புக்கும் உள்ளாகின்றது எமது தலித் சமூகம்.

குறிப்பாக யாழ் இந்து உயர் வேளாள அரசியற் தொடர்ச்சி அங்கு இங்கு என இல்லாமல் எங்கும் நீக்கமற நிறைந்து வல்லாட்சி அதிகாரம் பண்ணிக்கொண்டிருக்கிறது. இதிற் கருத்துச் சுதந்திரம் மாற்றுக் கருத்து என்ற பசப்புரைகள் வேறு!

சாதி -மத பேதமற்ற சமூகத்திற்காக போராடப் போவதாகவும் உலகத்தை உய்விக்கப் போவதாகவும் உத்தாரம் கொண்டு வருகின்ற பிரகடனங்கள் எல்லாம் கடைசியில் 'எளிய சாதியள்' என்று கேவலப்படுத்தி வெளியேற்றுவதைத் தவிர தலித் சமூகத்திற்கு வேறெதையும் தந்ததில்லை. ஒரு புறத்தில் சமூகத்தளத்தில் தேசிய நாளிதழ்களான தினக்குரல், வீரகேசரி, உதயன்களில் பச்சை பச்சையாகவே சாதித் திமிரோடு பிரகடனப்படுத்துகிற மேற்சாதித் தமிழ் விளம்பரங்கள். இன்னொரு புறத்தில் அரசியற் தளங்களில் தினக்குரல் யாழ் விசேட பதிப்பில்(16.02.2003) யாழ் நகர பிதா செல்லன் கந்தையனை பச்சையாகவே சாதி சொல்லி கீறப்பட்ட கேலிச்சித்திரம்.

இப்போது தேனி இணையத்தளத்தில் தேசியம் பற்றித் தேசியத் தலைவர் திகில் பேட்டி என்ற தலைப்பில் சாதி சொல்லி இதைவிடக் கேவலப்படுத்த முடியாது என்றவாறு ஒரு சாதிய வக்கிரமான கற்பனைப் பேட்டி வெளியாகியுள்ளது.

பேட்டி காண்பதாகப் போனவர், பேட்டி காண்பதாகப் போன பாத்திரம் தனது சாதி வெறியைக் கக்கியதைத் தவிர வேறெதையும் தந்துவிடவில்லை. பேட்டி காணப் போன புலிக்குறவனை உருவாக்கிய தேனீ நிருபர் யாழ் இந்து வேளாள சாதித் திமிர் பிடித்த படித்த குரங்கென்று தெரிகிறது. அவரது 'கற்பனைப்' பேட்டியில் குழந்தையன் என்ற தலித் பாதையில் புலிக்குறவனைக் குறுக்கிடுகிறார். புலிக்குறவன் அவரைப் பார்க்கிறார்."எளிய சாதியளைப் பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு" என்ற இந்து உயர் வெள்ளாளச் சாதித்திமிர் உடனே அவனுக்கு வந்துவிடுகிறது.

"மூதேவியின் முகத்தில முழிக்கக் கூடாது",

"அம்பட்டன் குறுக்க வந்திட்டான் இனிப் போற விசயம் அவ்வளவு தான்" என்றவாறு ஒரு சமூகத்தைக் கேவலப்படுத்திவிட்டு 'அவர்' பேட்டி காணச் செல்கிறார். குழந்தையன் அவன் என்றும் புலிக்குறவன் அவர் என்றும் கேவலம் - அவமரியாதை தலித்திற்கும் மரியாதை வெள்ளாளனிற்கும் பிரக்ஞாபூர்வமாகத் தேனீயால் தரப்படுகிறது.

தொடர்ந்து "புலிக்குறவனின் தந்தையின் காலத்திலிருந்து குழந்தையன் அவர்களுக்குத் தலை மயிர் வெட்டி வந்தவன், ஆனால் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அவனது பிள்ளைகள் இருவர் புலிகளில் சேர்ந்ததைத் தொடர்ந்து குழந்தையன் தனது பரம்பரைத் தொழிலைக் கைவிட்டு விட்டான்...." இப்படியாகப் போகிறது கதை. இதைப் படிக்கும் தலித் வாசகர்களுக்கு பேட்டிக் கட்டுரையின் நோக்கம் என்னவென்று புலப்படும். (சுப.தமிழ்ச்செல்வன் என்ன சாதியென்று இந்தச் சாதியச் சமூகம் இதுவரையில் கண்டு பிடிக்காமலா விட்டது?)

1. அம்பட்டனும் கரையானும் இப்போது அரசியல் அதிகாரம் செலுத்தி வாறாங்கள்.

2.அவங்கள் படிக்காதவங்கள்.

3.எப்போதுமே படித்த வெள்ளாளர்களுக்குத் தான் எதையும் சரியாகச் செய்ய முடியும் அரசியல் அதிகாரம் மீண்டும் படித்த வெள்ளாளர்களுக்குத் தான் கிடைக்க வேண்டும்.

என்றவாறு முடிவுரை கூறி முடிக்காத குறையாக மீண்டும் இரண்டாம் பாகத்திலும் தொடரும் என அச்சுறுத்திவிட்டுப் போகிறது தேனீ இணையத்தளம்.

இப்படியான கீழ்த்தரமான கேவலமான மனச் சிதைவுகளையும் வக்கிரங்களையும் சாதி வெறியர்களையும் கொண்டது தானா ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்குமான இணையத்தளம்?அரசியல் அதிகாரம் கிடைத்தால் தலித்துக்களின் நிலை எப்படி அமையுமென இக் கற்பனைக் கட்டுரைப் பேட்டி மறைமுகமாக எங்களை எச்சரித்துவிட்டுப் போயிருக்கிறது.

மாற்றுத் தளங்களில் தொழிற்படும் தலித் தோழர்களே எச்சரிக்கை! இதையொட்டிய உங்கள் கண்டனங்களை உங்களுக்குச் சாத்தியமான அனைத்து வழிகளிலும் -மெளனமாக மனம் புழுங்காமல்- தேனீக்குத் தெரிவியுங்கள். தலித் சமூகத்தின் மீதான இத்தகைய அவமதிப்புகளிற்காகவும் இழித்துரைப்புகளிற்காகவும் தேனீ இணையத் தளம் பகிரங்க மன்னிப்பைக் கோரவும் குறித்த சாதி வெறிக் கட்டுரையை மீளப் பெறவும் தேனீயை நிர்ப்பந்தியுங்கள்!

20.06.2006

29 comments:

Anonymous said...

Already when I read it in thenee I felt that the thenee article is cast oriented racist. Of course your concern is legitimate and moral. I am deeply, madly, truely disappointed that thenee is not listening.
- A Former member of PLOTE

Anonymous said...

மிக வெறுக்கத் தக்க எழுத்து. இதன் மூலம் தாம் தம்மையே தாழ்த்தியுள்ளார்கள். இவர்கள் நண்பர்கள் கூட ,இவர்களை மதிக்க மாட்டார்கள். "தாம் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு"-
யோகன் பாரிஸ்

Anonymous said...

தாங்கள் கூறிய கருத்தென்பது உண்மையே. புலியைப் பற்றி யார் எதிர்க்கருத்துக் கூறுகின்றார்களோ அவர்களை தாராளமாக (ஆனால் மார்க்சீய சிந்தனையை தவிர்த்த அதாவது ரயாகரன் சிறிரங்கன் போன்றவர்களின் கருத்தை இருட்டடிப்புச் செய்வது ஆனால் மறுபுறத்தில் இதுதான் மார்க்சீயம் என்று தேனியின் ஆஸ்தான எழுத்தாளர் எழுதிக் கொள்வார்)
அனுமதிப்பர்.
இது மதவாதத்தில் ஊறியவராக இருக்கலாம்
படுபிற்போக்கான கருத்தைக் கொண்டவாராக இருக்கலாம்
சாதி வெறியராக இருக்கலாம்.
பொதுவுடமைக் கருத்துக்கு எதிரியாக இருக்கலாம். ஆனால் புலியைப் பற்றி குறையாக எழுதினால் மாத்திரம் தகுதிய என்ற சான்றிதல் கிடைக்கும்.

புலியெதிர்ப்பு என்பது முதலில் அநியாயத்தினை வெறுப்பதன் நிலைப்பாடாக இருக்கின்றது. அநியாயத்தை எதிர்ப்பதற்கு பல வேறு வழிகள் இருக்கின்றன. இதனை மீள் பார்வை செய்ய தயாராக இல்லாத நிலை தான் இவ்வாறான கதம்ப நிலைக்கு காரணமாகின்றது. இந்தக் கதம்ப நிலை என்பது மக்கள் சக்தி என்பதை நம்பாமல் குறுக்கு வழியில் இலக்கை அடையும் போக்கை கொண்டிருக்கின்றது.
இவ்வாறான தவறான பாதையை சரிப்படுத்துவதற்கு மார்க்சீய சிந்தனை கொண்டவர்களே எல்லாவற்றிற்கும் கடிவாளம் போடக் கூடியவர்களாக இருக்கின்றனர். கறாரான மார்க்சீயப் பார்வை எப்பது மேற்குறிப்பிட்ட கருத்தமைவை அதிர வைப்பதனால் கடும் சீற்றத்தை மார்க்சீயர்களின் மீது காட்டுகின்றனர்.
இன்றையக் காலத்தில் ஆத்திரம்; பழியுணர்ச்சி; எழுத்தால் வன்மம் காட்டுதல் அல்லது உடலரீதியாக தாக்குதல் என்பதனைத் தவிர்ப்பது மானிடத்தை நேசிக்கும் சக்திகளுக்கு அவசியமாக இருக்க வேண்டிய பண்புகளாகும்.
எழுத்தால் வன்மம் காட்டுவது கூட துப்பாக்கியால் வன்மம் காட்டுவதற்கு சமமாகும். இதில் புலியின் பாசீசத்தை எதிர்ப்பதற்கு மாத்திரம் அல்ல புலியை எதிர்ப்பவர்களை அணிதிரட்டக் கூட நிதானமாக எழுத்து வடிவம் அவசியமாகும்.
ஒன்றை திட்டித் தீர்ப்பதால் மனிதர்களின் அகவுணர்வின் தாகத்தை அழுத்தத்தை தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால் மக்களுக்கு அல்லது எதிர்ப்பு வெறியில் உள்ளவர்களுக்கு கருத்தை திணித்து விட முடியாது. ஆக நாம் யாருக்கு எவ்வாறு கருத்தைச் கூற முற்படுகின்றோம் என்பது பற்றிய நிதானம் பயிற்சி அவசியமாகும்.
நன்றி
சுதன்

Anonymous said...

மேலும் சில குறிப்புக்கள்:

சமூக ஜனநாயகம், பாராளுமன்ற ஜனநாயகம், உட்கட்சி ஜனநாயகம் இவை போன்று வெள்ளாள ஜனநாயகம் மிக அரிதாகக் காணக்கிடைக்கும் சமகால அரசியல் செல்நெறிகளில் முக்கியமான ஒன்று.

தமது மேற்சாதி உணர்வின் தளத்தில் நின்று புலிகளின் ஜனநாயக மறுப்பையும் பாசிசப் பரிமாணங்களையும் 'விமர்சிப்பவர்களின்' அரசியற் சொல்லாடல்களில் இக் கருத்துநிலை காணக்கிடைக்கும்...உதாரணத்திற்கு: "யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்களை வெளியேற்றியது தலித்துக்கள் தான்" என்று புகழ் பெற்ற பொன்முத்தைப் பகிரங்கமாகவே ஸ்டுட்கார்ட் இலக்கியச் சந்திப்புக் கலந்துரையாடலில் உதிர்த்தார் வெள்ளாள அழகலிங்கம்.

முப்பதாண்டுப் போர்ச் சூழலில் எல்லா அநியாயங்களுக்கும் அழிவுகளுக்கும் காரணம் "தலித்துகள் ஆயுதம் எடுத்தது தான்" என்று இவை சொல்லிச் செல்லும்.

