சமகாலத் தமிழ் அரசியல்- இலக்கியச் சூழலில் உறுதியாகவும், உரத்தும், இடையறாது ஒலிக்கும் குரல் மாலதி மைத்ரியுடையது. கவிதைகளில் பெண்மொழியின் உச்சபட்ச சாத்தியத்தை நிகழ்த்திக்கொண்டிருப்பவரும் மாலதி மைத்ரிதான். 'ஆபாச எழுத்துகள்', 'அதிர்ச்சி மதிப்பீட்டுக்கான எழுத்துகள்' என்றெல்லாம் கலாசார காவலர்கள் இன்றைய பெண் எழுத்துகளை தூற்றும் போதெல்லாம் அந்தக் காவலர்கள் மீதான முதல் அடியாகவும் ஆமான அடியாகவும் மாலதியின் குரல் ஒலிக்கிறது.
மாலதி மைத்ரி வெறுமனே இலக்கியச் செயற்பாடுகளோடு நின்றுவிடுபவரல்ல. பெண்ணியம், பெரியாரியல், தலித்தியம், உலகமயமாதலுக்குத் தீவிர எதிர்ப்பு என அவரது அரசியல் ஈடுபாடுகள் விரிந்தவை. அவரது இந்த நேர்காணலிலும் கூட "பெண்ணியம் அரசியல் நீக்கம் செய்யப்பட்டதாக இருக்க முடியாது" எனத் திரும்பத் திரும்பக் குறிப்பிட்டார்.
பெண்ணிய இதழான 'அணங்கு' சிற்றிதழை நடத்திவரும் மாலதியின் மூன்று கவிதைத் தொகுப்புகளும் (சங்கராபரணி, நீரின்றி அமையாது உலகு, நீலி) ஒரு கட்டுரைத் தொகுப்பும் ('விடுதலையை எழுதுதல்') இதுவரை வெளியாகியுள்ளன. இம்மாதத் தொடக்கத்தில் கனடாவில் நிகழ்ந்த பெண்கள் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக கனடா சென்றிருந்த மாலதி மைத்ரி இந்தியா திரும்பும் வழியில் பாரிஸுக்கு வந்திருந்தார். மாலதி மைத்ரியுடன் 'சத்தியக் கடதாசி'க்காக ஒரு நேர்காணல்:
No comments:
Post a Comment