தோழர். சி.புஸ்பராஜா
(1951 – 2006)
"நான் எந்த விடயத்திலும் மௌனியாக இருக்க விரும்பவில்லை. மௌனியாக இருக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை. நான் இவர்களுடன்தான் பேசுவேன், இவர்களுடன்தான் உறவு கொள்வேன் என்ற இறுமாப்பும் என்னிடமில்லை. துப்பாக்கி இல்லாத யாருடனும் நான் எப்போதும் பேசத் தயாராக உள்ளேன். நான் ஈழத்தை நேசிப்பவன். ஈழத்தை நேசிக்கும் மற்றொருவருக்கு, அல்லது பலருக்கு எனது கருத்தின்மீது நடைமுறையின்மீது உடன்பாடில்லாமல் இருக்கலாம், அதை நாங்கள் பேசித் தீர்க்கலாம். இடையில் துப்பாக்கிக்கு என்ன வேலை?" என்று தோழர். புஸ்பராஜா ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் நூலின் முன்னுரையில் எழுதினார்.
தோழர். சபாலிங்கத்தின் கொலையைத் தொடர்ந்து அச்சத்தில் மௌனித்துக் கிடந்த புலம்பெயர் இலக்கியச் சூழலையும், மாற்றுக் கருத்தாளர்களையும் மீட்டெடுத்து மாற்றுக் கருத்தாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மீண்டும் களங்களைத் திறந்து வைத்தவர்களில் முதன்மையானவர் சி.புஸ்பராஜா. தோழரின் அபரிதமான துணிச்சலும், ஆளுமையும், அராஜகத்துக்கு எதிரான அவரது விட்டுக்கொடுக்காத போராட்டமும், மக்கள் கலை - இலக்கியத்தின் மீதான அவரது நேசிப்பும் இதனைச் சாதித்துக் காட்டின.
இன்று தோழரின் 'இன்மை'யை நாங்கள் தெளிவாகவே உணர்கிறோம். அவரின் இடத்தை நிரப்புவதற்கான ஒரு தோழமையும் ஆளுமையும் இன்னும் எம்மிடையே தோன்றவில்லை. இந்த இழப்பை ஓரளவுக்கேனும் ஈடுசெய்யும் முயற்சியில் அவரது சகோதரிகள் புஸ்பராணி அக்காவும், நவரத்தினராணியும் தொடர்ந்து புகலிட இலக்கியப் பரப்பில் அராஜகத்திற்கும் சாதியத்திற்கும் எதிராக உறுதியான குரல்களை ஒலித்துக்கொண்டிருப்பதும், தோழரின் எழுத்துகளைத் தொகுத்துத் தோழரின் துணையியார் மீரா புஸ்பராஜா வெளியிட்டிருப்பதும் நாங்கள் தோற்றுப்போக மாட்டோம் என்ற நம்பிக்கையை இன்னும் எங்களுக்கு அளித்துக்கொண்டிருக்கின்றன.
புஸ்பராஜா அண்ணனைச் 'சத்தியக் கடதாசி' தலைசாய்த்து அஞ்சலிக்கிறது!
தோழர். சி. புஸ்பராஜாவின் இரண்டாவது நினைவு பகிர்தலும் அவரின் படைப்புகளைத் தாங்கி வரும் 'சி. புஸ்பராஜா படைப்புகள்' நூலின் அறிமுகமும் 23 மார்ச் 2008 ஞாயிறு பிற்பகல் 3 மணிதொடக்கம் 8 மணிவரை சார்ஸலில் நடைபெறும்.
முகவரி :
Salle de Rencontre
Rue Jean François
95140 Garge Les Gonesse
தொடருந்து நிலையம்: Garges Sarcelles (RER D)
பேருந்து இலக்கம்: 133, தரிப்பு: Hotel de ville
தொடர்புகளுக்கு: 0664835300 – 0620211641 – 0612803551- 0661803690
No comments:
Post a Comment