தேனீயின் இந்தக் கற்பனைப் பேட்டியிலும் வரும் 'அம்பட்டன் குழந்தையன்' மகன்கள் இருவர் ஆயுதம் ஏந்தி வாகனம் ஓடி- சமூ கத்தை அழிக்கக் குழந்தையனைக் கொண்டு முடி வெட்டுவித்த தகப்பனின் மகன் அநியாயங்களைக் கண்டு மனதிற்குள் பொருமிக் கொண்டாலும் சூழ்நிலை காரணமாக வெளியே அதைப் பேச முடியாமல் தன் பத்திரிகைத் தர்மத்தைக் காப்பாற்றும் அப்பாவிப் பத்திரிகையாளன். 'மேற்சாதி' தந்தைக்குப் பிறந்த மகன் பத்திரிகையாளனாகவும் 'கீழ்சாதி'தந்தைக்குப் பிறந்த மகன் வன்முறையாளனாகவும் வரும் இருமை எதிர்வுகளைக் கட்டமைக்கும் ஆதிக்க சாதி உளவியலைத் தலித் வாசகர்கள் இதிற் கண்டுகொள்ளத் தவற மாட்டார்கள்.

ஆதிக்க சாதி உணர்வு தனது கதாநாயகர்களை ஊடகப் பரப்பிலிருந்தே இப்போது தேர்வு செய்கிறது.மணிரத்தினத்தின்- 'பம்பாய்', 'உயிரே', ஷங்கரின்- சுஜாதாவின்- 'முதல்வன்'... இந்த மேற்சாதி கதாநாயகர்கள் எல்லாம் ஊடகக்காரர்கள். வில்லன்கள், வன்முறையாளர்கள் =முஸ்லிம்கள் தலித்துகள்.

தமிழ்த்தேசியம், மார்க்ஸியம், சர்வதேசியம், கலை இலக்கியம் எல்லாவற்றினதும் அதிகாரபூர்வ பேச்சாளர்களாக இருந்தாலும் முக்கியமாக சாதிவெறி வெள்ளாளர்கள் எல்லோரும் ஒன்றுபடும் புள்ளி ஒன்று மட்டுமே உண்டு. அது தலித் அரசியல் மீதான வெறுப்பு.

கடைசி 'உயிர்நிழல்' சஞசிகையில்(ஏப்ரல்-யூன் 2006) ஒரு கேவலம், துடைப்பான் என்ற புனைபெயரில் "பாரிஸில் ஒரு சிலரிடம் நிலை கொண்டிருந்த வலதுசாரி சந்தப்ப்பவாத தலித்தியத்தை (தோழர் புஸ்பராஜா ) நிராகரிப்பவராகவும் கேள்விக்குட்படுத்துபவராகவும் கடைசிவரை இருந்தார்" என்று தனது சாதி மனோபாவத்தை உயிர்நிழல் சஞ்சிகையில் இறக்கி வைத்துள்ளது. இதற்காகவேனும் தனது சாம்பலிலிருந்து எழுந்து கருத்துச் சொல்ல தோழர் புஸ்பராஜா வரவேண்டும்.தலித்துகளை இருக்கும் காலத்தில் தான் தமது அரசியலைத் தெரிவு செய்ய விடவில்லை. இறந்த பின்பாகுதல் நிம்மதியாக இருக்கவிட வேண்டும். தமது மேற்சாதி அரசியலை தலித்துக்கள் மேல் ஏற்றிவைத்து விட்டுத் தமது அரசியல் நேர்மை பற்றிப் பேசக்கூடாது! துடைப்பானைப் போன்ற தலித் அரசியல் 'கண்காணிப்பாளர்கள்' எல்லாம் தேனீ இச் சாதிவெறிக் கட்டுரையை வெளியிட்டிருக்கும் போது கண்டுகொள்ளாமல் எங்கே பதுங்கியிருக்கிறீர்கள்?

Anonymous said...

அய்யோ கொஞ்சம் தெளிவாக எழுதுங்களேன். யார் யாருக்கு எழுதுகிறீர்கள் என்பது ஒன்றும் விளங்கவில்லையே.

Anonymous said...

வணக்கம் சுகன்.
நிதர்சனத்தில் சண்ணைப் பற்றி எழுதியருந்ததைப்பார்க்க சிரிப்பாக இருந்தது.

Anonymous said...

//..தூ! நீங்கள் மனிசரே இல்லையா?
தூ! உங்களுக்கு வெட்கமேயில்லையா?
தூ! உங்களுக்குச் சுரணையேயில்லையா?..//


என்ன சுகன் திடீரெண்று புதுக்கேள்விகள் கேட்கிறீர். இவ்வளவு நாளும் தெரியாதோ?

//....சமூகத்தளத்திலும் இணையத்தளத்திலும் பத்திரிகை - ஊடக வெளிகளிலும் இந்தநாள் வரை கேவலப்படுத்தப்படும் சமூகமாக ........எமது தலித் சமூகம்.....///

கேவலப்படுத்துவது யார் என்று தெரிகிறது தானே? இனி மேலும் 'புலி எதிர்ப்பு' என்ற பம்மாத்துப் போர்வையில் குளிர்காயாதீர்!


//..சாதி -மத பேதமற்ற சமூகத்திற்காக போராடப் போவதாகவும் உலகத்தை உய்விக்கப் போவதாகவும் உத்தாரம் கொண்டு வருகின்ற பிரகடனங்கள் எல்லாம் கடைசியில் ../

இதனாற் தான் புலிகள் இவ்வாறான 'உலகத்தை உய்விக்கும்' பிரகடனங்கள் பிறப்பிப்பதில்லை. ஏனென்றால் பலதோணிகளில் கால்வைத்து கடைசியில் இணையத்தளத்தில் இயக்கம் நடத்தும் புரட்சி வாதிகளாக மாறவேண்டி வருமென்பதை அறிந்திருக்கிறார்கள்!

/.. இன்னொரு புறத்தில் அரசியற் தளங்களில் தினக்குரல் யாழ் விசேட பதிப்பில்(16.02.2003) யாழ் நகர பிதா செல்லன் கந்தையனை பச்சையாகவே சாதி சொல்லி கீறப்பட்ட கேலிச்சித்திரம்...//


இவாறு நடந்தது மிகவும் தவறு, என்ன தண்டனை கொடுத்தாலும் தவறில்லை.
அனால், நான் செல்லன் கந்தையனின் சாதிப்பின்னணி பற்றி முதலில் கேள்வியுற்றது இண்றைய 'தேனீ', ரீ.பீ.சீ நாயகன் ஆனந்தசங்கரி யின் குற்றச்சாட்டின் பின்னர் தான்! புலிக்கு கழுத்தறுக்க சந்தர்ப்பவாத ஆனந்தசங்கரி எடுத்ததுதான் செல்லனின் சாதிக் கத்தி என்பது புலிஎதிர்ப்புக் கும்பலுக்குத் தெரிந்திருந்தும் வாய்மூடி இருந்தவர்கள் இன்று 'தேனீ' நோக்கி நோவது வேடிக்கை!

//.. அம்பட்டனும் கரையானும் இப்போது அரசியல் அதிகாரம் செலுத்தி வாறாங்கள்.
அவங்கள் படிக்காதவங்கள்
எப்போதுமே படித்த வெள்ளாளர்களுக்குத் //


இவாறு சொன்னவர்கள் பலரை (அனேகமனவர்கள் புளொட் காறர்கள்) எனக்குத் தெரியும். ஆனால் இன்றோ அவர்கள் முன்நின்று புலிக்கு கைதட்டுவதிலும் , இறுதிப்போர் நிதி கொடுப்பதிலும் உள்ளார்கள்! காலம் செய்த கோலமா அல்லது அடியைப்போல அண்ணன் தம்பி உதவாதா தெரியவில்லை!!!!

அத்துடன் இன்றைய புலிஎதிர்ப்பு நாயகன் ஆனந்தசங்கரி தமிழ்ச்செல்வனைப்பற்றி கொழும்பு டெய்லி நியூஸுக்கு இப்படிச் சொல்லியிருக்கிறார்
" 32 பல்லையும் காட்டினால் அரசியல் தெரியுமென்பதா?" இப்படியான வயித்தெரிச்சல்கள் தான் புலிஎதிர்ப்பு ஆகிவிட்டது!



///இப்படியான கீழ்த்தரமான கேவலமான மனச் சிதைவுகளையும் வக்கிரங்களையும் சாதி வெறியர்களையும் கொண்டது தானா ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்குமான இணையத்தளம்?/

மதிவதனி 'சத்தி எடுத்த கதை' எழுதியபோது தெரிந்திருக்க வேண்டுமே?

//அரசியல் அதிகாரம் கிடைத்தால் தலித்துக்களின் நிலை எப்படி அமையுமென இக் கற்பனைக் கட்டுரைப் பேட்டி மறைமுகமாக எங்களை எச்சரித்துவிட்டுப் போயிருக்கிறது. //

அவர்களை நிராகரியுங்கள்!!
புலிஎதிர்ப்பு என்ற போர்வையில் அவர்கள் ஆடும் கூத்தில் களிப்படையாதீர்கள்!!!

//தலித் சமூகத்தின் மீதான இத்தகைய அவமதிப்புகளிற்காகவும் இழித்துரைப்புகளிற்காகவும் தேனீ இணையத் தளம் பகிரங்க மன்னிப்பைக் கோரவும் குறித்த சாதி வெறிக் கட்டுரையை மீளப் பெறவும் தேனீயை நிர்ப்பந்தியுங்கள்!//

இல்லை!!! சுகன்,
பகிரங்க மன்னிப்போ கட்டுரை மீழ் பெறுதலோ ஒன்றும் செய்யப்போவதில்லை. மாறாக அவர்கள் போடும் 'உண்மையான' ஜனநாயக, மாற்றுக்கருத்து வேசத்தைக் காப்பாற்றவே உதவும்!

உங்கள் விமர்சனத்துக்கு மிக்க நன்றி சுகன்!!!

Anonymous said...

unkal karuththukkal ainaiththaiyum ennal etkka mudiyathu aanal intha karuththai etkinren

siva
swiss

Anonymous said...

சுகன்ரை குரல் சரியானதுதான். தேனீ திரும்பப் பெறவேணுமெண்டு கேட்கத்தான் வேணும். தேனீ பின்வாங்கிறது எண்டது நடக்க்குமாமா??. அதுசரி… தானும் தலித் என்று அறிவிப்புச் செய்து தேனியிலை எழுதிற ஒருசில கட்டுரையாளர்களும் மௌனமாய் இருக்கிறதுதான் விசித்திரம். யாழ்ப்பாணீயமா ஏகாதிபத்தியமா எண்டால் ஏகாதிபத்தியம்தான் எண்டு ரொக்கற் விடுறவையளுக்கு சுகன் காட்டுற தலித்தியப் புள்ளியள் பெரிசாத் தெரிஞ்சிருக்கணுமே. „"என்ன இருந்தாலும் அவங்கள்தான்...…“ எண்ட புலியெதிர்ப்புச் சித்தாந்தங்களை பாதிச்சிடுமோ என்னவோ. அழகலிங்கம், துடைப்பான் இவையளட்டை போகமுன்னம் அவையளை சுகன் விட்டுவைச்சது மறதியா மறைப்பா?

Anonymous said...

I agree with you. Dalits has to fight a lot to get out of all these. Whatever Thenee published wrong.

Anonymous said...

சபாஸ்
இதுவல்லோ மாற்றுக்கருத்து!

Anonymous said...

