Monday, April 10, 2006

தோழர் சி.புஸ்பராஜாவை நினைவில் நிறுத்தி

ஈழப்போராட்ட முன்னோடியும் மக்கள் கலை இலக்கியவாதியுமான


ஆவணப்பட வெளியீடும்

நினைவுரைகளும்

15.04.2006

சனி மாலை 3.00 மணி

Salle Rencontre

Rue Jean Francois Chalgrin

95140 Garges les Gonesse

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

குடும்பத்தினரும் நண்பர்களும்

தொலைபேசி : 01 39 86 31 30

06 64 81 43 62 / 06 61 80 36 90 / 06 03 83 96 79

vithuran84@hotmail.com

1 comment:

ஈழபாரதி said...

இவரது இந்த சாட்சி புத்தகத்தில் இவரது சகாக்களிற்கே உடனபாடு இல்லை அதைபடித்துவிட்டு அவரது நண்பர்களான கோவைநந்தன் மற்றும் உமாகாந்தன் போன்றவர்களே எதிர்ப்பு அறிக்கை விட்டனர் அதைவிட அவரது புத்தகத்தில் முதல் தற்கொலைபோராளி சிவகுமாரன் தனது மடியில்தான் உயிரை விட்டார் என்று ஒரு புளுகைவேறு அள்ளி விட்டிருக்கிறார் இவரது புளுகை பக்கம் பக்கமாக விபரிக்கலாம் ஆனால் அது இப்ப தேவையில்லாதது அதைவிட்டு என்றை இங்கு விளங்கபடுத்த விரும்புகிறேன் மாணவர் பேரவை என்பது தமிழீழ விடுதலையை நோக்காக கொண்டோ அல்லது ஈழவிடுதலைக்கான ஆயதபோராட்டத்திற்கான ஆரம்ப அமைப்போ அல்ல அது அன்று இலங்கை அரசின் தரபடுத்துதல் மற்றும் மாணவரது உரிமைகளிற்காக மட்டுமே சாத்வீக போராட்டங்கள் நடத்துவதற்காய் தொடங்கபட்டது அது தொடங்கி சில காலங்களிலேயே சிலர் கூட்டணி பின்னால் சிலர் தனியாக சிலர் ஆயுதபோராட்ட அமைப்புகள் என்று பிரிந்து போய் விட்டனர் அதில் இந்த புஸ்பராசா ஈபிஆர் எல் எவ் அமைப்பின் முழுஆதரவாளராய் செயற்பட்டாரே தவிர இவர் அந்த அமைப்பின் ஆயுதபயிற்சிபெற்ற ஒருவர்அல்ல பிரானன்சில் வந்து பின்னர்அந்த அமைப்பிறகாக வேலைகள் செய்தார் அதேநேரம் கூட்டணிக்கு கொடி பிடித்ததும் கோசம் போட்டதும் இவரது போராட்ட வடிவங்களில் ஒண்று

