நேர்காணல்
""ஈழப் பிரச்சினையை மணிரத்னம் அளவு கேவலமாக வேறு யாரும் சித்தரிக்க முடியாது!'' -ஷோபாசக்தி
நவீன தமிழ் இலக் கிய வரலாற்றில் புலம் பெயர்ந்த ஈழத்துப் படைப் பாளிகளின் பங்களிப்பு முக்கியமானது. ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து தற்போது பிரான்ஸ் நாட்டில் வேலை பார்த்து வருபவர் ஷோபா சக்தி. நவீன தமிழ் இலக்கியத் தில் மிகத் தீவிரமாக இயங்கிவரும் எழுத்துப் போராளி. இவரது முதல் நாவலான "கொரில்லா' ஈழ விடுதலைப் போராட் டத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது. இந்த நாவல் பெரும் பரபரப்பையும், சர்ச்சை யையும் உண்டுபண்ணியது. இதனை அடுத்து "ம்' என்றொரு நாவலும், "தேசத்துரோகி' என்றொரு சிறுகதைத் தொகுப்பும் வெளியாகின. தற்போது ஒரு கட்டுரைத் தொகுதி வரவுள்ளது.பிரான்ஸ் நாட்டிலிருந்து தனது அடுத்த படைப்பை வெளியிட தமிழகம் வந்தவரை பெசன்ட் நகர் மாதா கோவிலை அடுத்துள்ள கடற்கரை மணலில் ஒரு மயக்கும் மாலைப் பொழுதில் சந்தித்து இனிய உதயத்திற்காக உரையாடினோம். அதிலிருந்து...எந்தச் சூழல் உங்களை எழுதத் தூண்டியது?""எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் -அதாவது பத்து வயதில் ஈழத்தில் தமிழ் தேசியம் எழுச்சியுடன் இயங்கிக் கொண்டிருந்தது. நான் வளர்ந்ததே தமிழ் தேசிய முழக்கங்களைக் கேட்டுத்தான். அல்ஜீரிய நாட்டுத்தலைவர் ஒருவர் சொல்லுவார் -மௌனமாக இருப்பது சாவுக்குச் சமம் என்று. மனித சமூகங் களுக்கு எதிராக நடக்கும் அக்கிரமங்களை- அநீதிகளை- மனித உரிமை மீறல்களைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. தனி மனிதனான நான் என்ன செய்ய முடியும்? அதனாலதான் எழுத்தைத் தேர்வு செய்து மாற்று அரசியல், மாற்றுக் கருத்துகள், மாற்று இலக்கியங்களை எழுதிக் கொண்டிருக்கிறேன். எல்லா அமைப்புகளின் மேலும் நம்பிக்கை இழந்ததனால் நான் எழுத்தைத் தேர்வு செய்தேன்.''இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது காந்தி, நேரு போன்ற தலைவர்கள் வெளிநாடு களிலிருந்து இந்தியாவிற்கு வந்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். ஆனால் நீங்கள் ஈழ விடுதலைக்கான போராட்டம் ஆரம்பிக்கும்போது அங்கிருந்து வெளியேறிவிட்டீர் கள். இது குற்ற உணர்வாக உங்க ளுக்குப் படவில்லையா?""ஈழத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காகப் பல்வேறு காலகட்டத்தில் நிறைய பேர் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். ஆரம்ப கட்டத்தில் கல்வி கற்பதற்காகப் புலம் பெயர்ந்தார்கள். அடுத்து பணம் சம்பாதிப்பதற்காகப் புலம் பெயர்ந்தார்கள். 