ஐனநாயகம் மாற்றுக்கருத்து என்பது பிரதானமானதும் காலத்தின் தேவையானதும்!
ஐனநாயகத்தின் பெயராலும் மாற்றுக்கருத்தின் பெயராலும் சாதியம் பேசுவது ஐனநாயக மறுப்பை விடவும் படு மோசமான விடயமாகும்! புலிகளை பாசிஸ்டுக்கள் என்றோ அல்லது பயங்கரவாதிகள் என்றோ கருத்து கூறுவது அவரவர் அரசியல் ஐனநாயக சுதந்திரம்!
ஆனால் மனித நாகரீகங்களுக்கு அப்பால் சாதியக்கருத்துக்காளால் தூற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்! என்ன கேவலம்! சாதித்திமிர் பிடித்து குப்பபைகளை கொட்டுவது போல்
மாற்றுக்கருத்துக்களுக்கான தளம் என்ற போர்வையில் உங்கள் இணையத்தளத்தில் எதை எழுதுகிறீர்கள்! அம்பட்டன் மனிதன் இல்லையா? அவன் உங்கள் வீடு தேடி வந்து பரம்பரையாக மயிர் வெட்டி சேவகம் செய்ய வேண்டுமா?.... அவனுக்கு மரியாதை வரக்கூடாதா?.. அவனது பிள்ளைகள் இயக்கத்திற்கு போகக்கூடாதா?....

தேனி இணையத்தளம் உடனடியாக நடந்த தவறிற்கு பகிரங்கமாக சுயவிமர்சனம் செய்யப்பட வேண்டும்! இல்லையெனில் பஞ்சமர்,கொம் என்பவன் தீப்பொறி

Anonymous said...

வெள்ளாளன் ......... தலித்....... பிழைப்பு!....

சோபாசத்தி(யக்கடதாசி)

நயினார் சுகன் அவர்களுக்கு!
பணிவான வணக்கமுங்கோ!

தேனியில் உங்கள் தலைவரின் பேட்டி பற்றி நீங்கள் எழுதிய கட்டுரை
ஆகா.....ஓகோ......ஆகாகா.....ஓகோகோ.......
உங்கள் தலித்பற்று ஆலையில்லா ஊருக்கு இலுப்பம்ப+ சக்கரையாம்.

தேனியை புலியை மிஞ்சி அடித்து வீழ்த்துவதற்கு
இதைவிட வேறு வழியே கிடையாது.
ஒத்தைக்கு ஒத்தை,
சுகனர்;;..? கொக்கா?...

தலித்துகளுக்காக உண்மையா வரிந்து கட்டிக்கொண்டு வாறியா?
தலித்துக்களை உரிந்து பார்க்க ஆசைப்படுகிறாயா?
சந்தேகமாக் கிடக்கு!

தலித்தி யம் சாதி பற்றி நான் மட்டும்தான் கதைக்கோணும்
மற்றவயள் கதைக்கப்படாது எண்ட ஏக போக உரிமை
உங்கட கட்டுரையில தெரியுதுங்கோ.

இருந்தாலும் பேட்டியை அமைதியாக இருந்து படிச்சிருக்கலாம்
அவசரகாரனுக்கு புத்தி மத்திமம்.
ஆட்டுவித்தார் ஆரோ ஒருவர் ஆடாதேடா நயினா?

நீ குறிப்பிட்டு எழுதிய பேட்டி
ஒரு தலித்தானுங்கோ எழுதினதுங்கோ தலித்தானுங்கோ எழுதினதுங்கோ
தலித்துக்களுணுடைய இன்றைய நிலை
தலித்துக்குத்தானுங்கோ விளங்கும்.
நான் தலித்.
நீங்களுங்கோ............?


வேலன்

Anonymous said...

//"அம்பட்டனும் கரையானும் இப்போது அரசியல் அதிகாரம் செலுத்தி வாறாங்கள். "//

சுகன், என்னைப் பொறுத்தவரை புலிகளை ஆதரிக்க இதுவும் ஒரு நல்ல காரணம்.
அவர்களாவது 'அம்பட்டனையும் கரையானையும்' ஆவது கரைசேர்ப்பாங்கள்.
இந்த புலிஎதிர்ப்புக் குழுக்கள் வெற்று "தலித் விடுதலை கோசம்" எழுப்புவதைத் தவிர வேறொன்றும் செய்வதில்லை

Anonymous said...

மாற்றுக்கருத்தையும் ஐனநாயகத்தையும் வலியுறுத்திவரும் தேனி
சாதியத்தை பேசியிருப்பது அந்த இணையத்தளத்தின்
மீதான அருவருப்பை ஏற்படுத்தியுள்ளது!

அடிப்படை வாதிகளின் பிற்போக்கு
கலாச்சார கருத்துக்களை பதிவு செய்தiமைக்கு தேனி
பகிரங்கமாக சுயவிமர்சனம் செய்ய வேண்டும்

இல்லையேல் பஞ்சமர். கொம்
தீப்பொறி கிளப்பும்

Anonymous said...

I am deeply, madly,
- A Former member of PLOTE

Anonymous said...

தலித்தியம் என்பது ஒரு சீர்திருத்தவாதச் சிந்தனைக்கு உட்பட்டதாகும்.
இடஒதுக்கீடு கூட சீர்திருத்தத்திற்கு உட்பட்ட தாகும். இவைகள் முதலாளித்துவ சனநாயகம் என்ற நிலையில் இருந்து தலித்தியத்தை அங்கீகரிக்க முடியுமே அன்றி ஒரு புரட்சியை அடையும் ஒரு கோட்பாடாக ஏற்றுக் கொள்ள முடியாது.
சுகன் இதனை ஆராய்ந்து பதில் தருவீர்களா?

~~மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டமான உறவுகளில் தவிர்க்கமுடியாத வகையில் ஈடுபடுகின்றார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும் அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளின் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும். இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக> அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம்> அரசியல் என்ற மேற்கட்டம் எழுப்பப்பட்டு> அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன.
பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக> அரசியல்> அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கின்றது. மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை> அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கின்றது.
வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில்> சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கு இருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு- அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்தூpமை உறவுகளோடு- இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறி விடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.
பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள்> அந்த மாபெரும் மேற்கட்டடம் முழுவதையுமே சீக்கிரமாகவே அல்லது சற்றுத் தாமதமாகவோ மாற்றியமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கின்ற பொழுது உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகின்ற பொருள்வகை மாற்றங்களுக்கும் (இயற்கை விஞ்ஞானத்தைப் போல இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்) சட்டம்> அரசியல்> கலைத்துறை அல்லது தத்துவஞானத் துறைகளில்- சுருக்கமாகச் சொல்வதென்றால் சித்தாந்தத்துறைகளில்- இந்தப் போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து கொண்டு அதில் இறுதி முடிவுக்காகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும்.
ஓரு தனிநபர் தன்னைப் என்ன நிலைக்கிறார் என்பதைக் கொண்டு நாம் அவரைப் பற்றி முடிவு செய்வதில்லை. அது போலவே இப்படி மாறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தை அதன் உணர்வைக் கொண்டு முடிவு செய்ய முடியாது. அதற்கு மாறாக> இந்த உணர்வைப் பொருளாயத வாழ்க்கையின் முரண்பாடுகள் மூலமாகவே விளக்க முடியும்.
எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படவில்லை> புதிய> உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக்கூடிய பொருளாயத நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம் தன்னால் சாதிக்க்கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாதபடி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய பொருளாயத நிலைமைகள் முன்பே இடம் பெற்ற பிறகு அல்லது குறைந்த பட்சம் உருவாகிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சினையே தோன்றுகின்றது என்பது அதிக நுணுக்கமாக ஆராயும் பொழுது புலப்படும்.
வரிவான உருவரையில் ஆசிய> பண்டைக்கால> நிலப்பிரபுத்துவ> நவீன முதலாளித்துவ உற்பத்தி முறைகளை சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றத்தைக் குறிக்கின்ற சகாப்தங்கள் என்று குறிப்பிடலாம். முதலாளித்துவ உற்பத்தி முறைதான் உற்பத்தியின் சமூக நிகழ்வில் கடைசி முரணியல் வடிவம்- முரணியல் என்பது தனிப்பட்ட முரணியல் என்ற பொருளில் அல்ல> தனிநபர்களின் ஜீவனோபாயத்தின் சமூக நிலைமைகளிலிருந்து தோன்றும் முரணியலே> ஆனால் முதலாளித்துவ சமூகத்தின் உள்ளே வளர்ந்து கொண்டிருக்கும் உற்பத்திச் சக்திகள் இந்த முரணைத் தீர்ப்பதற்குரிய பொருளாயத நிலைகளையும் உருவாக்குகின்றன. எனவே இந்த சமூக அமைப்போடு மனித சமூகத்தின் வரலாற்றுக்கு முந்திய காலம் முடிவடைகிறது.~~ மார்க்ஸ்

Anonymous said...

நாங்கள் செய்வதெல்லாம் பிரயோசனமற்றது.
எந்த விடிவும் இல்லை. எங்கள் பலங்கள் குறைகின்றன.
நாங்கள் இத்தனை வருடங்கள் பாடுபட்டுங்கூட, தொடங்கியபோதினை விட நிலைமை இப்பொழுது இன்னும் மோசமாகிவிட்டது.
எதிரி முன்னெப்பொழுதையும் விடப் பலத்துடனிருக்கிறான்.
அவனது வலு பல்கிப்பெருகியிருக்கிறதாகவே தெரிகிறது.
வெல்லப்படமுடியாதது என்ற தோற்றத்தினைத் பெற்றுவிட்டான் அவன்.
நாங்கள் பிழை செய்துவிட்டோம் என்பதை இனி மூடி மறைக்கவும் முடியாது.

Anonymous said...

தோழா; ஜான் கொலைபற்றி செய்தியை வெளிக்கொணா;ந்ததோடு அத நிறுத;துவதற்காக எடுத்கொள்ளும் முயற்சிகளுக்கும் நன்றிகள். ரிபிசி முதாலித்துவமா> பிற்போக்காளார்களா என்பதைப்;பற்றி எனக்கு கவலைஇல்லை. ஜான போன்றவாகளின் கொலைபற்றி கதைப்பதற்கு பரந்தஅளவில் இன்று ரிபிசி மட்டுமே உள்ளது.

Anonymous said...

Tahnks for your 'Naddaamai'yisam

Anonymous said...

'வெள்ளாள ஜனநாயகம் 'கட்டுரைக்குத் தேனீயின் நிருபர் தேனீயில் பதில் எழுதியிருக்கிறார். அந்தப் பதில் குறித்து...

யாரும் யாரிடமும் மன்னிப்புக் கோரவும் மன்னிக்கவும் முடிந்து போகிற பிரச்சினையல்ல சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும். நமது சமூக அமைப்பு ஒரு சாதிய அமைப்பு. அதன் கொடூரம் அதற்குள் படும் அவமானங்கள் எல்லாம் அதற்குள் இருந்து வந்திருந்தால் மண்டையில் உறைத்திருக்கும்.திடீர் பேட்டி, திகில் பேட்டி என்ற எதிர்வினைகளிலோ திடீர் கவன ஈர்ப்பிலோ இதை எதிர் கொள்வது சிக்கலானது. அப்படியான அவமானங்களையும் கொடூரத்தையும் அனுபவித்தவன் என்ற வரையில் நானும் எனது மூதாதையரும் அனுபவித்த அவமானங்கள் தோல்விகள் போராட்டங்கள் இவற்றைத் தலித்தாக இருக்கும் ஒருவரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியம். 'கறுப்பனின் கண்ணில் இருக்கும் கோபத்தை இன்னொரு கறுப்பன் மட்டுமே புரிந்துகொள்வான்' என்று ஒரு ஆபிரிக்கக் கவிதை கூறும். என் மேல் ஒரு வெள்ளை வேட்டியைப் போர்த்தியற்ககு நன்றி தோழரே! யாரும் எமது சமூகத்துக்கு இதுவரையில் அப்படி ஒரு கெளரவத்தையும் மதிப்பையும் தந்ததில்லை. மிகவும் நன்றி!

