Tuesday, June 06, 2006

நெஞ்சு துடிக்குது ஜெமினி! ஜெமினி! - ஷோபாசக்தி

நான் அறிந்தவாறு தேனீ இணையத்தளத்தின் நெறியாளரும், எல்லோரும் அறிந்தவாறு TBC வானொலியின் ஜெர்மனி ஏஜென்டுகளில் ஒருவருமான ஜெமினிக்கு வணக்கங்கள்.

நீங்கள்,அவதூறுகளால் நிரப்பி எனக்கு மரியசீலன் எழுதிய பகிரங்கக் கடிதத்தை 28.05.2006ல் உங்கள் தளத்தில் பிரசுரித்திருந்தீர்கள். நானும் உடனடியாகவே மரியசீலனின் கடிதத்தில் உள்ள பச்சைப் பொய்களையும் அவதூறுகளையும் சொல்லுக்குச்சொல் வரிக்குவரியாகச் சான்றுகளுடன் தெளிவுபடுத்தி ஒரு கட்டுரையை எழுதி உங்களுக்கு 31.05.2006ல் அனுப்பியிருந்தேன். நீங்களும் என் பதிலைத் தேனீயில் பிரசுரிக்கப் போவதாக 01.06.2006ல் தேனீயில் அறிவித்திருந்தீர்கள். தேனீ எனக்கு வழங்கப் போகும் கருத்துச் சுதந்திரத்தை எண்ணி நான் அகமகிழ்ந்திருக்கையில் இன்று " ஷோபாசக்தியின் பதில் பிரசுரிக்கப்படமாட்டாது" என உங்கள் தளத்தில் அறிவித்திருக்கிறீர்கள்.என்ன தோழரே? தீவானைத் தீவானே இப்படிச் சுத்தலாமா?

எனது பதிலை பிரசுரிக்க மறுத்ததற்காக நீங்கள் சொல்லும் சப்பைக் காரணம் உங்களுக்கே யோக்கியமாகப்படுகிறதா? வேறு இணையத்தளங்களில் எனது பதில் பிரசுரிக்கப்பட்டதால் தேனீ பிரசுரிக்காது என்கிறீர்கள். நீங்கள் இதுவரையில் வேறு இணையத்தளங்களில் பிரசுரமான கட்டுரைகளைத் தேனீயில் பிரசுரித்ததே இல்லையா? அவ்வாறான பலபத்து மறுபிரசுரக் கட்டுரைகள் தேனீத் தளத்தில் வாசிக்கக் கிடைக்கின்றனவே! உங்கள் தளத்தில் வெளியான ஆதாரங்களற்ற அவதூறுகளுக்கான பதிலை, உங்களுக்கெனத் தலைப்பிட்டு எழுதப்பட்ட பதிலை, உங்களுக்கு உடனடியாகவே அனுப்பப்பட்ட பதிலை, முக்கியமாகத் தேனீயில் என் மீதான அவதூறுகளை மட்டுமே வாசித்திருந்த தேனீயின் குறிப்பான வாசகர்களுக்கு என் தரப்பைத் தெளிவுறுத்தும் பதிலைத் தேனித் தளத்திலேயே வெளியிடுவது தானே தார்மீகம்? அத் தார்மீகப் பொறுப்பு ஏன் உங்களிடமில்லை? sathiyak.blogspot.com மிலும் tamilcircle.netலும் பிரசுரிக்கப்பட்டிருந்த என் பதிலுக்குத் தேனியில் Linkகாவது கொடுக்கும் ஆகக் குறைந்தபட்ச ஊடக அறங்கூட உங்களிடம் கிடையாதா? நீங்கள் பசப்பித் திரியும் கருத்துச் சுதந்திரத்தின் யோக்கியதை இவ்வளவுதானா என்று கேட்கிறேன்? பதில் சொல்லுங்கள் தோழரே!

8 comments:

Anonymous said...

இதுதான் தேனீ,
இதுதான் சன நாய் அகம்.

தேனீ=சனநாய் அகம்.

இது தெரியாத தோழரா நீர்.

Anonymous said...

தோழரே!
உங்களுக்குத் தேனீயின் பம்மாத்து இவ்வளவு காலமும் தெரியாதா? அல்லது தேனீயின் 'கதை அளப்புகள்' உங்களுக்கும் பிடிக்காத (100% & 110% புகழ்) புலிகளுக்கு எதிரானவை தானே என 'எதிரியின் எதிரி...' த்தனமான கொள்கைக்கு உடன்பாடானதா? அல்லது 'தீவானை தீவான் சுத்த மாட்டான்' என்ற நம்பிக்கையில் இருந்தீர்களா? ( விரும்பினால் 'சோத்துக்கடை வர்க்க நலன் சார்ந்த' போன்ற பெரிய சொற்பதங்களை பாவித்து பம்மாத்தும் காட்டலாம்)தீவானின்ர பதிலைப் போடாமல் விட்டாலும் 'தீவாரத்தி' மதிவதனியின்ர சத்தியெடுத்த கதை போட்டிருக்கிரார் பாருங்கோ ஒருத்தரும் அடிக்கேலாது. முக்கியமா உங்கட நீட்டிமுழங்கலில சொன்னால் 'யாழ்பாண சாதிய வெறி கொண்ட, சாதியத்துக்கெதிராக எந்த 'மயிரையும்' புடுங்காதவங்களால கூடச் செய்யஏலாது!