83-ல் ஈழத்தில் சண்டை ஆரம்பித்தபோது உயிருக் குப் பயந்து புலம்பெயர்ந்தவர்கள் நிறைய பேர். இந்தக் கேள்வி என்னை மட்டும் குறித்துக் கேட்கப் பட்ட கேள்வியாக நான் எண்ண வில்லை. என்னைப்போல் மாற்று அரசியல், மாற்றுக் கருத்து பேசும் எல்லோரையும் பார்த்துக் கேட்கும் கேள்வியாக நினைத்துதான் நான் இதற்குப் பதிலளிக்கிறேன். எங்க ளுக்குச் சிங்களவர்களாலும், சகோதர இயக்கங்களாலும் ஆபத்து வந்தபோதுதான் என்னைப் போன்றவர்கள் வெளிநாட்டிற்குப் புலம் பெயர்ந்தோம். தற்போது பிறந்த மண்ணில் சண்டை நடந்து கொண்டிருக்கும்போது நாம் வெளிநாட்டில் இருக்கிறோமே என்ற வருத்தம் எங்களுக்கு இருக் கத்தான் செய்கிறது. இதைத் தாயகப் பாசம் என்று எடுத்துக் கொள் ளாதீர்கள். ஒரு இனம் பட்டினிச் சாவில் இருக்கும்போது நம்மால் நேரடியாக ஒன்றும் செய்ய முடிய வில்லையே என்ற வருத்தம்தான். இருந்தாலும் எங்களைப் போன் றோர் மாற்றுக் கருத்து, மாற்று அரசியல் குறித்து பேசிக்கொண்டு தான் இருக்கிறோம்.''ஈழத்திலேயே பிறந்து வளர்ந்த தமிழர்கள் இந்தியாவிலிருந்து அங்கு போன தமிழர்களை அடிமைகள்போல நடத்தினார்கள் என்று நான் படித்திருக்கிறேன். அது உண்மையா? அதைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?""அது உண்மைதான். இந்தியா விலிருந்து அங்கு வந்த தமிழர்களை வடக்கத்தியான், கள்ளத்தோணி, தோட்டக்காரன் என்றுதான் கூறுவார்கள். ஈழ ஆதிக்க ஜாதி யினர் அப்படி நடத்தியதை நான் சிறுவனாக இருக்கும்போது பார்த்திருக்கிறேன். இப்போது அங்கு எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று எனக்குத் தெரியாது.''மறைந்த ஈழத்துப் பெண் கவிஞரான சிவரமணியின் கவிதைகள் மிக வலி நிறைந்ததாக இருக்கிறது. அவரைப் பற்றி சொல்லுங்களேன்?""அவர் வாழ்ந்த காலம் கொஞ்சம்தான். இருபத்தி இரண்டு வயதிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டார். அற்புதமாக கவிமொழி அமையப் பெற்றவர். அவர் தற்கொலை செய்வதற்குமுன் அவர் எழுதிய கவிதைகள் பெரும் பாலானவற்றை அவரே எரித்து விட்டார். இது தமிழ்மொழிக்குப் பேரிழப்புதான்.''நீங்கள் கவிதை எழுதியிருக்கிறீர் களா?""ஆரம்ப காலங்களில் இயக்கம் சார்ந்த கவிதைகள் எழுதியிருக்கி றேன். இயக்கம் சார்ந்த கவிதைகள் எப்படி இருக்கும் என்று உங்களுக் குத் தெரியும்தானே. பாரதிதாசன் கவிதைகள் மாதிரி- எங்களுக்கென் றால் காசி ஆனந்தன் கவிதைகள் மாதிரி இருக்கும். அது தப்பு என்று தெரிந்தவுடன் எழுதுவதை நிறுத்திவிட்டேன்.''உங்களுடைய படைப்புகள் பைபிள் கதை நடைபோல இருக் கிறது. இது நீங்கள் திட்டமிட்டே எழுதுகிறீர்களா? அல்லது இயல்பாக அப்படி வருகிறதா?""பைபிளின் இலக்கிய நடை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் பைபிளில் உள்ள கருத்து கள் எனக்குப் பிடிக்காது. பைபி ளைப் போல பெண்ணடிமைத் தனமான- மனிதத்திற்கு எதிரான புத்தகங்கள்- பகவத்கீதை முதலியன எனக்குப் பிடிக்காது. ஆனால் பைபிளின் தமிழ் மொழி பெயர்ப்பு நடை எனக்கு ரொம்பப் பிடித்த மானது. அதனால் அதுபோல் திட்டமிட்டேதான் எழுதுகிறேன்.''