சுப. தமிழ்ச்செல்வன் மீதான உங்கள் கவன ஈர்ப்பு குறிப்பிடத் தகுந்த ஒன்று. பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகாது. நமக்கு எச்சரிக்கை உணர்வு தேவை. எனது நோக்கம் கட்டுரை தான். தேனீயோ ஜெமினியோ அல்ல. அய்ரோப்பிய சூழலில் ஜனநாயகத்துக்கும் மாற்றுக் கருத்துக்களிற்குமான பத்திரிகை, சஞ்சிகை, இணையத்தளங்களில் தேனீக்கும் ஜெமினிக்கும் இடமுண்டு. இது ஸ்டுட்கார்ட் தேனீயிலிருந்து பிரிந்து இன்னொரு தேனீ வந்து பின்னர் அது மாறி அக்னி வந்து இப்படித் தேனியிலிருந்து தேனீவரை ஜெமினிக்கு இடமுண்டு.அது மதிப்புக்குரியது. அதற்காக ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டால் எப்படி? கட்டை விரலைக் கொடுத்துவிட்டு குருக்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை எனக்கில்லை. தேனீ சில நேரங்களில் தன் பொறுப்பை தெரிந்து கொள்ளத் தவறி விடுகிறது.

கனடா தேடகத்தில் நடந்ததென்ன? என்றொரு கட்டுரை தேனீயில் வந்ததைப் பார்த்திருப்பீர்கள்.அதில் ஒரு வரி வருகிறது...'தண்ணி ப்புளு பிலிம் சரக்கு ...மற்றவன் பெண்டாட்டி இவையெல்லாம் தேடகத்திற்கு'என்று வரும். இவை கனடாவில் மாற்றுக் கருத்துக்காகப் போராடிய உழைத்த தோழர்களின் முயற்சிகளை கொச்சைப்படுத்தல் இல்லையா? அவர்களின் ஆரம்பகால நடவடிக்கைகளின் மேல் மலத்தை அள்ளி வீசவில்லையா? நிதர்சனம் சேதுவிற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? தேடகம் இயங்கி வந்த மண்டபத்துக்கு வாடகை செலுத்துவதற்காகவே வேலைக்குப் போய் வந்து சம்பளப் பணத்தில் வாடகையை நீண்ட காலமாகவே செலுத்தி வந்த தோழர் குமரனை தேனீ கட்டுரையாளர் அறியமாட்டாரா? இப்படியான நேரங்களில் யாரைக் கொண்டு போய் யாரிடம் விற்கிறோம் என்ற புரிதல் தேவை. பக்குவம் தேவை.நமது தோழர்கள் அவர்கள்.

அடுத்து ஷோபாசக்தியின் மறுப்பை பிரசுரிக்காத தன்மை இதெல்லாம் மாற்றுக் கருத்துக்கான நமது இருபதாண்டு காலத்தில் சஞ்சிகைகளிடையே இத்தன்மை வந்ததில்லை. தேனீக்கு இந்த ஜனநாயக மறுப்பு ஏன் வருகிறது? சரி வந்துவிட்டுப் போகட்டும்..நமது பிரச்சனைக்கு வருவோம்.
ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் சார்ந்து செய்திகளைத் தரும் நமது நிருபர் -அதாவது தேனீ நிருபர்- தரும் செய்திகள் அதன் உளவியல் தர்க்கங்கள் இவை குறித்துப் பார்ப்போம்.

'புலிகளின் உறவுகளை மேலும் அடையாளம் காட்டுவதற்காகவே குழந்தையன் என்ற ஒடுக்கப்ட்ட சமூகத்துக் கதாபாத்திரமும் இடையில் புகுத்தப்பட்டது' என்று கதைகளுக்குக் கச்சாப் பொருளாக இடையில் புகுத்தப்படும் பாத்திரமாக சரி இதையும் சேர்ப்போம் என்று தலித்துக்களை வைத்திருக்கும் மனோபாவம் தான் கேள்விக்குரியது. பல்வேறு பிரதான பாத்திரங்களுடன் மேலதிகமாக சேர்க்கப்படும் ஒரு பாத்திரமாகத் தலித்துகள் இருப்பதை எப்படி எதிர் கொள்வது? உங்களுக்கு விளையாட்டாக இருக்கலாம். நமக்குச் சீவன் போகிறது. காட்டமாக இடித்துரைக்க வேண்டியுள்ளது.

சரி, என்.கே. ரகுநாதனின் ஒரு 'பனஞ் சோலைக் கிராமத்தின் எழுச்சி' எனும் தன் வரலாற்று நாவலில் வரும் சொல்லாடல்களைக் கவனியுங்கள்:'கந்தப்பர் கத்தி தீட்டி முடித்ததும் இயனக் கூட்டை அரையில் கட்டிக்கொண்டு காதோல் மாதோல்களைப் போட்டுக்கொண்டார். எல்லாம் முடிந்த பின் முட்டியை எடுத்துக் கொண்டு அவர் வீடோடு இணைந்த காணிக்குள் இருக்கும் பனைகளில் ஏறப்போனார். (பக்கம்:11) கந்தப்பர் தனது சிம்மாசனத்தில் படுத்துக் கிடந்தார்.(பக்கம்/27)

பிரதி கட்டமைக்கப்பட்ட விதத்தில் ஆதிக்கம் செலுத்தும் அல்லது வழி நடத்தும் அல்லது ஒப்பேற்றும் சொல்லாடல்களை இனங் காண்பது நமக்கு முக்கியமானது. தேனீயின் நமது நிருபரின் மேற்குறித்த கற்பனைப் பேட்டியில் எப்படி மேற்சாதி அணுகுமுறை தொழிற்படுகிறது என்பதைப் பார்ப்போம். தலித்துக்கு குழந்தையன் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.அவரிற்கு குழந்தைவேல் என்று பெயர் கொடுக்கப்பட்டிருப்பின் ஆட்டம் வேறு மாதிரி இருந்திருக்கும். அது கதையில் அப்படித் தான் வரும் என்று சொல்வீர்கள். வேலன், கந்தன், செல்லன், குழந்தையன், போன்ற பெயர்களால் அடையாளப் படுத்தப்படுவதிற்கு தலித்துகள் இனித் தயாரில்லை என்பதை தலித் பண்பாடு தலித் அரசியல் கூறும். தலித்தாக இருந்தால்அது உடனே புலப்படும். சுரணையில் உறைத்திருக்கும்.

அடுத்துப் புலிக்குறவன் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இது குறவர் சாதியுடன் தொடர்பு பட்டது. சாதிய பழிப்பு நிலையுடன் தொடர்பு பட்ட பெயர் புலிக்குறவன். இல்லை புகலிடத்தில் இருக்கும் ஒரு குழந்தையைப் போல் கேட்கிறோம் 'குறவன் என்றால் என்றால் என்னப்பா?'



நீங்கள் குறவர், வேடர், இருளர் இவர்களாயிருந்தால் இந்தப் பெயர் மனதில் வந்திராது. நீங்கள் நாகரிகம் அடைந்தவர்களாயிற்றே!!

கதையென்றால் தலித்தை அவனென்றும் மேற்சாதியினரை அவரென்றும் தான் கூற முடியும் என்கிறார் தேனீ நிருபர். இது என்ன தர்க்கம்? யார் வைத்த கதை எழுதும் விதி? இன்றைய தலித் வாழ்வு முறைமை குறித்துத் தேனீ நிருபருக்கு ஒரு மண்ணாங்கட்டியும் விளங்கவில்லை. நயினார் என்று இப்போது எங்காவது யாராவது ஒரு தலித் மேற்சாதியொருவனை விளிக்கிறாரா? நாங்களும் தலித் இலக்கியம் எழுதுகிறோம் என மேற்சாதி எழுத்தாளர்கள் புறப்பட்டால் எப்படியிருக்கும்????? தேனீயின் கற்பனைப் பேட்டி மாதிரியிருக்கும்!

எப்படி முயன்றும் கட்டுரையில் கற்பனைப்பேட்டியில் சமாதானமாக முடியவில்லைத் தோழரே. இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் வந்தால் தான் திடீர் திருப்பமும் கிளைமக்சும் தெரியும்.

Sri Rangan said...

//யாரும் யாரிடமும் மன்னிப்புக் கோரவும் மன்னிக்கவும் முடிந்து போகிற பிரச்சினையல்ல சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும். நமது சமூக அமைப்பு ஒரு சாதிய அமைப்பு. அதன் கொடூரம் அதற்குள் படும் அவமானங்கள் எல்லாம் அதற்குள் இருந்து வந்திருந்தால் மண்டையில் உறைத்திருக்கும்.திடீர் பேட்டி, திகில் பேட்டி என்ற எதிர்வினைகளிலோ திடீர் கவன ஈர்ப்பிலோ இதை எதிர் கொள்வது சிக்கலானது. அப்படியான அவமானங்களையும் கொடூரத்தையும் அனுபவித்தவன் என்ற வரையில் நானும் எனது மூதாதையரும் அனுபவித்த அவமானங்கள் தோல்விகள் போராட்டங்கள் இவற்றைத் தலித்தாக இருக்கும் ஒருவரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியம். 'கறுப்பனின் கண்ணில் இருக்கும் கோபத்தை இன்னொரு கறுப்பன் மட்டுமே புரிந்துகொள்வான்' //


இக் கருத்தோடு முழுமையாக உடன்படுகிறேன்!சுகன் சொல்வது மிகவும் ஏற்கக்கூடியது.

Anonymous said...

தம்பி சுகன் சோபாசக்தி
நீங்கள் பேசிற தலித்தியம் மண்ணாங்கட்டி எனக்கோ அல;லது என்போன்றவா;களுக்கோ உடன்பாடில்லை.
நாங்கள் அனுபவிச்சது மாதிரி நீங்கள் அனுபவிச்சிருக்கமுடியாது. இங்க வெளிநாட்டில எல்லாம் மறந்து நாங்கள் சந்தேசமாய் இருக்க நீங்கள் விடுகிறியள் இல்லை . திரும்பத்திரும்ப தோண்டி எங்கள வலிக்கச்செய்யிறியள். எங்களுக்கு இந்தநாடுகள் போதும். ீஙகள் வேணுமெண்டால் தமிழீழத்தில போய் கதையுங்கோ

Anonymous said...

புலிகளை இழிவுபடுத்தி எழுவது என்றால் எழுதுவதுதானே அதற்கு, எதற்க்கு முடிவெட்டும் இனமக்களை இழிவுபடுத்தவேண்டும். உங்களுக்கு வேண்டும் என்றால் இது நகச்சுவையாக இருக்கலாம், அவர்களுக்கு.

Anonymous said...

"தாம் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு"-

Anonymous said...

சுகன் இதனை ஆராய்ந்து பதில் தருவீர்களா?