Anonymous said...

soba sakthy

neeyum appadi
jeminiyum appadi

enna seivathU
thamil makkalin thali vithi

Anonymous said...

தாங்கள் குறிப்பிட்டது போன்று ஞானம் அம்மான் வலுக்கட்டாயமாக சைனைற் ஊட்டப்பட்டு கொல்லப்பட்டார். இது 1986களில் நடைபெற்றது. அதன் பின்னர் பல விலகினர்.

அநுராதபுரப்படுகொலை உட்பட அன்றையக் காலத்தில் நடைபெற்ற அனைத்து பொலிஸ் நிலையத் தாக்குதல்கள் அன்று மன்னார் குரூப்) என்று அழைக்கப்பட்ட விக்ரர் தலைமையிலானவர்களே செய்து முடித்தனர். இதே போல யாழ் பொலீஸ் நிலையமும் விக்ரர் தலைமையிலான குழுவே செய்து முடித்தனர்.

அனுராதபுரக் கொலையில் நம்பந்தப்பட்டவர்கள் இன்று பலர் வெளிநாடுகளில் பரந்து இருக்கின்றனர். அப்படியாயின் தாங்கள் மன்னார் குழுவில் அங்கம் வகித்தீரோ?


அதே போல எதிரிக்கு எதிரி நண்பர் என்ற கருத்துப் பாட்டிற்கு இசைவாகவே தேனீ இன்று செல்கின்றது. இன்றைய தேனியின் கருத்து வெறும் புலியெதிர்ப்பு நிலையில் இருப்பது கவர்ச்சிவாத அரசியல் நிலைப்பாட்டிற்கு உட்பட்டதேயாகும்.
சில பிரச்சனைகள் பொதுவாக காணப்படுவது என்னவெனில்
கருத்தைக் கொண்டவர்கள் தனித்தீவாக விரிந்து இருக்கும் நிலை. (தீவார் இல்லை நான் குறிப்பிடும் தீவுகள் )
ஒருவருக்கொருவர் நம்பிக்கையின்மை
வர்க்க அரசியலை செய்கின்றனர். இவைகள் பாட்டாளிவர்க்க நிலைப்பாடாக ஒரு பிரிவினரும். அதனையே திரிந்து மறுபுறத்தினரும். தீவிர புலியெதிர்ப்பு என்ற சக்கரத்தில் இருந்து உழல் கின்றனர்.
இந்தப் பிரிவினர் சாதாரண உண்மைநிலையான தம்மவர் என்ற கருதுகோளை சரியாக இனம் கண்டு கொள்ளவில்லை.
ஒரு சமூக உறுப்பினரை கொல்லப்படும் போது சக சமூகத்தவன் அரசியல் குருடன் ஆகின்றார்.
இதனை பார்ப்போமானால் மட்டக் களப்பில் புலிகள் செய்யும் கொலையினால் புலிகள் தமது தளத்தை நீண்ட காலத்தில இழக்கவே செய்வர்.
இதே போல வடக்கில் அல்லது கிழக்கில் எதிரியுடன் (இவைகள் புலிகளால் நடைபெற்றாலும் கூட அவை இராணுவம் அல்லது மற்றைய இயக்கங்கள் செய்து என்றும் வரும்) கூடிச் செயற்படும் கொலைபாதகங்கள் கூட மக்கள் மத்தியில் இருந்து விலத்தி வைக்கவே செய்கின்றது.

EPRLF, ENDLF போன்றன இந்திய இராணுவத்துடன் சேர்ந்தியங்கி என் விழைவைக் கண்டார்கள்? அவர்கள் மக்கள் மத்தியில் இருந்து அகற்றப் பட்டார்> சிறு படையுடன் பிரபா காட்டுக்குள் சென்று இரத்தத்தைக் காட்டியே பெரும் பாசீசப் படையை கட்டியெழுப்பி நாட்டைச் சுடுகாடாக்கின்றார்.
இன்று இணைந்து கொள்ளும் பின்தங்கிய வர்க்கத்தின் போராளிகளை எவ்வாறு புரட்சிகர சக்திகளாக மாற்றுவது என்பது பற்றிச் சிந்திக்காது.
இவர்களின் செயற்பாடாது அவர்களை பிரபாகரனை பாதுகாக்கும் சிறந்த வீரர்களாக உருவாக்கின்றது.

Anonymous said...

எனது பதிலைத் தேனீ பிரசுரிக்காமலிருப்பது....இன்றுடன் எட்டு நாட்கள்!

So, who am I? said...

Shobasakthi, நெஞ்சு துடிக்குது ஜெமினி! ஜெமினி! - ithu oru thamil padal thané?

Anonymous said...

எனது பதிலைத் தேனீ பிரசுரிக்காமலிருப்பது....இன்றுடன் பன்னிரண்டு நாட்கள்!

Anonymous said...

என்ன தீவானும் தீவானம் சேந்து நாடகம் ஆடுறியளோ? உப்பிடி செற்றப்பண் ணி ஒரு விளம்பரம் தேவையோ?