Anita Pratap
Presents only a slice of the Lankan Tamil reality, but it is an authentic voice. Matter-of-fact, unsentimental, evocative but sparse.
It is a tribute to human ingenuity that even amidst continuous cruelty, torture and degradation, the inquiring, creative spirit cannot be extinguished. Shobasakthi, a former LTTE guerrilla and now a refugee in Paris, exemplifies this in his disturbing novel, which captures both the daily horrors of the Sri Lankan Tamil community in their homeland and the wretchedness of the lowest rung of the asylum-seeking Tamil diaspora. [...]
1 comment:
நண்பன் மகேஷ் பரிசாகக் கொடுத்திருந்த அந்த நூலை மீண்டும் ஒரு முறை எடுத்து வாசித்தேன். எத்தனை முறை வாசித்தாலும் சலிப்புத் தட்டாத சுவாரசியமான நடையும் விறுவிறுப்பான ஓட்டமும் வரிகளுக்கும் ஊடாக ஓடுகிற மானுட நேயமும் அனிதா பிரதாப்புக்கே சொந்தமானவை. அப்படி அநேகமுறை படித்த புத்தகம்தான் ‘Island Of Blood’.
தனது மகன் சுபின் பிறப்பிலிருந்து தொடங்கும் நூல் மெள்ள வளர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைகளில் பயணித்து ஈழத்தின் கானகங்களில் விரிவடைகிறது. எண்பதுகளின் பிற்பகுதியில் அவரது ஈழம் நோக்கிய பயணமும் அதில் அவர் சந்தித்த அபாயகரமான சிக்கல்களும்,பிரபாகரன் அவர்களுடனான சந்திப்புகளும் நம்மை ஆச்சர்யங்களின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கின்றன.
ஈழத்தில் “அமைதி”ப்படையின் வருகைக்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த அவரது பயணங்கள், போராளிகளது பண்பும் கண்ணியமும் மிக்க நடவடிக்கைகள் என அவர் விவரித்துக் கொண்டே போகும்போது நாமும் அவருடனேயே பயணிப்பதைப் போன்ற உணர்வைக் கொடுக்கிறது. தமிழே தகிடுதத்தமான என்னைப் போன்ற ஜென்மங்களுக்குக்கூட எளிதில் புரியக்கூடிய ஆங்கில நடை. அவரது ஆப்கானிஸ்தான் பயணமும்…… பதற்றம் பற்றிக் கொண்ட நாட்களில் பாபர் மசூதியைச் சுற்றிய செய்திகளும்…… அவரது சுறுசுறுப்பைக் கண்டு வியக்க வைக்கிறது.
பொதுவாக ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்கள் பாவங்கள் எல்லாம் செய்து முடித்த பிறகுதான் புண்ணியத்தலங்களை நோக்கிப் பயணப்படுவார்கள். ஆனால் நம்மைப் போன்றவர்கள் எதிலும் தலைகீழ்தானே. அப்படித்தான் ‘கொரில்லா’ விஷயத்திலும் நடந்தது. அனிதாபிரதாபுடைய நூலைப் படித்த பிறகுதான் ஷோபா சக்தியுடையதைப் படிக்க நேர்ந்தது. இலக்கிய இதழ்களில் இருந்து வணிக இதழ்கள் வரைக்கும் அதற்குக் கொடுத்த சிலாகிப்புகள் என்ன……? விமர்சன விழாக்கள் என்ன……? போதாக்குறைக்கு எந்தப் புண்ணியவானோ நம்ம ரஜினி ‘சாரு’க்கு வேறு அதைப் பரிசாகக் கொடுத்த செய்தியையும் படிக்க நேரிட்டது.
26.12.1967ல் பிறக்கும் கதையின் நாயகன் ரொக்கிராஜ் என்கிற யாகோப்பு அந்தோணிதாசன்.. .(தொடர……..www.pamaran.wordpress.com)
Post a Comment