~~மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டமான உறவுகளில் தவிர்க்கமுடியாத வகையில் ஈடுபடுகின்றார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும் அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளின் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும். இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக> அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம்> அரசியல் என்ற மேற்கட்டம் எழுப்பப்பட்டு> அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன.
பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக> அரசியல்> அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கின்றது. மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை> அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கின்றது.
வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில்> சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கு இருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு- அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்தூpமை உறவுகளோடு- இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறி விடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.
பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள்> அந்த மாபெரும் மேற்கட்டடம் முழுவதையுமே சீக்கிரமாகவே அல்லது சற்றுத் தாமதமாகவோ மாற்றியமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கின்ற பொழுது உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகின்ற பொருள்வகை மாற்றங்களுக்கும் (இயற்கை விஞ்ஞானத்தைப் போல இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்) சட்டம்> அரசியல்> கலைத்துறை அல்லது தத்துவஞானத் துறைகளில்- சுருக்கமாகச் சொல்வதென்றால் சித்தாந்தத்துறைகளில்- இந்தப் போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து கொண்டு அதில் இறுதி முடிவுக்காகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும்.
ஓரு தனிநபர் தன்னைப் என்ன நிலைக்கிறார் என்பதைக் கொண்டு நாம் அவரைப் பற்றி முடிவு செய்வதில்லை. அது போலவே இப்படி மாறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தை அதன் உணர்வைக் கொண்டு முடிவு செய்ய முடியாது. அதற்கு மாறாக> இந்த உணர்வைப் பொருளாயத வாழ்க்கையின் முரண்பாடுகள் மூலமாகவே விளக்க முடியும்.
எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படவில்லை> புதிய> உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக்கூடிய பொருளாயத நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம் தன்னால் சாதிக்க்கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாதபடி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய பொருளாயத நிலைமைகள் முன்பே இடம் பெற்ற பிறகு அல்லது குறைந்த பட்சம் உருவாகிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சினையே தோன்றுகின்றது என்பது அதிக நுணுக்கமாக ஆராயும் பொழுது புலப்படும்.
வரிவான உருவரையில் ஆசிய> பண்டைக்கால> நிலப்பிரபுத்துவ> நவீன முதலாளித்துவ உற்பத்தி முறைகளை சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றத்தைக் குறிக்கின்ற சகாப்தங்கள் என்று குறிப்பிடலாம். முதலாளித்துவ உற்பத்தி முறைதான் உற்பத்தியின் சமூக நிகழ்வில் கடைசி முரணியல் வடிவம்- முரணியல் என்பது தனிப்பட்ட முரணியல் என்ற பொருளில் அல்ல> தனிநபர்களின் ஜீவனோபாயத்தின் சமூக நிலைமைகளிலிருந்து தோன்றும் முரணியலே> ஆனால் முதலாளித்துவ சமூகத்தின் உள்ளே வளர்ந்து கொண்டிருக்கும் உற்பத்திச் சக்திகள் இந்த முரணைத் தீர்ப்பதற்குரிய பொருளாயத நிலைகளையும் உருவாக்குகின்றன. எனவே இந்த சமூக அமைப்போடு மனித சமூகத்தின் வரலாற்றுக்கு முந்திய காலம் முடிவடைகிறது.~~ மார்க்ஸ்

தமிழரங்கம் said...

புலியெதிர்ப்பினூடாக ஒடுக்கப்பட்ட சாதிய மூச்சுகளையே ஒடுக்க அழைக்கின்றனர்
பி.இரயாகரன்
28.06.2006

தேனீ என்ற புலியெதிர்ப்பு இணையத்தில் 'தேசியம் என்றால் அது நான் தான்!" என்ற பெயரில், பிரபாகரனின் கற்பனைப் பேட்டி ஒன்றை தனது அரசியல் உள்ளடகத்தில் உளறியபடி இக்கும்பல் வெளியிட்டுள்ளது. இந்த பேட்டி யாழ் மேலாதிக்க சாதிய சன்னதங்களுடன், ஜனநாயக கட்டவுட்டுடன் கொப்பளித்தது. இதை சுகன் சரியாகவே 'வெள்ளாள ஜனநாயகம்" என்று குறிப்பிட்டு விமர்சித்திருந்தார். ஆதிக்க சாதித்தடிப்புக் கொண்ட அந்த புனைபெயர் ஜனநாயகப் பேர்வழி, மீண்டும் தேனீயில் புலம்பியுள்ளது. சாதிய திமிரெடுத்த அந்த அலுக்கோசு 'என்னை எவரும் மன்னிக்க வேண்டாம்!" என்று தனது உயர்சாதிய உருட்டிப் பிரட்டும் திமிர் புத்தியை மறுபடியும் காட்டியுள்ளது.

புலியெதிர்ப்பை பிரித்துப் போட்டால், அதில் ஒன்று உயர் சாதிய மேலாதிக்கம் தான். இதை அதற்கு பின்னால் காவடியெடுப்போர் அரோகரா போட்டே பாதுகாக்கின்றனர். புலியெதிர்ப்பு அடிப்படையில் யாழ் மேலாதிக்கம் தான். சொந்த தனிப்பட்ட பாதிப்பு சார்ந்து பிரதேசவாதம் பேசிய கருணாவுக்கு, புலியெதிர்ப்பு கும்பல் சாமரை வீசினாலும் சரி வழிபட்டாலும் சரி, யாழ் மேலாதிக்க சாதிய உணர்வை அவர்களின் அரசியல் இழப்பதில்லை. இது போல் யாழ் மேலாதிக்க சமூகத்தின் அனைத்துக் கூறையும் உள்ளடங்கியதே புலியெதிர்ப்பு அரசியல். இதை யாரும் மறுத்து நிறுவ முடியாது. புலிகளை அழிப்பதன் மூலம் புலியெதிர்ப்புக் கும்பலின் அரசியல், சாதிய ஒழிப்பையோ மற்றய சமூக ஒடுக்குமுறையையோ களைந்து விடாது. அவர்கள் புலிகளிடம் அப்படி இந்த யாழ் மேலாதிக்கத்தை கையேந்தி, பாதுகாக்கவே விரும்புகின்றனர். இதுவே உண்மை.

ரீ.பீ.சீ கும்பலோ, தேனீயோ சாதி ஒழிப்பு பற்றி எந்த அக்கறையுமற்றது. அதை பாதுகாக்கின்ற கும்பல் தான் அது. இந்தக் கும்பலின் கூப்பாடு என்பது புலியை எப்படியாவது எந்த வழியிலாவது இழிவுபடுத்துவது தான். அதற்காக சாதிய மேலாதிக்கத்தையும் கூட எடுத்துக் கொண்டு வக்கரிப்பது தான். புலியை ஒழிக்க ஏகாதிபத்தியத்தின் காலை படுத்துக் கிடந்து நக்குவது போல், இலங்கை அரசின் மடியில் ஏறி உட்கார்ந்து உபதேசம் செய்வது போல், சாதியின் படிநிலையின் உச்சியில் ஏறி அமர்ந்து கொண்டு ஊரையும் உலகத்தையும் ஏமாற்ற முனைகின்றனர். தமது சொந்த சமூக இழிவுகளைக் கொண்டு, புலியை இழிவுபடுத்த முனைப்புக் கொள்கின்றனர். தாம் வாழும் சமூகத்தின் சமூக இழிவுகளை எதிர்த்து போராட முடியாது அதை பாதுகாக்கும் நாய்கள், புலிகளின் இழிவைப் பற்றிக் குலைக்கின்றனர். நாங்கள் மீண்டும் தெளிவாகவே கேட்கின்றோம், புலிக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு? சமூகத்தில் காணப்படும் ஒடுக்குமுறைகள் பற்றி புலிகளின் நிலைக்கும், உங்கள் நிலைக்கும் இடையில் என்ன வேறுபாடு? அரசியல் ஆய்வுக் குஞ்சுகளே, பட்டத்தை மட்டும் சூட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றி நக்க வேண்டாம். ஊரையும் உலகத்தையும் உங்கள் கண்ணை மூடி ஏமாற்ற வேண்டாம். இதற்குள் புலியை இழிவுபடுத்த ஒரு கற்பனைப் பேட்டி வேறு.

புலிகள் அரசியல் ரீதியாகவே இழிந்து கிடக்கின்ற நிலையில், அந்த அரசியலை விமர்சிக்க அரசியல் துப்பில்லை. அதே அரசியலைத் தான் இந்தக் கும்பல் கொண்டுள்ளதால், கற்பனையாக தனிநபர் இழிவுகள் முதன்மை பெறுகின்றது. தேனீ ஆசிரியரின் மாற்றுக் கருத்து பற்றி கற்பனை பேட்டி போட்டால் எப்படி இருக்கும். அவர் வார்த்தையில் கூறினால் ' வேறு இணையத்தளங்களில் பிரசுரமாகியிருக்கிறது. இதன் காரணமாக தேனீ அக்கட்டுரையை பிரசுரம் செய்யமாட்டாது என்பதை அறியத்தருகிறோம்." என்று கருத்துச் சுதந்திரத்துக்கே புலிஎதிர்ப்பு வரைவிலக்கணம் வழங்கி புலுடாவிட முடிகின்றது. தேனீ இந்தக் கொள்கையை தனது இணையத்தின் கட்டுரை முழுமைக்கும் கொண்டுள்ளதா எனின், கிடையவே கிடையாது. புலிகள் என்ன இதற்கு விதிவிலக்கா! பிறகு ஏன் புலியைப்பற்றி அலட்டுகிறீர்கள். கற்பனையான பேட்டி வேறு. உங்கள் வண்டவாளங்களையே நீங்கள் பேட்டியெடுத்துப் போட்டுப் பாருங்கள். உங்கள் குருவும், வழிகாட்டியுமான ரீ.பீ.சீ ராம்ராஜ் ஒரு சமூக கிரிமினலாக, புலிகளின் தலையீடு இன்றி கம்பி எண்ணுகின்றானே, அந்த பொறுக்கி பேர் வழிபற்றி ஒரு பேட்டி, ஒரு செய்தி நேர்மையாக போடுங்களேன். ஊருக்கு உபதேசம் எனக்கு இல்லை என்ற கயவாளித்தனமே, புலியெதிர்ப்பு நக்குத்தனமாக இங்கு கொப்பளிக்கின்றது.

இந்தக் கும்பல் தான் சாதியத்தை புலியெதிர்ப்புக்கு பயன்படுத்துகின்றது. அதாவது அரசியல் அற்றுப் போன புலியெதிர்ப்பு, இயல்பாகவே சாதிய மேலாண்மையை அடிப்படையாக கொண்டு ஒடுக்கப்பட்ட சாதிகளிளை இழிவுபடுத்தி, ஜனநாயகத்தை இழிவாடி ஜனநாயகப்படுத்துகின்றனராம். இந்தக் கும்பல் அரசியலற்ற சாதிய வக்கிரம் கொப்பளிக்க, பன்றியைப் போல் எப்படி சாக்கடையில் புரண்டெழுகின்றது எனப் பார்ப்போம்.

'புலிகளின் புலனாய்வுத்துறையினர் குறிப்பிட்டிருந்த இடத்திற்குப் புறப்பட்டபோது நடந்த சம்பவங்கள் அவரது நினைவுக்கு வந்து அவரை ஆத்திரமூட்டுகின்றன.

அவர் காலையில் மனைவியிடம் சொல்லிவிட்டு புறப்பட்டபோது குழந்தையன் எதிரே வந்திருந்தான். புலிக்குறவனின் தந்தையின் காலத்திலிருந்து அவர்களுக்கு தலைமுடிவெட்டி வந்தவன் குழந்தையன். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக அவனது பிள்ளைகள் இருவர் புலிகளில் சேர்ந்ததைத் தொடர்ந்து குழந்தையன் தனது பரம்பரைத் தொழிலைக் கைவிட்டுவிட்டான். புலிக்குறவனும் ~சவக்குரல்| பத்திரிகையில் நிருபராக நுழைந்து கொழும்புக்குச் சென்றதனால் குழந்தையனை சந்திக்கும் சந்தர்ப்பங்கள் அவருக்கு ஏற்படவில்லை. குழந்தையனின் பிள்ளைகள் புலிகள் இயக்கத்தில் சேர்ந்ததைத் தொடர்ந்து குழந்தையனுக்கு ஊரில் மரியாதை கூடியிருந்தது புலிக்குறவனுக்கு நீண்ட காலமாகவே எரிச்சலாக இருந்தது. புலிக்குறவன் பெரும்பாலும் கொழும்பிலேயே இருந்திருந்தாலும் அவரது மனைவியும் ஆறு பிள்ளைகளும் ஊரிலேயே இருந்தார்கள். மனைவி அவரிற்குக் கடிதங்கள் எழுதும்போது இடைக்கிடையே குழந்தையனைப் பற்றி கோள்சொல்லி அவரது எரிச்சலை அதிகரித்திருந்தாள். 'றோட்டுவழியிலை கண்டால் தெரியாதமாதிரி போறான். பிக்அப்பிலை எல்லாம் போறான். பெடியள் பெரிய நடப்பிலை துவக்குகளோடை திரியிறாங்கள்" என அவரது மனைவி எழுதியிருந்த குற்றச்சாட்டுகளும் ஒவ்வொன்றாக அவரது நினைவுக்கு வந்தன." என்ன நினைவுகள். சாதிய நினைவுகள். எப்படி நாம் நமது காலுக்கு கீழ் அடக்கியாண்ட இந்த இழிந்த சாதிகள், நாசமறுத்த புலிகளால் இப்படி திரியுதுகள் என்ற சாதித் திமிரே கெக்கலிக்கின்றது.

