ஞானதீபன் வந்தவுடனேயே ஒருவனைக் கொன்று விடுகிறான் எந்த ஆண்டு வந்தான்? ஜோர்மனியா? பிரான்ஸா? எதுவும் தெரியவில்லை தெரிவதெல்லாம்
வந்தவுடனேயே ஒருவனைக் கொன்றுவிடுகிறான்.....
அவனைக் கொல்ல வேண்டும் போலிருந்தது
கொன்றுவிடுகிறான்
பின்னர்;
பின்னர் எதுவுமில்லை
கொல்லப்பட்டவன் தமிழனாயும்
வெள்ளைக்காரனாயும்
இரண்டு உருவங்களில் அவனுக்குத் தெரிகிறான்
இருவரையும் அழைத்துக் கொண்டு பொலிஸிற்க்குப் போகிறான்
அகதிக்காக விண்ணப்பிக்க.
"ஐயா! எனது காலத்துக்கால இடப் பெயர்வுகளையும் சித்திரவதைகளையும் உயிராபத்துகளையும் மற்றும் கஸ்ர-நஸ்ரங்களையும் எங்கிருந்து எப்படித் தொடங்குவதென்று தெரியவில்லை........."
-சுகன்-
1 comment:
//கஸ்ர-நஸ்ரங்களையும் //
சுகனார் அவர்களே!நீங்கவேற கவிஞராச்சு.எனினும் இப்படித் தமிழில் எழுதுவது தவறென்று சொல்வதில் அவசியமிருக்குப் பொறுத்துக் கொள்க!
கஷ்ட,நஷ்டம் இதுவே வடமொழியிலிருந்து ஒலிபெயர்க்கப்பட்ட வார்த்தைகள்.இவ்வாறு எழுதுவதே சரியானதாக இருக்கும்.
Post a Comment