Sunday, February 11, 2007

இனிய உதயம் பேட்டி

'ஈழப் பிரச்சினையை மணிரத்னம் அளவு கேவலமா யாரும் சித்தரிக்க முடியாது'

நவீன தமிழ்ர் இலக்கிய வரலாற்றில் புலம் பெயர்ந்து தற்போது பிரான்ஸ் நாட்டில் வேலை பார்த்து வருபவர் ஷோபா சக்தி. நவீன தமிழ் இலக்கியத்தில் மிகத் தீவிரமாக இயங்கிவரும் எழுத்தப்போராளி.இவரது முதல் நாவலான 'கொரில்லா' ஈழ விடுதலைப் போராட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது. இந்த நாவல் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் உண்டுபண்ணியது. இதனை அடுத்து 'ம்' என்றொரு சிறுகதைத் தொகுப்பும் வெளியாகின. தற்போது ஒரு கட்டுரைத் தொகுதி வரவுள்ளது.

பிரான்ஸ் நாட்டிலிருந்து தனது அடுத்த படைப்பை வெளியிட தமிழகம் வந்தவரை பெசன்ட் நகர் மாதா கோவிலை அடுத்துள்ள கடற்கரை மணலில் ஒரு மயக்கும் மாலைப் பொழுதில் சந்தித்து இனிய உதயத்திற்காக உரையாடினோம். அதிலிருந்து........

எந்தச் சூழல் உங்களை எழுதத் தூண்டியது ?
"எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் - அதாவது பத்து வயதில் ஈழத்தில் தமிழ் தேசியம் எழுச்சியுடன் இயங்கிக் கொண்டிருந்தது.