புலியெதிர்ப்பின் சாதித் தடிப்பு. வரக் கூடாத இடத்தில், புலியெதிர்ப்பாக வக்கரித்து வருகின்றது. இதில் 'குழந்தையன்" என்பதே யாழ் மேலாதிக்கம் வலிந்து இழிந்த சாதி பிரிவுகளுக்கு வைக்கும் சாதியப் பெயர் தான். 'பரம்பரைத் தொழிலைக் கைவிட்டுவிட்ட" சாதிய அங்கலாய்ப்பு. ' குழந்தையனுக்கு ஊரில மரியாதை கூடியிருந்த" என்ற சாதிய எரிச்சல். 'றோட்டுவழியிலை கண்டால் தெரியாதமாதிரி போறான்" என்ற அடக்குமுறை வெறிகொண்ட சாதியம் கொப்பளிக்கின்றது. கைகட்டி சேவகம் செய்த 'இழிந்த நாய்கள" இப்படி திமிரெடுத்து திரிவது கண்ட சாதியச் சினம், எரிச்சலாக வெட்காரமாக கொப்பளிக்கின்றது. யாழ் மேலாண்மை பயன்படுத்தும் உயர்தர வாழ்வை பறைசாற்றும் 'பிக்அப்பிலை எல்லாம் போறான்"கள் என்ற சாதிய திமிரெடுத்த தினவெடுப்பு புலம்பலாக வருகின்றது.

பாட்டாளி வர்க்க புரட்சி நடக்கும் போது அங்கு சாதி ஒழிப்பு நடக்கும். அப்போது இந்த மேல்தட்டு உயர்சாதிய வர்க்கம், இப்படித் தான் அதை கேவலப்படுத்தி பழைய தங்கள் சாதிய சொர்க்கத்தைக் கோரும். சாதியை பாதுகாக்கும் புலிக்கு எதிராகவே, புலியெதிர்ப்பு வக்கிரம் சாதியத்யையும் புலிக்கு எதிராக மாற்றி அதன் மேலாண்மையை தனது கையில் எடுக்கின்றது. இதை அழகாகவே குறித்த சாதியமான் எடுத்துள்ளார்.

இந்து மதம் ஒழுகிய, சாதியம் விதித்த குடிமைத் தொழில் செய்யும் குழந்தையன் பற்றிய பார்வை, புலியெதிர்ப்பின் வெட்டுமுகம் தான். ரீ.பீ.சீ திடீர் தயாரிப்பாக வந்து, ரீ.பீ.சீ யையே கைப்பற்றிய ஜெயதேவனின் வாழ்வு, சாதிய இந்துமதத்தின் புரோகிதக் கும்பலாக ஒரு சாதிய கோயிலைக் கட்டி, அங்கும் ஜனநாயக அரசியல் விபச்சாரம் செய்கின்றார். இந்துக் கோயில் ஆச்சாரங்கள் அனைத்தும் சாதிய அடிப்படையிலானதே. பிறப்பால் சாதியாக பிறந்த பார்ப்பான் தாழ்ந்த சாதிகளுக்கு வழிகாட்டுகின்றான். சாதியில் பார்ப்பானாக பிறந்தவன் எமக்கு சாதிக் கடவுளைக் காட்டிப் ப+சை செய்கின்றான். அந்த கடவுளின் சாதிய ஒழுங்கை பாதுகாக்கும் ஜெயதேவன் அன்ட் விவேகானந்தன் கும்பல் தான் புலியெதிர்ப்பின் தலைமைக் குருமாராக உள்ளனர்.

இந்துமதத்தின் ஜனநாயகம் எப்படிப்பட்டது. எனது ஒரு சில கட்டுரையில் இருந்து.

1.மனுவுக்கும், கௌடில்யர் காலத்துக்கும் இடையிலான ஆணாதிக்க வளர்ச்சியை ஒப்பிடல்

2.இந்து ஆணாதிக்க பார்ப்பனியத்தில், சாதி வடிவில் இறுகிய குடும்பத் தன்மைகள்

3.ஆணாதிக்க இந்து மதமும் பெண்ணும்

4.இந்து மதத்தில் ஆண் பெண்ணின் வக்கரித்த உறவுகள்

இவர்கள் தான் பாசிச புலியை ஒழித்து, சாதிய ஜனநாயகத்தை நிலைநாட்ட முனைகின்றனர். இந்தியா முதல் இலங்கை வரை சென்று மக்களின் எதிரிகளை தொட்டுக் கும்பிட்டு, பிரசாதம் வாங்கி உண்ணும் இந்த மக்கள் விரோத ஒட்டூண்ணிகளின் ஜனநாயகமோ புல்லரிக்க வைக்கின்றது. இந்த புல்லுரூவி வர்க்கம் பேசும் ஜனநாயகத்தை, தமிழ் மக்களின் முதுகில் சுமத்திதிவிடவே ஐயர்மார் முனைகின்றனர். ஐயா நீங்கள் போற்றும் இந்து மதமே ஜனநாயக விரோதமானது. அதை பாதுகாத்தபடி, ஜனநாயகத்தை மீட்பதாக தம்பட்டம் அடிப்பது எதற்காக? பிரிட்டிஸ் அரசின் துதிபாடிகளாக இருந்தபடி, அவர்களின் கால் தூசை நக்கிக் கொண்டு தமிழ் மக்களை மொட்டையடிக்கவே விரும்புகின்றனர்.

உங்கள் கும்பலே இப்படி ஊரறிய இருக்க, நீங்கள் சொல்லுகின்றீர்கள் நாங்கள் அப்படி வக்கரிப்பதில்லை என்கின்றீர்கள். 'குழந்தையன் ~பிக்அப்|பில் போவதை புலிக்குறவனின் மனைவி பார்த்து பொருமுவதாக கற்பிதம் செய்யப்பட்டதும், தேசிய தலைவரின் ஆயுத அரசியலால் சாதிய பிரச்சினை காலாவதியாகிப் போய்விடவில்லை என்று காட்டுவதற்கே. பேட்டி காணச் சென்றவரன்றி, பேட்டியளித்தவரும் பெரும்பாலான கேள்விகள் கேட்பவராக காட்டப்பட்டதும் ~புலி|குறவனை (புலிகளின் உறவுகளை) அம்பலப்படுத்துவதற்கே." ஆகாகா என்ன அருமையான வாதம். நிதர்சனம் டொட் கொம் உங்களிடம் கையேந்தி பிச்சை எடுக்க வேண்டும். சுத்துமாத்துக்கே பெயர் போனவர்களின் அரசியல் இருமை இங்கு வெளிப்படுகின்றது. கருத்துச் சுதந்திரம் பற்றி தேனீ ஆசிரியரின் நவீன கண்டுபிடிப்பு போல், இது உலகப் புகழ் பெற்றது.

மனைவியின் பெயரில் கற்பிக்கின்றாராம். என்ன உளறல். அப்படியாயின் இது நீங்கள் பாதுகாக்கும், உங்கள் யாழ் மேலாதிக்க சமூகத்தின் ஒரு உண்மையில்லையா? முரண்பாடாக எதற்கு உளறுகின்றீர்கள்? புலிகள் அமைப்பில் இது நீடிக்கின்றது என்றால், உங்கள் புலியெதிர்ப்பில் நீடிக்காதோ? எப்படி?

உண்மையில் புலிகளையும், புலித் தலைமையையும் அம்பலப்படுத்த முனைபவர் எதனுடாக பயணிக்கின்றார் என்றால், ஆதிக்க சாதிய மேலாண்மைக் கூடாகவே. புலித்தலைமையை அம்பலப்படுத்த இன்னுமொரு சமூக ஒடுக்குமுறை உதவுகின்றது என்ற அரசியல் உள்ளடக்கம் இங்கு மறுபடியும் வெட்டவெளிச்சமாகின்றது. இதேபோன்று தான் ஏகாதிபத்தியத்தின் கால்களின் கீழ் மண்டியிட்டு தவழுகின்றார்கள். இந்த புலியெதிர்ப்பு அரசியல் தான், ஜனநாயகம் என்ற பெயரில் சமூக முரண்பாடுகளை தீர்க்க மறுத்து எதிர்புரட்சிகர அரசியல் பாத்திரத்தை வகிக்கின்றது. இதுவே புலியெதிர்ப்பு கும்பலுக்கும் எமக்குமான அடிப்படை அரசியல் முரண்பாடாகும். எமது விமர்சனம் இதற்குள் தான் அமைகின்றது. இதுவே புலியுடனான எமது முரண்பாடும் கூட. புலிகள் ஜனநாயகத்தை ஏன் மறுக்கின்றார்கள்? புலிகளுக்கும் மக்களுக்குமான முரண்பாடு என்ன? இதை அறிவுப+ர்வமாக கேட்டுத் தெளிவுறும் போது, எமது விமர்சனத்தின் உள்ளடக்கமே தெளிவாக சரியாக இருப்பதை உறுதி செய்யும். புலிகள் என் ஜனநாயகத்தை மறுக்கின்றனரோ அந்தக் காரணத்தை புலியெதிர்ப்பு கும்பல் மறுப்பதால் தான், ஜனநாயகத்தை திரித்து எதிர்புரட்சிகரமாக மாற்றி சாதியமாகவும் கொப்பளிக்கின்றது.

ஜனநாயகம் என்பது சமூக ஒடுக்குமுறை அனைத்தையும் களைவதை அடிப்படையாக கொண்டது. இதைக் களையாத ஜனநாயகம் என்பதில் உண்மைகள் எதுவும் இல்லை. இதைக் களையாத தேசியம் என்பதும் போலியானது. இவைகளை புலிகள் களைய மறுப்பதால் ஏற்படும் முரண்பாட்டை பாசிச நடத்தைகள் மூலம் கட்டுப்படுத்த முனைகின்றனர். இதையே புலியெதிர்ப்புக் கும்பலும் செய்கின்றது. இவர்களின் புலியெதிர்ப்பு அரசியல் வங்குரோத்தால், அரசியல் ரீதியாக தலைவரிடம் பேட்டி காணமுடியாது போகின்றது. புலியெதிர்ப்பு தான், இவர்களின் உச்சபட்ச அரசியல். இவர்கள் தலைவரிடம் சாதியை எப்படி ஒழிப்பீர்கள் என்று கேட்ட முடியாது. அதுவே உங்களிடமும் கிடையாது. ஆணாதிக்கத்தை எப்படி ஒழிப்பீர்கள் என்று கேட்க முடியாது. அதுவும் உங்களிடம் கிடையாது.

தேசியம் என்றால் என்ன என்று உங்களால் கேட்ட முடிந்த போதும், பதில் சொன்ன நீங்கள் அதற்கு மாற்று என்ன என்று கேட்டால் பதில் சொல்லமுடியாது. புலியெதிர்ப்பு அணி தேசியத்தை ஒழிக்க வேண்டும் என்கின்றது. நீங்கள் தேசியத்தை புரிந்த விதமே, அங்கு பதிலாக வருகின்றது. தேசியத்தை புலியாக, புலித்தலைவராக புரிந்து அதை ஒழிக்கவே கோருகின்றீர்கள். புலிகள் தேசியத்தை எப்படி புரிந்தார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும், நீங்கள் எப்படி புரிந்துள்ளீர்களோ, அப்படியே அதை பதிலாகச் சொல்லி அதை ஒழிக்க கோருகின்றீர்கள். நல்ல வேடிக்கைதான். 'தேசியம் என்றால் அது நான் தான்!" என்ற பிரபாகரன் கூறுவதாக கூறுவது தேசியம் பற்றி உங்கள் நிலைப்பாடாகும். தலைவரைத் தாண்டி உங்களாலும் சிந்திக்க முடியாது என்ற உங்கள் இழிவை இந்த பேட்டி எடுத்துக் காட்டுகின்றது. புலிகளுக்கு மாற்றாக மக்கள் நலன் கொண்ட தேசியத்தை, புலியெதிர்ப்புக் கும்பலால் முன்வைக்க முடியாது. உண்மையில் புலித் தலைவர் நினைப்பதாக நீங்கள் கூறும் தேசியத்தைத் தாண்டி, உங்களால் மாற்றுத் தேசியத்தை வைக்கமுடியுமா? அதை முன்னிறுத்தி புலியெதிர்ப்பு அரசியல் செய்ய முடியுமா? முடியாது.?

பேரினவாதத்தை எதிர்த்து நீங்கள் அசையமறுப்பதன் உள்ளடக்கம் இது தான். வெள்ளாடு போல் ஒடியோடிக் கடிக்க மட்டுமே செய்வீர்கள். 25.06.2006 அன்று புலியெதிர்ப்பு ரீ.பீ.சீ யில் தேனீ ஆசிரியர், இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை வைக்க வேண்டும் என்று ஓடியோடிக் கடிக்கின்றார். எம்மிடம் இருந்து அக்கருத்தை பொறுக்கி மேயும் இவர்கள், அதை அரசிடம் முன்னிலைப்படுத்தி பிரதானப்படுத்தி போராட மறுக்கும் இவர்கள், தமிழ் மக்களுக்கு எப்படி வழிகாட்ட முனைகின்றனர். இலங்கை அரசே தமிழ் மக்களின் பிரதான முதன்மை எதிரி என்பதை மறுத்து, அன்றே ரீ.பீ.சீயில் முன்னைய கருத்துக்கு முரண்பாடாகவே புலம்ப முடிகின்றது. பெயர் குறிப்பிடாது எம்மைத் தாக்கும் அவர், இலங்கை அரசே பிரதான எதிரி என்றால் புலியின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் சென்று வேலை செய்யாமல் இங்கு ஐரோப்பாவில் ஏன் இருக்கின்றனர் என்று பொருமுகின்றார். ஐயா புண்ணியவானே அரசு பிரதான எதிரியில்லை என்றால், நீங்கள் புலிக் கட்டுப்பாடு அல்லாத அரசு கட்டுப்பாட்டு பிரதேசத்தில் தேனீயை நடத்தலாமே. ஊருக்கு உபதேசம் எனக்கில்லை என்ற பழமொழி தான் இங்கு பொருந்துகின்றது.

இதே நாளில் டி.சே.தமிழனால் தமிழ்மணத்தில் 'இணையத்துப் பிசாசு எனக்கு இரண்டு சாத்துப் போட்ட கதை" என்ற தலைப்பில் (இக்கட்டுரை பின்னால் அகற்றப்பட்டுவிட்டது.) எழுதிய போது, அந்தப் பிசாசு (பிசாசு என்று என்னைக் கூறுகின்றார்) இலங்கையில் சென்று இதைச் செய்யலாமே என்று கூறுகின்றது. புலி, புலியெதிர்ப்பு என அனைவரும் ஒற்றுமையாக ஒன்றையே செய்ய முனைகின்றனர். விமர்சனத்தை விமர்சனமாக எதிர்கொள்ள வக்கற்று, அதை இலங்கையில் செய்யக் கோருகின்றனர். இதன் மூலம் விமர்சனம் செய்யக் கூடிய சூழலை மறுதலிக்கவே இவர்கள் மனதார விரும்புகின்றனர். இதன் மூலம் தமது பொய்மையையும், இருமையையும் விமர்சனமின்றி பாதுகாக்க விரும்புகின்றனர்.

இதேபோல் 25.06.2006 அன்று ரீ.பீ.சீயில் ஜெகநாதன் என்ற புலியெதிர்ப்பு ஏகாதிபத்திய தூசு துடைக்கும் கற்றுக்குட்டி அன்று புலம்பத்தவறவில்லை. தேடகம் பற்றி தமது அரசியல் வம்புத்தனத்தில், அன்றே தேடகம் புலிக்கு ஆதரவாக செயற்பட்டது என்று புலியெதிர்ப்பு கனடா குஞ்சு ஒன்று உளறியது. உடனே ஜெகநாதன் இங்கு தூண்டில் மனிதம் போன்றவையும் புலிக்கு ஆதரவாக செயற்பட்டது என்றார். தம் போன்ற புலியெதிர்ப்புக் கும்பலின் நடத்தைகளை முடக்கியவர்கள் என்றார். உண்மைதான். அன்று கொலைகார இயக்கங்களின் மக்கள் விரோதத்தை எதிர்த்து போராடியபோது பலர் கொல்லப்பட்ட நிலையில், அதில் தப்பியவர்களே தூண்டில் மற்றும் மனிதம் போன்றவற்றை ஆரம்பித்தவர்கள். அவர்களின் போராட்டத்தை கண்டு தான் ஜெகநாதன் இப்படிக் குமுறி வெடிக்கின்றார்.

இந்த சஞ்சிகைள் மீதான எமது அரசியல் விமர்சனங்கள் பல நாம் முன்பே எழுதியுள்ளோம். ஆனால் அவர்கள் மனிதத்தை நேசித்தவர்கள். மனிதத்தை முன்னிலைப்படுத்தி பின்னால் படிப்படியாக சீரழிந்தவர்கள். மனிதம் பற்றி அவர்களின் நிலையையோ, தேடகத்தை கொச்சைப் படுத்துவதையும் விபச்சாரம் செய்வதையோ நாம் அனுமதிக்க முடியாது. கடந்தகால தேடகம் பற்றிய தேனீயின் அவதூற்றில், நிதர்சனத்துக்கு நிகராக வக்கரித்து புலியெதிர்ப்புக் கும்பல் காவடியெடுப்பது அம்பலமாகின்றது. அதை சுகன் தெளிவாகவே தனது பதிவொன்றில் அம்பலம் செய்கின்றார். 'கனடா தேடகத்தில் நடந்ததென்ன? என்றொரு கட்டுரை தேனீயில் வந்ததைப் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு வரி வருகிறது... 'தண்ணி ப்புளு பிலிம் சரக்கு ...மற்றவன் பெண்டாட்டி இவையெல்லாம் தேடகத்திற்கு" என்று வரும். இவை கனடாவில் மாற்றுக் கருத்துக்காகப் போராடிய உழைத்த தோழர்களின் முயற்சிகளை கொச்சைப்படுத்தல் இல்லையா? அவர்களின் ஆரம்பகால நடவடிக்கைகளின் மேல் மலத்தை அள்ளி வீசவில்லையா? நிதர்சனம் சேதுவிற்கும் இதற்கும் என்ன வேறுபாடு? தேடகம் இயங்கி வந்த மண்டபத்துக்கு வாடகை செலுத்துவதற்காகவே வேலைக்குப் போய் வந்து சம்பளப் பணத்தில் வாடகையை நீண்ட காலமாகவே செலுத்தி வந்த தோழர் குமரனை தேனீ கட்டுரையாளர் அறியமாட்டாரா? இப்படியான நேரங்களில் யாரைக் கொண்டு போய் யாரிடம் விற்கிறோம் என்ற புரிதல் தேவை. பக்குவம் தேவை. நமது தோழர்கள் அவர்கள்."

சுகன் சுட்டிக் காட்டியது போல் நீங்கள் செய்யும் அரசியல் அவதூறுகள் எதுவும், மக்களின் உண்மைக்காக அவர்களின் வாழ்வுக்காக போராடிய வரலாற்றுக்கு முன்னால் ஒருநாளும் எடுபடாது. இன்று தேடகத்தின் நிலை பற்றி, இன்னமும் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கடந்தகாலத்தை கொச்சைப்படுத்தும் இவர்கள் யார்? முன்பு உண்மையாக மக்களின் ஜனநாயகத்துக்காக போரடியவர்களை கொன்ற போது, அதற்கு பக்க துணையாக நின்றவர்களும் அதை ஆதரித்தவர்களும் தான், இன்று கணிசமான புலியெதிர்ப்பு ஜனநாயகவாதிகளாக உள்ளனர். புலியெதிர்ப்பின் பின்னுள்ள பலர் அப்பாவிகள். அவர்களை அமர்த்தி வைத்து புலியெதிர்ப்புக் கும்பல் தீத்த முனைகின்றது. மாற்றுக் கருத்துகளை அவர்கள் படிக்காத வண்ணம் தீவிரமான அக்கறையுடன் அதை ஓடுக்குகின்றனர். மக்கள் கருத்தை அவர்கள் தெரிந்து கொள்ளும் போது, இந்த அப்பாவிகள் உங்களைவிட்டே விலகிவிடுவர்.

இந்த நிலையில் நீங்கள் உளறுவதும், புலம்பவதும் நடுச் சந்தியில் நிர்வாணமாகின்றது. இப்படி நீங்கள் இருக்கக் கூடியதாகவே, புலிகளின் தலைவர் உளறுவதாக காட்டுவதன் அர்த்தம் என்ன? உண்மையில் நீங்கள் அரசியலற்ற வெற்றிடத்தில் உளறுவதைக் காட்டுகின்றது. நீங்கள் போற்றும் பிரிட்டிஸ் பிரதமர் பிளையரும், அமெரிக்கா ஜனாதிபதி புஸ்சும் கூடத்தான் உளறுகின்றனர். அல்லது நீங்கள் போற்றும் ஜே.வி.பி, இன்றைய ஜனாதிபதி ராஜபக்சாவும் கூடத்தான் மக்களை ஏமாற்றி உளறுகின்றார்கள். பயங்கரவாதம் பற்றி நீங்களும் அவர்களும் சேர்ந்து உளறவில்லையா? பயங்கரவாதத்தையே அடிப்படையாகக் கொண்ட இந்த ஜனநாயகம், அதைக் கொண்டு மக்களையே அடக்கியாளும் இந்த பயங்கரவாத அமைப்பை பூசி மெழுகி, பயங்கரவாதம் பற்றி கூட்டாக அரை மக்குகளாகவே உளறுகின்றீர்களே இது உங்களுக்கு தெரிவதில்லையா.

உதாரணமாக 22.06.2006 புலியெதிர்ப்பு ரீ.பீ.சீ கும்பல் நடத்திய புலியெதிர்ப்பு அரசியல் விவாதத்தில் கார்த்திக் (அவரை நான் சொந்தப் பெயரிலும் அறிவேன்) வைத்த, யாழ் மேலாதிக்க சாதிய அமைப்பு பற்றிய கருத்தை, அடுத்து வந்த அருள்நேசன் (பெயர் சரி என்று நம்புகின்றேன் தவறு என்றால் மன்னிக்கவும்) அதற்கு எதிராக கதைத்து புலியெதிர்ப்பை சரியாக வரையறுத்துக் காட்ட முனைந்தார். இடதுசாரி வேஷம் போட்டு அரசியல் ஆய்வு நடத்தும் சிவலிங்கம், அதைத் திருத்தி தமது சொந்த அரசியல் மோசடியை நியாயப்படுத்த முனைந்தார். அடுத்து வந்தவரும் அதையே செய்ய முனைந்தார். கோமாளித்தனமாக கூத்தாடியாக தம்மை நியாயப்படுத்தி உலகத்தையே ஏமாற்ற முனைகின்றனர். கோட்பாடும் கொள்கையுமற்ற புலியெதிர்ப்புக் கோட்பாடு, உண்மையில் அருள்நேசனால் வைக்கப்பட்ட உயர்சாதி யாழ் மேலாதிக்க கருத்துத் தளம் தான். அதாவது மேலாதிக்கம் பெற்று இருக்கின்ற சமூக போக்குகு தான் புலியெதிர்ப்பின் மாற்றீடு என்கின்றார். புலிகளின் தலைவர் உளறுகின்றாரோ இல்லையோ, புலியெதிர்புக் கும்பல் ஊரையும் உலகத்தையும் ஏமாற்ற உளறுகின்றது. தமக்கு என்று எந்த கொள்கையுமற்ற கூலிக் கும்பல் தான், சாதி ஒழிப்பும் புலியெதிர்ப்பின் ஒரு அங்கம் என்று நிலைமைக்கு சந்தர்ப்பத்துக்கும் ஏற்ப நடித்துக்காட்ட முனைகின்றனர்.

