Tuesday, April 29, 2008

முதலீட்டியத்தின் எரிபொருள் கனவுக் காலம்

-ராஜன் குறை

‘மொழிபெயர்ப்பில் தொலைந்தவை’ என்ற சொற்றொடர் ஆங்கிலத்தில் புழங்குகிறது. 'மொழிபெயர்ப்பில் தடம் மாறியவை’ என பட்டியல் போட்டால் அதில் காபிடலிஸத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான முதலாளித்துவத்திற்கு முக்கிய இடம் கொடுக்கவேண்டும். இது காபிடலிஸ எதிர்ப்பை முதலாளி – தொழிலாளி முரண்பாடாக சுருக்குவதை சுலபமாக்கியது. வெகுஜன சிந்தனையில் முதலாளியல்ல, முதலீட்டியமே பிரச்சனை என்ற எண்ணம் எழவே வாய்ப்பில்லாமல் போனதால் அரசு முதலீட்டியம் போன்ற கருத்தாக்கங்கள் வெகுஜன பிரக்ஞையில் தமிழில் பரவலாக கவனம் பெறவில்லை, சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகும் கூட. [......]

Thursday, April 24, 2008

Culture Shock

Anita Pratap

Presents only a slice of the Lankan Tamil reality, but it is an authentic voice. Matter-of-fact, unsentimental, evocative but sparse.

It is a tribute to human ingenuity that even amidst continuous cruelty, torture and degradation, the inquiring, creative spirit cannot be extinguished. Shobasakthi, a former LTTE guerrilla and now a refugee in Paris, exemplifies this in his disturbing novel, which captures both the daily horrors of the Sri Lankan Tamil community in their homeland and the wretchedness of the lowest rung of the asylum-seeking Tamil diaspora. [...]

Wednesday, April 23, 2008

காணவில்லை!




பிரித்தானியாவில் Watford நகரத்தில் 108, Liar Road என்ற முகவரியில் வசித்து வந்த படத்திலிருக்கும் யமுனா ராஜேந்திரனைக் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகக் காணவில்லை.

மார்ச் மாதம் 11ம் தேதி 'தேசம்' இணையத்தளத்தில் "ஷோபா சக்திக்கும் சுகனுக்கும் பத்து நாளில் பதிலோடு வருகிறேன்" என்று சூளுரைத்துவிட்டுச் சென்றவரை நாற்பது நாட்களாகியும் காணவில்லை. கடைசியாக இவர் நடிகர் ரகுவரனின் செத்தவீட்டில் கண்ணைக் கசக்கிக்கொண்டு திரிந்ததாகவும் தகவல்கள் உள்ளன.

இவர் ஒளிந்திருக்கும் இடமோ அல்லது இவர் பற்றிய தகவல்களோ தெரிந்தவர்கள் 'தேசம்' இணையத்தளம் அல்லது 'சத்தியக் கடதாசி' இணையத்தளத்திற்கு அறிவிக்கவும். இரகசியங்கள் பாதுகாக்கப்படுவதோடு சன்மானங்களும் வழங்கப்படும்.

நன்றி

Tuesday, April 08, 2008

இந்தா கிடக்கு மேளம்!

நூல் விமர்சனம்: சுகன்

"சாதியப் போராட்டம் சில குறிப்புகள்: சி.கா. செந்தில்வேல் உடன் நேர்காணல்".
-த.ஜெயபாலன்
'தேசம்' வெளியீடு, பக்கங்கள்: 40

"நான் பிறந்தது வண்ணார் சமூகத்தில்" என்று அய்ம்பது ஆண்டுகளைக் கண்ட இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியொன்றின் தலைவர் கூறுவதிலிருந்து தொடங்குகிறது இச் சிறு கைநூல்.

சிங்கள பவுத்த சமூகத்தில் சலவைத் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த ஆர். பிரேமதாஸ நாட்டின் அதிபராய் வரமுடியும். தமிழ் இந்து சமூகத்தில் 'ஒரு வண்ணான்' தமிழ் அரசியற் கட்சியினது தலைவராக வர முடியுமா? ஒரு பள்ளிக் கூடத்தின் அதிபராகக் கூட வரமுடியாது என்று கூறுகிறார் தோழர் செந்தில்வேல்: "இன்றுவரை சிறீ சோமஸ்கந்த கல்லூரியில் ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்தான் கற்பிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நாசூக்காகச் சமாதான காலத்திலை சென்று மேல் மட்டங்களிலை அலுவல் பார்த்து இருக்கிறார்கள். 75 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கிற ஒரு பாடசாலையில் ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட ஆசிரியர், அவரும் தன்னை மறைச்சு அப்படி இப்படி என்று இருக்கிறார். இப்படிக் கன பாடசாலைகளில் அதிபராக வர முடியாது." [...]