விழித்திருப்பவனின் மறுநாள் தோழர் சண்முகலிங்கம் கனடாவிலிருந்து வந்து சொன்னது:
நாங்கள் ஊரில இருக்கேக்கை வெள்ளாளன் எங்களைப் படிக்கவேவிடயில்லை.
இங்கை வந்து படிக்க வெளிக்கிட்டால் தமிழைப் படி என்கிறான்.
அவங்கள் ஊரிலையும் ஆங்கிலத்திலைதான் படிச்சாங்கள்.
இங்கையும் ஆங்கிலத்திலைதான் படிக்கிறாங்கள்.
என்னென்றால்: இரண்டு கிழமை வந்து நின்று கலைச் செல்வனைச் சந்திக்க முடியவில்லை முதல் நாளிரவு ரெலிபோனில் கதைத்திருக்கிறார். 'நாளை விடிய வீட்டை வாங்கோ நிற்பேன்' என்றிருக்கிறார் கலைச்செல்வன். விடிய வந்தபோது ஆறாம் மாடியிலிருந்து கலைச் செல்வனின் உடலைத்தான் அவரால் இறக்க முடிந்தது.
( யூலை2006) |
|
தீர்ப்பு
ஒரு தாய்க்கு இரண்டு பிள்ளைகள்
இடுப்பிலிருந்து இறங்கி
போராடப் போனது ஒன்று
இங்கு ஓடி வந்தது ஒன்று
நீதி கேட்டுத் தாய் ஓடினாள்
மன்னன் சாலமன் சபையில் விசித்திரம் நிகழ்ந்தது
"கத்தியையும் தீர்ப்பு எழுதும் பேனாவையும்
வருபவர்களிடம் கொடு" என்று கூறி
மன்னன் 'எயர் போர்ட்' போய் விட்டதாக
வாயிற் காவலன் கூறினான்
தாய் திகைத்தாள்
வாயிற் காவலன் சாதாரணமாக
தாயிடம் கேட்டான்
"இன்றைய நாணய மாற்று விகிதம் என்ன?
100 பிராங் எத்தனை ரூபாய்?"
( தாயகம் 1992)
15 comments:
தோழர் (பெயரில் மட்டும்) சண்முகலிங்கம்
கனடாவிலிருந்து வந்து சொல்லாதது:
நாங்கள் ஊரில இருக்கேக்கை
வெள்ளாளன் எங்களைப் படிக்கவேவிடயில்லை.
ஏனெண்டால் 'வெள்ளாளன்' தான் பள்ளிக்கூடம் வச்சிருந்தவன் எண்டு பம்மாத்து விடலாம்..
இங்கை வந்து படிக்க வெளிக்கிட்டால்
தமிழைப் படி என்கிறான். ஏன் இங்கையும் அவனே பள்ளிக்கூடம் வச்சிருக்கிறான்?
அவங்கள் ஊரிலையும் ஆங்கிலத்திலைதான்
படிச்சாங்கள்.
இங்கையும் ஆங்கிலத்திலைதான்
படிக்கிறாங்கள். அதோட பிரெஞ்சயும் படிக்கிறாங்கள்.
கனடாவிலிருந்து வந்த எந்த சண்முகலிங்கம் அப்பிடிச் சொன்னவர்? “அ” னாவா “இ”னாவா?
what a 'loose' peoples.
Sugan you are right.
continue your work. go ahed!
நறுமணமலர்ச்சோலை
பார்க்குமிடமெங்கும்
பரந்து பூத்திருக்க
ஒருவன் மட்டும்
இருளில் வந்த பூனை
அச்சோலையின் தூரத்து
முடுக்கொன்றில்
கழித்த மலத்தில்
மொய்த்த ஈயைக்
கண்டு மிரண்டு
கொண்டிருந்தான்.
மூக்கு வழி நுழைந்த மலமணம்
அவன் மூளைக்குள் புகுந்து
குடிகொண்டது.
நறுமணமலர்ச்சோலை
பார்க்குமிடமெங்கும்
பரந்து பூத்திருக்கும் போது
அந்த இடத்தில் இருக்கும் மலமும் வண்டும் மணமும் எவ்வளவு முக்கியமாய்ப்போகிறது
ஒருவனுக்கு.
அற்புதமான கவிதை
அந்த ஒருவனே சுகன்.
அவனே கவிஞன்
கனடா தமிழர் பேரவை கறுப்பு ஆடியை நினைவு கூர்ந்தது சரியானது.
ஆனால் அவர்கள் குறுந்தேசிய சகதிக்குள் விழாது இருக்க வேண்டும்.
அவர்கள் குறைந்த பட்சம்
அனைத்து தரப்பினராலும் செய்யப்படும் படுகொலைகளை எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டும்.
அனைத்து மக்களின் சுயநிர்ணயத்தை பகிங்கரமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மறுகாலனியாதிக்கத்திற்கு எதிராக போராட வேண்டும்.
இதன் மூலம் அனைத்து மக்கள் விரோதிகளையும் அம்பலப்படுத்துவதன் மூலம் அனைத்து மக்களின் ஐக்கியம் தழுவிய பாதையை தெரிவு செய்வதன் மூலம் பிற்போக்குவாதிகளை அரசியல் அரங்கில் இருந்து அம்பலப்படுத்த முடியும்.
இந்த கருத்துப் பகுதி பொருத்தமில்லைத்தான் ஆனால் அவசியம் கருதி இதில பதிவிடுகின்றேன்
சுகன்நீஙகள் எளுதுவது கவிதை மாதிரி எனக்கு படவில்லை அதில் ஆளமான கருத்து உள்ளே இருப்பது போலவும் எனக்கு தெரியவில்லை.சில வேளை இது புத்தி ஜீவிகளுக்கு மட்டும்தான் விளங்கும் போல. இதை படிக்கும் வாசகர்கள் யாராவது முடிந்தால் எனக்கு இதற்கு விளக்கம் கூறுங்கள்.
படிப்பு ஒருவருக்கு மிக முக்கியம். எந்த நாட்டில் சென்று படித்தாலும்.
Somberi paiyan is the best in the world.
nobel priz should be given to him.
sugan s speach was very good yesterday.
nobody understand soba.
you should be more directe.
Mr. Englishu!
what is your problem with shobasakthi.
yesterday, only oneman who speak very wel & clearly. that is shobasakthi. plse don't make personnel crushes.
"தோழர்" சண்முகலிங்கம் ஏன் கனடாவில் இருந்து வந்தவர். நியாயமாகப் பார்த்தால் அவர் சீனா, வடகொரியா அல்லது குறைந்தபட்சம் கியூபாவிலிருந்தெல்லவோ வந்திருக்கவேண்டும்? "ஊருக்கெல்லோ உபதேசம் உனக்கல்லடி மகளே" வகையோ?
//தோழர்" சண்முகலிங்கம் ஏன் கனடாவில் இருந்து வந்தவர்?//
எப்படி வந்தவர்? எப்படி வரஏலும்? நியாயமாகப்பார்த்ததால் நியாமான கேள்விதான். உவை ஊருக்க கிடந்து உழலவேண்டிவையுங்கோ...
Post a Comment