புலிகள் என்ற இயக்கம் இயல்பான யாழ் மேலாதிக்க சாதிய இயக்கம் தான். இந்த புலியை ஒழிக்க விரும்பும் ஏகாதிபத்திய கைக்கூலிகள். ஏகாதிபத்தியத்துக்காக மாடாய் விசுவாசமாக வாலாட்டி உழைக்கும் இவர்கள், இயல்பான ஆதிக்கம் பெற்ற யாழ் மேலாதிக்கத்தையே தாங்கி நிற்கின்றனர். இதை மறுத்து யாரும் சுண்டு விரலைக் கூட அசைக்க முடியாது. புலித் தலைவரை பேட்டி கண்டு கிண்டலடிக்க விரும்பிய புலியெதிர்ப்பு நபர், இந்த சாதிய மேலாதிக்கத்தை பயன்படுத்துவதில் கூட விதிவிலக்காக இருக்கவில்லை. இங்கு குழந்தையன் தமிழ்செல்வனின் தந்தையாக காட்டப்படுகின்றது. இந்தச் சாதிய வக்கிரம், புலி எதிர்ப்பு அரசியலை பலப்படுத்துகின்றது. சாதியத்தின் அடிப்படையாக கிராமப்புற நிலப்பிரத்துவ அடிமை ஒழுங்கு குலைவதைக் கண்டு, பேட்டி கண்டவரும் (கட்டுரையாளர் தான் அவர்) அவரின் மனைவியும் குமுறுவது படுபிற்போக்கானது. கிராமப்புற சாதிய ஒழுங்குகள் சிதைந்து போவது இங்கு முற்போக்கானது. அதை இந்த பேட்டி ஊடாகவும் மீண்டும் புலியெதிர்ப்பு மறுதலிக்கின்றது. ஒடுக்கபட்ட சாதி நபர்கள் ஆயுதம் ஏந்தியதால், அவர்களின் மதிப்பு ஊரில் ('குழந்தையனுக்கு ஊரில் மரியாதை") உயருகின்றது என்ற கருத்தும், அதற்கு எதிராக இதை எழுத்தியவர்pன் எரிச்சலும் ('புலிக்குறவனுக்கு நீண்ட காலமாகவே எரிச்சலாக இருந்தது") அப்பட்டமாக மனைவியின் (இங்கு ஒரு பெண்ணின் பெயரால்) பெயரால் (' குழந்தையனைப்பற்றி கோள்சொல்லி அவரது எரிச்சலை அதிகரித்திருந்தாள்") கூறி, அதை சாதியத்தின் மொழியில் கூறுவது அம்பலமாகின்றது. சாதிய தடிப்பின் இறுமாப்பை, வளைந்து கொடுக்க மறுக்கும் சாதியத் திமிரை, புலியெதிர்ப்பு அடிப்படையாக கொண்டதை மீண்டும் இது உறுதி செய்து காட்டுகின்றது.

பார்ப்பன இந்து சாதியக் கோயிலை வைத்துள்ள புலியெதிர்ப்பு தலைமைப் ப+சாரியான ஜெயதேவனின் அண்ணன் பயல் கூட, இப்படித் தான் புலியை ஆய்வு செய்து விமர்சித்தார். புலியின் இன்றைய நிலைக்கு இந்த ஆதிக்க சாதி வெறியன் இயக்கத்தில் உள்ள இழிந்த சாதிகளான பள்ளுப்பறைகளும், அம்பட்டன் போன்றோருமே காரணம் என்கின்றார். குறித்த தேனீ உயர்சாதிய நிருபர், பரம்பரைத் தொழிலை கைவிட்டமையை எரிச்சலுடன் நோக்குவதும், குமைவதன் மூலம், புலிகள் அம்பட்டரின் குடிமைத் தொழிலை வீடுதோறும் சென்று செய்வதை தடை செய்ததை எதிர்த்து இது வெளிவருகின்றது. இங்கு புலிகள் ஏன் செய்தார்கள் என்பதைவிடுத்து, அவர்கள் மீண்டும் வெள்ளாள வீடுகள் தோறும் சென்று பரம்பரைத் தொழிலை செய்ய வேண்டும் என்று புலிக்கு எதிராக புலியெதிர்ப்பு படுபிற்போக்காக தன்னை வெளிப்படுத்தி அரசியல் செய்கின்றது. புலியெதிர்ப்பு விரும்புவது என்ன. அதை அவர்கள் சொல்லிவிடுகின்றனர். 'றோட்டுவழியிலை கண்டால் தெரியாதமாதிரி போறான். பிக்அப்பிலை எல்லாம் போறான்." இதை கண்டு புலியெதிர்ப்புக் குஞ்சு குமுறுகின்றது. இந்த புலிக்கு பதிலாக புலியெதிர்ப்பு எதைக் கோருகின்றது. ரோட்டில் கண்டால் அடிமை குடிமைகளாக கைகட்டி செல்ல வேண்டும். காலில் செருப்பு அணியாது அல்லது தம்மைக் கண்டால் அணிந்ததை கையில் தூக்கிச் செல்ல வேண்டும் என்ற புலியெதிர்ப்புக் கொக்கரிப்பு இதில் கொஞ்சிவிளையாடுகின்றது.

இதைத்தான் 'இப்போது குழந்தையனை கண்டதும் அவருக்கு எரிச்சலே மூண்டது. ~அம்பட்டன் குறுக்கை வந்திட்டான். இனி போற விசயம் அவ்வளவுதான்| என மனதிற்குள் நினைத்துக் கொண்டாலும், குழந்தையனின் பிள்ளைகள் புலிகள் இயக்கத்தில் இருப்பதால் அவர் வாய் திறக்கவில்லை. ~இந்த மூதேவியின்ரை முகத்திலை முழிக்கப்படாது| என நினைத்துக் கொண்டு குழந்தையனைக் கடந்து போக சையிக்கிளில் ஏறி பெடலில் காலை வைத்து அழுத்தினார்." சாதியம் இப்படி புலியெதிர்ப்பாக முகிழ்கின்றது. இவர்தான் புலியில் குழந்தைப் போராளி பற்றி ஏகாதிபத்திய மதிப்பீட்டின் அடிப்படையில் நினைக்கின்றார். தலைவரின் தேசிய சிந்தனை பற்றியும் சிந்திக்க முடிகின்றது. இங்கு அவரின் சிந்தனை என்பது வாழ்வும் சாதியம். தேசியம் பற்றியது புலியெதிர்ப்புக் கும்பலின் கோட்பாடாகும்.

இதனால் தான் '..வரும் வழி முழுவதும் குழந்தையனையும் அவனது சமூகத்தையும் மனதுக்குள் திட்டிக்கொண்டே வந்தார். 'அப்பாடி எல்லாம் நல்லபடியாய் முடிஞ்சிரோனும்" என நல்லூர் முருகனை மனதுக்குள் வேண்டிக் கொண்டார்." உயர்சாதிய கோயில் துணை நிற்க, இழிந்த சாதிகளை திட்டி தீர்த்தபடி கும்பிடுகிறார். ஏன் புலியெதிர்ப்பை அரங்கேற்ற தனக்கு துணையாக நல்லூர் சாதிக் கடவுள் உதவ வேண்டும் என்று இழிந்த சாதிகளைத் திட்டி போற வழியில் நல்வழிகாட்ட உயர்சாதிக் கடவுளை வேண்டிக் கொள்கின்றார். சாதி குறைந்த 'மூதேவியின்ரை முகத்திலை" முழித்திட்டனே கடவுளே, '~அம்பட்டன் குறுக்கை வந்திட்டான். இனி போற விசயம் அவ்வளவுதான்" என்று உயர் சாதி புலியெதிர்ப்பு பேய் தன்னனையும் தனது புலியெதிர்ப்புக் கும்பலையும் உலகுக்கு மறுபடியும் ஒருமுறை நிறுவிக்காட்டியுள்ளது.

இளங்கோ-டிசே said...

இரயாகரன், நான் எழுதிய (அகற்றப்பட்ட) பதிவை ஒழுஙகாய் வாசித்தாரோ அல்லது தனது தத்துவார்த்த அலைச்சலில் திரிக்கின்றாரோ என்று தெரியாதபோதும்....நான் இப்படித்தான் அதில் குறிப்பிடிருந்தேன்...

/மக்களுக்காக அவர்களின் நலனுக்காக உயிரைவிடத் தயாராகவே உள்ளோம். / இது கொஞ்சம் ரூமச்சாய் தெரியவில்லை? நீஙகளோ நானோ வெளிநாட்டுக்கு ஓடிவந்தது உயிரின் மீதான பயத்தால்தான். உங்கள் நலன் மக்களுக்காய் உயிரை விடத்தயாராய் இருந்திருந்தால் நீங்கள் உங்கள் நம்பிக்கையுடன் ஒரு சுபத்திரனைப் போலவோ, டக்ளஸ் தேவானாந்தா போலவோ, சித்தார்த்தன் போல்வோ ஏன் பிரபாகரன் போலவோ சொந்தமண்ணில் இருந்திருக்கவேண்டும் அல்லவா? அதைவிட்டுவிட்டு இப்படி பிரான்சுக்கு ஓடிவந்துவிட்டு, இப்படி எங்களின் காதில் பூச் சுத்துவது நியாயந்தானா?

ஒரு மேடை அரசியல்வாதியின் உணர்ச்சியுடன் எழுதப்பட்ட அந்த வசனத்தைத்தான் கேள்விக்குட்படுத்தியிருந்தேன்.. மற்றும்படி ஈழத்தில் இருந்துகொண்டு மட்டுந்தான் ஈழ அரசிய்ல பேசவேண்டும் என்றால் நானோ, இரயாகரனோ அல்லது புலம்பெயர்ந்த எவரோ ஈழ அரசிய்ல் பேசமுடியாது என்ற எளிய விசயம்கூட விளங்கமுடியாதவன் அல்ல. இரயாகரன் என மீது வைத்த பிற விமர்சனங்களை இப்போதைக்கு கேட்டுக்கொள்கின்றேன் (வாசித்துக்கொள்கின்றேன்). ஏற்றுக்கொள்கின்றேனா அல்லது இல்லையா என்பதை ஆறுதலான ஒரு பொழுதில் உணர்ச்சிவசப்படாமல் எதிர்வினையாற்றுவதன் மூலம் பதிவு செய்துகொள்ள முயல்கின்றேன். நன்றி.

Anonymous said...

ஒரு நண்பர் எனக்கு சத்தியகடதாசி பக்கத்தை அனுப்பியிருந்தார் அதில் சுகன் தேனிபற்றி எழுதிய விமர்சந்த்தை படித்தேன் எனக்கு நீண்டகாலமாக தேனிபற்றி இருந்த கருத்தை சுகன் அழகாக எடுத்துச் சொல்லியுள்ளார் உண்மையில் தேனி இதற்கு மன்னிப்புக்கோர வேண்டும் தேனி படிப்பவர்கள் இதை கண்டிக்கவேண்டும் தேனிக்கு புலி எதிர்ப்பு முக்கியமில்லை தலித்தெதிர்ப்புத்தான் முக்கியமாக தெரிகிறது தனது வெள்ளாளத்திமிரை அப்படியே அபட்டமாக துணிந்து காட்டுவதை நாம் அனுமதிக்க முடியாது இது எல்லோராலும் கண்டிக்கப்பட வேண்டிய விடயம்