எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஜனநாயகத்தைப் பேணுவோம்! தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்துவோம்!!
எதிர்வரும் மே மாதம் 10ம் திகதி கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தல் தொடர்பாக கிழக்கு வாழ் தமிழ் - முஸ்லிம் மக்கள் தமது ஆழ்ந்த அக்கறையையும் தெளிவான நிலைப்பாட்டையும் எடுக்க வேண்டியுள்ளது. ஏனெனில் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணச்சபைத் தேர்தல் கிழக்கு வாழ் தமிழ் - முஸ்லிம் மக்களின் எதிர்கால வாழ்வுடன் தொடர்புற்று இருப்பதாலும் வேறு எந்தத் தேர்தலிலும் இல்லாத சமூக, அரசியல் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாலும் இத்தேர்தல் தமிழ் - முஸ்லிம் மக்களைப் பொறுத்த வரை முக்கியமானதாக உள்ளது. [...]
No comments:
Post a Comment