உங்களுடைய "ம்' நாவலில் தந்தை- மகள் உறவை வேறு விதத்தில் காட்டியிருந்தீர்கள். தற்போது சாருநிவேதிதா அண்ணன்- தங்கை உறவை அவருடைய "ராசலீலா' நாவலில் வேறு விதத்தில் காட்டியுள்ளார். இந்தக் "கலகக் குரல்' இலக்கியம் ஆகுமா?""இதைக் "கலகக் குரல்' என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. சொல்லப்போனால் நாம் நமக் கென்று ஒரு பாலியல் முறைகளைக் கட்டமைத்து வைத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் அக்காள் மகளைத் திருமணம் செய்யலாம் என்று கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் எங்கள் நாட்டில் இப்படித் திருமணம் செய்தால் கல்லால் அடித்துக் கொல்வார்கள். தாய்லாந்தில் அண்ணன்- தங்கை திருமணம் என்பது சமீபகாலம் வரை இருந்திருக்கிறது. முன்பு அரசர் காலங்களில் அண்ணன்- தங்கைக்குத் திருமணம் செய்து வைப்பார்கள். இது சொத்து வெளியே போய்விடக் கூடாது என்பதற்காக. தற்போது வெளிநாடு களிலும், தமிழ்நாட்டி லும் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக பேப்பரில் செய்திகள் வருகின்றன. இது சரியா, தவறா என்ற விவாதத் தைப் பின்னால் வைத் துக்கொள்வோம். பாலியல் வழக்கம் என்பது ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமாகக் கட்டமைக்கப்படுகிறது. இதில் எந்தப் பாலியல் உறவு சரி, எந்தப் பாலியல் உறவு தவறு என்பதற்கு என்ன அளவுகோல் நம்மிடம் இருக்கிறது?''நீங்கள் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து தற்போது பிரான்ஸ் நாட்டில் வசிக்கிறீர்கள். ஈழத்தில் விடுதலை கிடைத்தால் பிரான்ஸ் வாழ்க்கையை விட்டுவிட்டு ஈழத் திற்குத் திரும்பிப் போவீர்களா? அல்லது பிரான்சிலேயே வாழ்வீர்களா?""நான் ஒரு தேசத்துரோகி. தந்தை பெரியார் சொல்வார்- தேசத்திற்கு, ஜாதியத்திற்கு, மதத்திற்கு நீங்கள் துரோகம் செய்தால்தான் வாழ்க்கை யில் ஈடேற முடியும் என்று. எனக்கு நான் பிறந்த நாடு, தமிழ் தேசியம் இவற்றின்மீது நம்பிக்கை கிடை யாது. "நான்', "என்னுடைய' என்னும் இந்த எண்ணம்தான் பிளவுக்கும், சண்டைக்கும் காரணம். நான் ஒரு சகோதரத்துவவாதி. முதலில் நாம் மனிதர்கள். நான் ஈழத்தில் 19 வருடம் வாழ்ந்துவிட்டேன். இப்போது எனக்கு எது சொந்த நாடு? எங்கே சுதந்திரமாகச் செயல் பட முடியுமோ அங்கு வாழ்ந்துவிட வேண்டி யதுதான். முதலில் வயிற் றுக்குச் சோறு கிடைக்க வேண்டும். இலங்கை யில் அது கிடைக்கு மானால் நான் அங்கு போய் வாழலாம். முதலில் இனி என்னால் எங்கேயுமே நிரந் தரமாக வாழ முடியுமா என்பதே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. அந்த மனநிலையும் எனக்கில்லை.''முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை யைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?""நான் வன்மையாகக் கண்டிக் கிறேன். மனிதத்திற்கு எதிராக எந்த ரூபத்தில் கொலைகள் நடந்தாலும்- அது இந்திய அமைதிப்படை இலங்கையில் எடுத்தாலும் சரி அல்லது வேறு எந்த ரூபத்தில் கொலைகள் நடந்தாலும் அது வன்மையாகக் கண்டிக்கக் கூடியது. அதைத் துன்பியல் சம்பவம் என்று சொல்வது தவறு.''ஈழப்பிரச்சினைகளை முன் வைத்து சில தமிழ்த் திரைப்படங் கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதைப்பற்றி உங்கள் கருத்தென்ன?மணிரத்னம் எடுத்த "கன்னத்தில் முத்தமிட்டால்' படம் பார்த்திருக் கிறேன். பொதுவாக, மணிரத்தினம் காஷ்மீர் விடுதலைப் போராட்டம், வடநாட்டில் நடந்த இந்து- இஸ்லாமியர் பிரச்சினை போன்ற தீரமான பிரச்சினைகளை வைத்து காமெடியாகப் படம் எடுப்பார். ஆனால் இவ்வளவு மோசமாக- அதாவது ஈழத்துப் பிரச்சினையைப் பற்றி கொஞ்சம்கூட அரசியல் புரிதல் இல்லாமல், இவ்வளவு கேவலமாகப் படம் எடுத்திருக் கிறார். இது இவரால் மட்டுமே சாத்தியம். "இருவர்' என்றொரு படம் திராவிடப் போராட்டத்தை மையமாக வைத்து எடுத்தார். அதில் அந்தத் தலைவர்களுக்குள் நடந்த பல்வேறு சம்பவங்களை விட்டு விட்டு, ஒரு பெண்ணுடைய பிரச்சி னையை வைத்துப் படமாக்கியவர் தானே! ஈழத்துப் பிரச்சினையை நன்கு புரிந்துகொண்டவர்கள் நவீன நாடகத்தில் இருக்கிறார்கள். சிறு பத்திரிகைச் சூழலில் இருக்கிறார் கள். ஆனால் அந்தளவுக்குப் புரிதல் உள்ளவர்கள் தமிழ்சினிமாவில் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை!''மாற்று இலக்கியம், மாற்று அரசியல் என்றெல்லாம் பேசுகிறீர் களே... தமிழ்த் திரைப்படச் சூழலில் மாற்று சினிமாவுக்குச் சாத்தியம் உண்டா?""பிரான்சிலிருந்து மிகக் குறைந்த நேரத்தைக் கையில் வைத்துக் கொண்டே இங்கு வந்துள்ளேன். அதைப் பயனுள்ள விஷயத்துக்குப் பயன்படுத்துவோமே.''தற்போது ஆங்கிலம் கலந்து பேசுகிற தமிழ் தொடர்ந்தால் இன்னும் நூறு வருடங்களில் தமிழ் மொழி அழிந்துவிடும் என்று தமிழின் முக்கியமான கவிஞர்களில் ஒருவரான மாலதி மைத்ரி சொல்கிறார். இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?""மாலதி மைத்ரி எந்த பகைப் புலத்தில் இதைச் சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென் றால் அதை நான் படிக்கவில்லை. ஆனால் மாலதி மைத்ரி கண்டதற் கெல்லாம் கருத்துச் சொல்பவர் கிடையாது. ஏதாவது ஒரு கார ணத்தை வைத்துதான் சொல்லி இருப்பார். ஆனால் எனக்கு அப்ப டித் தெரியவில்லை. தமிழ்மொழி தொன்மையான ஒரு மொழி. இன் றைக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகம் முழுவதும் வசிக்கிறார்கள். தமிழ் மொழி அழியும் என்று எனக்குத் தோன்றவில்லை.''இன்றைய தமிழ் இலக்கியச் சூழலைப் பற்றிச் சொல்லுங் களேன்?""இது முக்கியமான கேள்விதான். ஒட்டுமொத்த தமிழ் இலக்கியச் சூழலைப் பற்றிக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இதை மூன்று விதமாகப் பிரிக்கலாம். தமிழ்நாட்டு இலக்கியச் சூழல், ஈழத்து இலக்கியச் சூழல், புலம் பெயர்ந்த தமிழ் இலக்கியச் சூழல்- மூன்றுமே வெவ்வேறு விதமான தனித்தன்மைகளையும், சிக்கலை யும் கொண்டவை. குறிப்பாகத் தமிழ்நாட்டு இலக்கியச் சூழலை எடுத்துக்கொண்டால் இதுவரை ஆதிக்க ஜாதியினரும், ஆணாதிக்க வாதிகளும்தான் எழுதிக்கொண்டி ருந்தார்கள். ஆனால் இன்றைக்குத் தலித் இலக்கியம், பெண்ணியம், ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வு களை மையமாக வைத்து எழுது பவர்கள் நிறைய வந்திருக்கிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான சூழல் தான். உதாரணத்திற்கு ஷோபாசக்தி என்ற சமையல்காரனை, ஆட்டோ ஓட்டும் சிவதாணு நேர்காணல் செய்வதைச் சொல்லலாம். இப்படி யான விளிம்பு நிலைக் குரல்கள் ஒலிக் கத் துவங்கி இருக்கின்றன. இதற்கு அங்கீகாரமும் கிடைக்கிறது. எப்படி அங்கீகாரம் கிடைக்கிறது? முன்பு இதையெல்லாம் அங்கீகரிக் கும் விமர்சகர்கள் பிராமணர்கள். ஆனால் இன்று ராஜ்கௌதம், ரவிக்குமார், அ.மார்க்ஸ் போன்ற அற்புதமான விமர்சகர்கள் விளிம்பு நிலையிலிருந்து வந்திருக்கிறார்கள் என்பதே சந்தோஷமாக இருக் கிறது.''இன்றைய சிற்றிதழ் சூழல் பற்றிய உங்கள் பார்வை?""இதில் ஒரு பிரச்சினை இருக் கிறது. நான் வெளிநாட்டில் வசிப்ப தால் இங்கு கிடைக்கும் சிற்றிதழ்கள் எனக்கு அங்கு கிடைப்பதில்லை. தீராநதி, உயிர்மை, காலச்சுவடு போன்றவற்றை அவர்களே இடை நிலைப் பத்திரிகை என்றுதான் சொல்கிறார்கள். அதனால் இன் றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கும் சிறு பத்திரிகைச் சூழலைப் பற்றி எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் இன்றைக்குச் சுரண்டல் முதலாளிகளையும், நடிகர்களையும் இலக்கிய மேடையில் ஏற்றி சுரண் டலைப் பற்றியும், நவீன இலக் கியங்களைப் பற்றியும் பேசுகி றார்கள். இது லாப நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது. இது மிகவும் கேவலமான ஒரு செயல். இதை யெல்லாம் தாண்டி லஷ்மி மணி வண்ணன், ஆதவதீட்சண்யம் போன்றோர் எந்தவிதமான சமரசங் களும் செய்து கொள்ளாமல் சிறு பத்திரிகைகளையும், படைப்பு களையும் செய்கிறார்கள் என்பது நமக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது.''சமீபத்தில் நீங்கள் படித்த புத்தகம்?""சாருநிவேதிதா எழுதிய "ராசலீலா'.''
-சந்திப்பு: வி. எஸ். சிவதாணுநன்றி : இனிய உதயம்
Full Name*:
Email ID/User ID*:
Comments*:(Max. of 1000 Chars)
T.Balendran
mithur@bluewin.com /idkeetha08
good
ELANCHITHIRAN
No comments:
Post a Comment