-சுகன்
கடந்த ஞாயிறு சபாலிங்கம் மண்டபத்தில் நிகழ்ந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் தோழர் எம்.சி. ரவூப் ஆற்றிய உரை புகலிட அரசியல் இலக்கிய நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானது.சொற்ப நேரத்திலேயே கனகச்சிதமாக தமிழ் அரசியலின் இரண்டக நிலையையையும் அது கட்டமைத்த வரலாற்றுப் புனைவையும் கட்டுடைத்த தோழர் ரவூப் இனவாரித் தரப்படுத்தலின் தோற்றுவாய் யாழ்ப்பாண வெள்ளாளப் பின்னணியே என காட்சிப்படுத்தினார்.
88 புள்ளிகள் எடுத்த முஸ்லிம் மாணவனுக்கு யாழ்ப்பாண இந்துக்கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டு 76 புள்ளிகள் எடுத்த இந்து மாணவன் அனுமதி பெற்றதை ரவூப் சுவாரசியமாகச் சொன்னாலும் ஏமாற்றத்தினதும் வேதனையினதும் வெறுப்பினதும் உச்சக்கட்டப் பதிவாகவே இதனை நோக்குதல் தகும். வெள்ளாளர்கள் எப்போதும் நாசூக்கானவர்களும் அற்பத்தனமானவர்களும். யாழ் பல்கலைக்கழகமே சாதியின் அடித்தளத்தில் இயங்கும்போது மற்றவற்றின் கொடூரம் சொல்லிப்புரியவேண்டியதில்லை.
No comments:
Post a Comment