செயின் ஆற்றில் செத்த நாயொன்று
மிதந்து கொண்டிருக்கிறது
நாயொன்று செத்து செயின் ஆற்றில்
மிதந்து கொண்டேயிருக்கிறது.
கவிதையைப்போல் நாயொன்று செத்து
மிதந்து கொண்டிருக்கிறது
மிதந்து கொண்டிருக்கும் செத்த நாய்
கவிதையைப் போல்.
செயின் ஆற்றில் ஒரு நாய் செத்து
மிதந்து போவது
போவோர் வருவோரைக் கவிதையைப்
போற்
கலவரப்படுத்திக் கடந்து போக வைக்கிறது.
நாய் - போவோர் வருவோர் - செயின் ஆறுகவிதையின் அழகியலையும் அழகியலிற் கவிதையும் தருகிறது
கவிதையையும் கலவரத்தையும் அழகியலையும் அமைதியையும் தந்ததற்கு நன்றி நாயே..!
சுகன்......
17.01.2006
1 comment:
இந்த அழகான கவிதையைத் தந்ததுக்கு நன்றி.;-)
Post a Comment