ஆனால் எல்லாருமே இறந்து ஒரு நாள் இறந்து போகிறவர்தான. ஒருவர இறந்த பின்னர் மற்றையவர்கள் அட பாவம் நல்ல மனிசன் இறந்து விட்டார் எண்று சொல்ல கூடிய செயல்களை அவரது வாழ் காலத்தில் செய்திருந்தால் அவர் இறப்பிலும் ஒர் அர்த்தம் இருக்கும் அதை விட்டு அட பாவி மனிசன் ஒரு மாதிரி போட்டான் என்று கூறு மளவிற்கு அவர் வாழ் நாளில் நடந்திருந்தால் அது அவர் இறப்பு பலருக்கு நிம்மதியை தருகின்றது என்பதே. இறந்து போவோம் என்று தெரியாமலா இவர்கள் இருக்கிற காலத்தில் இத்தனை கூத்துகள் அடித்தனர். அதை விட இந்த புஸ்பராசாவை நான் நன்குஅறிந்தவன் என்கிற முறையில்தான் எனது கருத்துகளை சொன்னேன். அதே போல இறப்பு என்பது எல்லா மனிதனையும் புனிதனாக்கி விடாது.மற்றையது அஜீவன் நீங்கள் கூறியது போல ஆயுத போராட்ட ஆரம்பத்தில்: பல இளைஞர்களும் ஒரு வேகத்தில் தாங்கள் எந்த இயக்கத்திற்கு போகிறோம் யார் அதன் தலைவர் எப்படியானவர்அவர்கள் கொள்கைகள் என்ன என்று அதிகம் தெரியாமல் தான் போனார்கள் அது உண்மை ஆனால் காலப்போக்கில் உண்மையாக போராடுகிற இயக்கம் எது யார் உண்மையான தலைவன் எண்று அதை உணர்ந்து பலரும் சரியான தலைமையின் கீழ் அணி சேர்ந்ததையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் காரணம் ஒரு வேற்று நாட்டு காரனுக்கு கட்டாயம் விழங்க படுத்த வேண்டும் ஆனால் போராட்டகாலத்துடன் வாழ்ந்தஒரு தமிழனுக்கு இதையெல்லாம் இனி தனி தனியாக விழங்க படுத்த வேண்டிய அவசியம் இல்லையெண்று நினைக்கிறேன் அப்படி பலரும் சரியான பாதையில் இணைந்த போதும் இவர் போன்ற சிலர் தங்கள் வீம்பிற்கு வெளியே நின்று எம்மை நோக்கி சேறு வீசியவர்கள். அவற்றையெல்லாம் பாத்தும் அனுபவித்தர்களுள் நானும் ஒருவன். மற்றது தனிப்பட பிரபாகரனை பற்றி ஒரு சில வரிகள் தனது புத்தகத்தில் நல்லபடியாக எழுதியுள்ளார் உண்மைதான். அதே போல இந்திய படை காலத்தில் முதல் யாழ் படைத்தளபதியாக இருந்த ஹரிகீத் சிங்கும் ஏன் டிக்சித்தும் தான் தாங்கள் எழுதிய புத்தகத்தில் பிரபாகரனின் வீரத்தையும் கொள்கையையும் பாராட்டி எழுதியிருக்கின்றனர் அதற் காக அவர்கள் செய்தது எல்லாம் சரியெனறாகி விடுமா???

டக்ளஸ் கூட வெலிகடைக் கொலைகளில் இருந்து தப்பியவர். அவரையும் நாம் நாட்டுப்பற்றாளர் என்று கெளரவிக்கலாமே.


ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற புஸ்பராஜாவின் புத்தகத்தை நானும் வாசித்தேன். அவர் சிறையில் வேதனைகளை அனுபவித்தார் என்று அறியமுடிந்தது. அவரைவிட மிகவும் கொடுமையான சித்திரவதைகளையும், துன்பங்களையும் அனுபவித்த பலர் மண்ணோடு மண்ணாக மாண்டுபோனார்கள்;சிலர் தற்போதும் வாழுகின்றார்கள். அவர்களையும் நாம் நினைவுகோர வேண்டும்.

ஒருவர் தனது கொள்கையிலிருந்து எப்போது வழுவி, கொண்ட கொள்கைக்கு எதிராக செயற்படுகின்றாரோ, அப்போதே அவர் தனது முந்தைய சிறப்புத் தகுதிகளை இழந்து சாதாரணமானவராகின்றார், அல்லது துரோகியாகின்றார். எமது போராட்டத்தில் பல உதாரணங்கள் உள்ளன என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியத்தைப் படிக்கும்போது வந்த கேள்விகள்.
1. மக்களின் செயற்பாடுகள் புஸ்பராஜா எதிர்பார்த்ததைவிட
மிகவும் தீவிரமாக இருந்தன. மாணவர் அமைப்பினர், மக்களின் விருப்பம் என்னவென்பதை அறிந்து மக்களை அரசியல் மயப்படுத்த முடியாமல் இருந்தனர். போராட்டத்தை முன்நகர்த்த மக்கள் தயாராக இருந்தும், இவர்களால் சரியான தலைமையை, வழிநடத்தலைக் கொடுக்கமுடியவில்லை. மாறாக தங்களுக்குள் மோதிச் (கொள்கை மோதலும், பதவி ஆசையும்தான் அப்போதைய பிரச்சினைகள்) சிதந்து கொண்டிருந்தனர். இதை புஸ்பராஜா ஒப்புக்கொண்டமாதிரித் தெரியவில்லை.

2. சிறையிலிருந்து வெளிவந்த 80களின் ஆரம்பப் பகுதிகளில் போராட்டம் முனைப்புடன் வேகமாக வளர்ந்தது. ஆனால் இவரால் அந்தக் காலத்தில் காத்திரமான எந்தப் பங்களிப்பும் செய்யமுடியவில்லை. போராட்டத்தை விட்டுவிட்டு பிரான்ஸுக்கு ஏன் புலம்பெயர் என்ற காரணத்தை சொல்லவேயில்லை. ஏதோ நாட்டைவிட்டுப் போகவேண்டும் என்ற எண்ணம் இருந்ததாக மட்டும்தான் கூறுகின்றார்.

3. ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் தலைவர்கள் நாபா, பெருமாள் போன்றோர் இந்திய இராணும்வக் காலத்தில் மக்கள்விரோத நடவடிக்கைளில் ஈடுபட்டபோது, இவரால் அவர்களின் கொள்கைகளை செயற்பாடுகளை மாற்றமுடியவில்லை. மாறாக அசோக் ஹொட்டலில் தங்கி, ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் குண்டர்கள் புடைசூழ நகர்வலம் வந்தார் என்றே எழுதுகின்றார். குறைந்தபட்சம் ஈ.பி.ஆர்.எல்.வுடனான தொடர்புகளை அந்த நேரத்தில் கைவிட்டிருக்கலாம்.

வாசித்து முடித்தபோது, இவர் போன்றவர்கள் நமது தலைவர்களாக வராமல்விட்டது நாம் செய்த புண்ணியம் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.

பலவற்றில் எனக்கு உடன் பாடு இருந்தாலும், புஸ்பராசா விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று நான் நினைக்கவில்லை.ஏனெனில் அவர் வரலாறு என தனது விருப்பு ,வெறுப்புக்களை சேர்த்து எழுதிய புத்தகம்,சில இந்தியப் பதிரிககளால் அரசியல் நோக்கங்க்களுக்காக வரலாறு ஆக்கப்படக் கூடிய சாத்தியப்பாடுகள் உண்டு.குறிப்பாக இந்திய அமைதி காக்கும் படையுடன்,இபிர்லேf இயங்கிய காலத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள்,படுகொலைகள் முற்று முழுதாக இவரது புத்தகத்தில் மறைக்கப் பட்டுள்ளன.ஆகவே இவரை விமர்சிக்காமல் விடுவது வரலாறு என்று இவர் எழுதிய புத்தகத்தை விமர்சனம் இன்றி வருங்காலச் சந்ததி ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலமையை உண்டு பண்ணும்.ஆகவே இவரின் பின் புலம்,இவரின் செயற்பாடுகள் ஈழ விடுதலைபோரின் வரலாற்றின் அடிப்படியில் விமர்சிக்கப் பட வேண்டிய அவசியம் இருக்கிறது.இவர் ஆடிய ஆட்டம் என்ன என்பது பலருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்,ஆனால் இறுதியில் தனது பாவங்களைக் கழுவ முயற்சித்தார் என்பது உண்மையே.
மறப்போம்,மன்னிப்போம் ஆனால் வரலாற்றைத் திரியோம்.