Friday, February 13, 2009

குஜராத் 2002

-Ashley Tellis
தமிழில்: அனுசூயா சிவநாராயணன்

ரு தீய்ந்துபோன மண்டையோடு
என் அறைக்குள் உருண்டு வருகிறது
அது என்னை வெறித்துப் பார்க்கிறது.
அதன் நிணமும் தசையும் எரிக்கப்பட்டு
கறுப்பு எலும்பும்
இந்த அகோரமான வெறித்த பார்வையும் மட்டுமே
அங்கே எஞ்சியுள்ளது.

மண்டையோடு
நான் வேலைக்குப் போகையில்
என்னைப் பின்தொடர்கிறது

அது வகுப்பறையின் வாசலில்
என் கால்களை இடறுகிறது
நான் அதன் பிளந்த வாயை
வீண் சொற்களால்
நிரப்ப எத்தனிக்கிறேன்.

ஆனால் சொற்கள்
மண்ணெண்ணையைப் போல
சிந்திப் பரவுகின்றன்

எந்தக் கையினால் நெருப்பைச் சொரிய முடிகிறது?
எந்தக் கையினால் வாளை ஓங்கி வெட்ட முடிகிறது?
எந்தக் கையினால் 'இந்தியன்' என்ற சொல்லை
'இந்து' என்ற சொல்லால்
குருதியினாலும் எரியும் தசையாலும் நிரப்ப முடிகின்றது?

நான் எனது முஸ்லீம் மண்டையோட்டை
கையில் எடுத்தேன்.
இதுதான் எனது தேசியக்கொடி.

No comments: