Thursday, March 06, 2008
எதிர்வினையாற்றுவது நம் மரபு!
- சுகன்
'குமிஞ்சான்', 'குள்ளன்' என்று ஒருவரை எள்ளி நகையாடும் மனோபாவத்திடம் விவாதிப்பது மனித உணர்வுள்ள எவருக்கும் சாத்தியமில்லை. இலக்கியம் அரசியல் இவற்றின் பேரால் இத்தகைய வக்கிரங்களை எதிர்கொள்வது அவற்றிற்கு மரியாதை செய்வதுமாகாது. கவுண்டமணியின் 'கோமுட்டித் தலையா', 'நெல்சன் மண்டலோ மண்டையா' போன்ற வசவுகளுக்கும் 'குமிஞ்சான்' என்று வசைபாடும் மனநிலைக்குமுள்ள அருவருப்பான ஒப்புவமை, ஒற்றுமையைக் கவனிக்கும் ஒருவருக்கு இதுதான் கவுண்டர் கல்ச்சரோ ( கவனிக்க : Counter Culture அல்ல) என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாததே.
இருந்தும்,
செருப்பையும் விளக்கையும் வைத்துக் கூட்டம் தொடங்குவதற்கு ஜ.ரா. இப்படி ஆத்திரப்படத் தேவையில்லை. அது- அது அதனதன் இடத்தில் இருக்க வேண்டுமென்றும் ஒவ்வொருவரும் அதனதன் இடத்தில் அவற்றை வைக்க வேண்டுமென்றும் எதிர்பார்ப்பவருக்கு இராணுவக் கல்லூரி இருக்குமிடத்தை நோக்கித்தான் எம்மால் கைகாட்ட முடியும்.
செருப்பையும் விளக்குமாறையும் வைத்து நாம் கூட்டம் தொடங்குவோம். முடிந்தால் பார்ப்பனர் ஒருவரை அழைத்துவந்து செருப்புக்கு பூஜையும் செய்வோம். ஆர். எஸ். எஸ்.காரர்களைத் தவிர வேறுயாரும் இதற்காக அதிருப்தியடைவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஜமுனா ராஜேந்திரன் போர்த்தியிருக்கும் கிழிந்த இடதுசாரிப் போர்வையினுள் ஒளிந்திருப்பது ஆர். எஸ். எஸ் பசுத்தான் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. இந்தப் பசுவில் முன்பொரு முறை நான் பாலே கறந்து காட்டியிருக்கிறேன். அந்த விபரம் 'மாட்டுப் பைத்தியமும் மார்க்ஸியமும் முப்பது வெள்ளிக்காசுகளும்' என்ற தலைப்பில் கட்டுரையாக 'நாட்டாமை' தொகுப்பில் (1999) வெளியாகியுள்ளது.
முரண்பாடு என்று பார்த்தால் எனக்கும் ஜ.ரா.விற்குமான முரண்பாடு இப்படித்தான் தொடங்கியது: பத்துப் பதினைந்து வருடங்களிருக்கும், 'சுவடுகள்' ( நோர்வே) இதழில் ஜ.ரா. "புகலிட இலக்கியம் தனது அரசியல் நிலைப்பாட்டிற்காக கசாயம் குடிக்க வேண்டும்" என ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தமிழில் புகலிட இலக்கிம் குறித்தும் ஐரோப்பிய, சர்வதேச புகலிட இலக்கிங்கள் குறித்தும் நாம் விவாதித்து வந்த காலமது. கருத்துச் சுதந்திரம் மிகவும் நசுக்கப்பட்ட காலமது. (அந்த கருத்துச் சுதந்திர மறுப்பின் 'சைபர்' வடிவம்தான் தற்போது இணையங்களில் ஒளிந்திருந்து பின்னூட்டக் கல் எறிவது.)
"சல்மான் ருஸ்டி உனக்குப் பொலிஸ் காவல், எனக்கு?" என்ற புகழ்மிக்க வரிகளை இளவாலை விஜயேந்திரன் எழுதிய காலமது. புகலிட இலக்கியத்தின் அடிப்படைக் கூறுகளை நாம் வரைவு செய்திருந்தோம். புகலிட இலக்கியம் அதன் பாஸிச எதிர்ப்பு, போர் எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு.... என்பவற்றின் அடிப்படையில் எதிர்ப்பு இலக்கியம் என்பது நமது தீர்மானங்களில் ஒன்று. ஆனால் இந்த எதிர்ப்பு இலக்கிய அரசியல் நிலைப்பாட்டிற்காக புகலிட இலக்கியம் கசாயம் குடிக்க வேண்டுமென்றார் ஜ.ரா. அந்த மருத்துவ சிபாரிசைக் கண்டித்து நான் சுவடுகள் சஞ்சிகைக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதினேன்.
தனக்குத் தெரியாத விடயங்களில் (தலித் அரசியல், கவிதை, மற்றும் பல ) ஜ.ரா. இப்போது மூக்கை நுழைப்பது போலத்தான் அப்போதும் அன்னார் ஈழத்து அரசியலில் தலையிட்டார்.
நான் சொன்னேன்: "தோழரே தயவு செய்யுங்கள். ஏனெனில் உங்களால் ஈழத்து அரசியலின் அவலங்களை ஒருபோதும் சரிவரப் புரிந்துகொள்ள முடியாது. அப்படிப் புரிந்துகொள்வதற்கு நீங்கள் உண்மையில் ஈழத் தமிழனாக இருக்க வேண்டும், துரத்தப்பட்டிருக்க வேண்டும், புலியிடமோ ஆர்மியிடமோ இரண்டு அடியாவது வாங்கியிருக்க வேண்டும், அகதியாகக் கள்ளப் பாஸ்போர்ட்டில் வந்திருக்க வேண்டும்..." இப்படியாக. ( நினைவிலிருந்து எழுதுகிறேன்)
இன்றுவரை ஜ.ரா.விற்கு இவை பிடிபடுவதேயில்லை. ஈழத்து அரசியலைப் புரிந்துகொள்ளச் சொல்லி ஜ.ரா.வை யாரும் கேட்கவில்லை. அவர் அவஸ்தை அவருக்கு. ஆனால் எமது அரசியலைப்பற்றி எமக்கே பாடம் எடுக்க அவர் முற்பட்டபோது 'No Thanks' என்று சொல்வதைத் தவிர வேறு எப்படி அவரை எம்மால் எதிர்கொள்ள முடியும். அவரைப் புலிகளின் ஈழமுரசுவிலும் ஐபிசி ரேடியோவிலும் என்னால் எதிர்கொள்ள முடியாது.
ஜ.ரா.வை மீண்டும் எதிர்கொண்டது இன்னும் சுவாரசியமானது. பாரிஸ் இலக்கியச் சந்திப்பில் எந்த விடயம் குறித்து அவர் உரையாற்ற வந்தார் என்பது ஞாபகத்திலில்லை. ஆனால் அவர் உரையாற்றத் துவங்க முதலே தோழர். ரவிக்குமாரை தலித் விரோதியாக அறிமுகப்படுத்தித்தான் அவர் உரை தொடங்கிற்று.
அப்போது நான் எழுந்து "தோழர் ரவிக்குமார் தலித் அரசியலை நிலை நிறுத்தியவர்களில் முதன்மையானவர். போதி, தலித், நிறப்பிரிகை, காலச்சுவடு பத்திரிகைளின் ஆசிரியர் குழுவில் ஒருவர். தலித்துகளின் விடுதலை அரசியல் குறித்து ஏராளமாக எழுதியிருப்பவர். முக்கியமாக அவரொரு களச் செயற்பாட்டாளர். தமிழில் தலித் அரசியலிற்கு உறுதியான அத்திவாரமிட்டதில் அவரின் சிந்தனையும் உழைப்பும் மகத்தானது. அவரை நீங்கள் தலித் விரோதியாக அறிமுகப்படுத்துவது தவறு! தவறு! தவறு!!" என்று எனது மறுப்பைத் தெரிவித்தேன்.
உடனடியாக எதிர்வினையாற்றுவது நமது மரபு! இது இடையூறு செய்வதல்ல! உடனடி எதிர்வினை! ரவிக்குமாரை நான் கௌரப்படுத்தியது ஜ.ரா.விற்குப் பிடிக்கவில்லை. ரவிக்குமாரை முகாந்திரமாக்கித் தலித் அரசியலின் மீது சேறடிக்கப் புறப்பட்டவருக்கு இந்த ஒரேயொரு எதிர்வினையிலேயே அவர் தயாரித்துக்கொண்டு வந்த உரை குழம்பியிருக்க வேண்டும். 'தேசம்' இணையத்தில் எழுதிய கட்டுரையில் நான் தொடர்ந்து அவரின் உரையைக் குழப்பியதாக அவர் உண்மைக்குப் புறம்பாக எழுதுகிறார்.
ஜ.ரா. பேச்சு முழுவதும் எனனைப் பார்த்தவாறே பேசியபடியிருந்தார். வன்முறை, அரசியல் நாகரீகம் இவற்றை ஈழமுரசிலும் ஐபிசி ரேடியோவிலும் பேசுவதுதான் ஜ.ரா.விற்குப் பொருத்தமாயிருக்கும். எந்தத் தரிசனமும் அவர் பேச்சில் அன்றும் இருந்ததில்லை, என்றும் இருந்ததில்லை.
முன்பும் ஒரு தடவை லண்டனில் அவர் பேசப் பார்த்திருக்கிறேன். தோழர். சி. சிவசேகரமும் ஜ.ராவின் அந்தப் பேச்சின் போது மண்டபத்தில் அமர்ந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்ததால் சிவசேகரம் வீட்டிலிருந்து வரும்போதே பஞ்சைக் கையோடு எடுத்துவந்து தனது காதுகளிற்குள் திணித்துக்கொண்டு அமர்ந்திருந்தோடு மட்டுமல்லாமல் அருகிலிருந்தவரிடமும் 'உமக்கும் பஞ்சு வேணுமோ?' என்று கேட்டதாகவும் அறிந்தேன். அதை உறுதிப்படுத்துவதிற்கு இப்போதும் எனக்கு ஆர்வமில்லாததால் விட்டுவிடுகிறேன். கடைசிவரை நாம் பேசுவதை எல்லோரும் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்து கைதட்டுவார்கள் என்று நினைப்பதைப் போல நானறிந்தவரை முட்டாள்தனம் வேறெதுவுமில்லை.
இனி ஜ.ரா.வைக் கடுப்பேற்றிய அந்தக் கவிதைக்கு வருவோம். அந்தக் கவிதையும் தலைப்பும் என்னவென்றே என்னால் இங்கே முழுமையாகத் தரமுடியவில்லை. அவ்வப்போது தோன்றுவதை எழுதி அனுப்பிவிடுவது. நண்பர்கள் பலரின் வலியுறுத்தலின் பேரில் கூட கவிதைகளைத் தொகுப்பாக்கவோ அல்லது ஞாபகங்களிலிருந்து மீட்டு எழுதவோ மனநிலையில்லை.
அநேகமாகக் கவிதை இறுதியில் இப்படியாக இருந்திருக்க வேண்டும்:
கவிதையின் தலைப்பு 'சார்ள் து கோல் விமான நிலையம்' அல்லது 'ஒஸ்லோ விமான நிலையம்' என்றிருக்கலாம்.
தரையிறங்கும் காலநிலை விமானத்திற்கில்லை.
குடிக்க ஏதாவது வேண்டுமா என
விமானப் பணிப்பெண் கேட்க
ஒரேன்ஜ் யூஸ் அல்லது முலைப்பால்.
(வேறு எதைக் கேட்கப் போகிறேன்)
எனது ஊருக்கு வா
சுடுமணலால் மூடி முரல் சுட்டுத் தருகிறேன்.
இப்படி முடியும் அந்தக் கவிதை. இதையொட்டி நான் எதிர்கொண்ட ஒரு நெகிழ்ச்சியான தருணம்: எனது பேரன்புக்குரிய நண்பி ஒருத்தி "உனக்கு இந்த உலகத்தில் முதலாவதாக என்ன பிடிக்கும்?" என்று கேட்க நான் "முரல் மீன்" என்றேன். நீண்ட மவுனத்தின் பின் "நீ என்னைத்தான் பிடிக்கும் என்று சொல்வாய் என்று நினைத்திருந்தேன்" என்றாள் அவள்.
இப்படியாகக் கவிதையும் அபத்தமான கவித்துவத் தருணங்களுமான வாழ்க்கை இருப்பதால் புத்தகங்களிலிருந்து வாசிப்பதில் முலைப்பாலை மட்டும் பத்து வருடங்களாக ஞாபகத்திலிருந்து அகற்றாத ஒருவரின் மூளையை எப்படி இனங்காண்பதென்றே எனக்குப் புரியவில்லை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே செத்த மூளைகளுடன் எப்படி உரையாடுவது என்றும் புரியவில்லை.
'மதிப்பு மறுப்பறிக்கை' கதையை எழுதியதற்காக 'லா சப்பலில்' எனக்கு மரணதண்டனையை சுட்டிக்காட்டிய திரு. பா. அவர்கள் மீது எனக்கு மதிப்புண்டு. பிரான்ஸில் புலிகளின் முக்கிய பிரமுகர் அவர். எல்லோரையும் விட சமூகத்தின் மீது அவருக்கு அதிகம் பொறுப்பிருக்கிறது. கூட்டுக் கலவி வாழ்க்கை முறையின் ஆரம்ப காலங்களில் நாங்களிருந்தபோது நான் எழுதிய மிகச் சாதாரண கதையது. அந்தக் கதை 'எக்ஸில்' இரண்டாவது இதழில் வெளியாகியிருந்தது. அதை அப்போதே எல்லோரும் நல்வாய்ப்பாக மறந்துவிட்டார்கள். கனடாவிலிருந்து ஒருவர் வந்தார். மீண்டும் ஞாபகமூட்டினார். இந்தா பிடி! இந்தா பிடி! என்று. வாசிப்பதாலேயே ஒருவன் பூரணமடைகிறான்.
இறுதியாக,
ஆர். எஸ். எஸ்.காரர்களைத் தவிர மற்ற அனைவருமே தலித் விடுதலை அரசியலுக்காக உழைக்கலாம். தோழர்கள் பொன். கந்தையா நா.சண்முகதாசன் கே.ஏ. சுப்பிரமணியம் போன்ற வெள்ளாள சமூகப் பின்னணியிலிருந்து வந்தவர்கள் சாதியத்திற்கெதிராகப் போராடியதைப்போல சாதிய விடுதலையில் அக்கறையுள்ள எவரையும் தலித் அரசியல் தன்னோடு இணைத்துக்கொள்ளும். ஒருவரின் அரசியற் செயற்பாட்டை வைத்துத்தான் அவர் தலித் அரசியல் செயற்பாட்டாளரா அல்லது போலி தலித் அரசியலாளரா அல்லது சாதியபிமானியா என்று அடையாளம் காண முடியுமே தவிர அவரின் பிறப்பை மட்டும் வைத்துக்கொண்டு போலி என ய.ரா முத்திரை குத்துவதில் தலித்துகளை தனிமைப்படுத்தி ஒதுக்கும் மேற்சாதியத் திமிரும் விசமத்தனமும்தான் தெரிகிறது.
வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான், ஒருவரைத் தவிர.
Wednesday, March 05, 2008
NO MAN’S LAND
He fled for his life from Sri Lanka 15 years ago and now lives in France where he does odd jobs to earn a living. Shobasakthi, the author of the ‘auto-fiction’ novel Gorilla, speaks about his tumultuous journey and how he plans to use his writing as a weapon to effect change in his native land and the Sri lankan Tamil diaspora
ELLE:What was the political situation in Sri Lanka while you were growing up and how did it affect you and your family?
SHOBASAKTHI:When I was seven years old, the Tigers committed their first political killing: The mayor of Jaffna, Alfred Duraiappa was shot by Prabhakaran. Because of their anti-government activities and intermittent socialist speeches on class equity and anti-imperialism the youth saw them as the saviors of the Tamil people.
I was born in a small, poverty-stricken island in the northern part of Sri Lanka. The various political circumstances in the country did not have a direct impact upon my family or village at that point. We were consumed in finding our daily bread and kerosene. And as my father was a local thug, all we cared was to protect the family from the violence of the police who came to our house periodically in search of him.
ELLE:Could you tell us a little about how you enlisted into the LTTE back in the early 1980s?
S:After the Sri Lankan government’s pre-planned attack on Tamils in July of 1983, the anti-government feeling among Tamil youth rose like a massive wave. We felt greatly encouraged when the Indian government provided arms and training to the young men demanding a separate state of Eelam. We were made to believe that the caste, class, and ethnic oppressions we were suffering then would all be eradicated when Tamil Eelam was won. The two major incidents of 1983 – the gruesome murders of 53 Tamil prisoners at Welikade prison by the machinations of the state, and the shiploads of Tamils who were forced out by ethnic violence in the southern and western parts of Sri Lanka and then arrived in Jaffna as refugees – propelled me towards joining the movement. I was a child soldier at 15.
ELLE:What drove you to disillusionment with the movement?
S:In 1985, the Tigers proclaimed a cease-fire in order to participate in peace talks in Bhutan. I began to lose my faith in the movement at that point. But if you ask me now, I would repeat what the President of Croatia said at the U.N. recently: “To have spent 10 years in peace talks is better than 10 days of war.”
Today, I have sound reason and proof to reject the Liberation Tigers completely on political grounds. All year, I write pages and pages on this subject. I strongly believe that the violence and atrocities committed by the Sinhala majority government is the only reason that the Tigers exist. Today the Liberation Tigers have formed themselves completely into right-wingers. They bow to the dictates of the United States of America and the European Union. The L.T.T.E. has none of the qualities that a people’s liberation movement ought to have. With their past political actions, the Liberation Tigers have identified themselves as an imperialistic, petit-bourgeois movement. With their sustained attacks and killings of other movements, alternative thinkers, writers, labour unionists, and Muslim and Sinhala peasants, they have shown themselves to be fascists.
ELLE:You speak of great torture inflicted on you and your family by both the LTTE and the Indian Peace Keeping Fotce. Would you say that they were two sides of the same coin?
S:You can also add the Sri Lankan government to this question. All three of them are similar in their activities of maiming and killing the Tamil people and transgressing human rights. There might be a difference between them in the amount of harm inflicted but there is none in the manner. To speak openly, it is from the Tigers that I face the most mortal danger. But if I were to speak from the position of many Eelam Tamils, we find the Tigers tolerable when compared to the Sri Lankan government. And even as we shake our heads over our fates in having to tolerate these two, we can never again bear the brunt of the IPKF.
ELLE:How painful was the process of rebuilding your life after the physical and mental torture you suffered for several years?
S:This is not an issue at all. When compared to the sufferings of Tamils in Sri Lanka that is going on even as we speak, what I experienced is nothing. I had endured all kinds of troubles since childhood and at one point, not just my mind but my body too became numb.
In 1990, I was detained in Colombo under the Prohibition of Terrorism Act and after two weeks in a police station, I was sent to the Mara prison. No one knew that I had been arrested. I did not know when I would be released from prison either. But at the time of going to prison, more than the fear and pain, it was the thought that I might be able to learn Sinhala in prison that was uppermost in my mind.
In my novel, Mm..., I have written, “Fear is as terrible as an elephant. And yet, when one has tamed it like an elephant, we can control it. Pain is also like fear.”
ELLE:You call yourself a man from nowhere. Could you share your journey from Sri Lanka to France?
S:I did not have the money to travel to France. I went from Sri Lanka to Thailand first. Under the auspices of the UNHCR, I lived for sometime as a refugee in a Bangkok suburb. During that time, Bangkok was the centre for refugees seeking to migrate to America and Europe. I came to France from there in 1993.
ELLE:Do you see yourself as a global citizen? Or do you seek to belong to one particular place – be it Sri Lanka or France?
S:A word like “global citizen” for a refugee like me is just a decorative term. Every nation in this world has thrust upon me the identification of “alien”.
My act of accepting or rejecting the identification of an Eelam Tamil is dependent upon specific political circumstances. By birth I am an Eelam Tamil; and each time I am oppressed in the name of my birth origin, I will insist upon claiming my Eelam Tamil status. And yet, as my community of Eelam Tamils has oppressed other Tamil minority groups like the Eelam Muslims and plantation Tamils, I am also ashamed of my Eelam Tamil identity.
There is simply no way to even mention French identity. Is it to take on the identity of bandits and racists that I write under the shadow of death?
ELLE:Could you tell us a little about your life in France? You worked as a dishwasher in restaurants…
S:For the past 15 years, I have worked as a dishwasher, cook, room boy, construction worker, and street sweeper, amongst other things. Now I work in a supermarket, shelving items. I sense a note of pity in your question. It is unnecessary. These are the kinds of labour-intensive jobs that suit my lack of formal education.
ELLE:How do you contrast your life in France from the one you fled from in Sri Lanka?
S:When I lived in my village I starved. Now living in Europe, I have enough to eat and drink. In Jaffna today, even after 30 years of war, there are 150 temples that are closed to the Dalits. This kind of direct caste oppression is not known in the lands of refuge. Moreover, I must admit that I have much more freedom to write and speak in France.
But before a refugee could enjoy these rights, he has to either throw sand into the eyes of the immigration officials or duck the border patrol and enter France illegally. On their way into France, many refugees have died caught in snowdrifts or drowned in the Atlantic Ocean. France has thousands of refugees, called ‘Sans Papiers’ who are living like thieves in daily terror of the police. They have no rights and those who get arrested by the police are sent back to the death fields by the French government in the name of deportation. The pain of becoming a refugee is no less than the pain of proving to the white folks that one is indeed a refugee.
ELLE:In what way has your personal journey impacted your writing?
S:There are some firm political stands that I have for myself. These ideological standpoints are more important for me than my own personal sorrow. I use literature as a means to express my political ideas to my people. My novels, short stories, and dramas are but the expanded versions of propaganda pamphlets.
ELLE:Does the protagonist’s character in your book Gorilla have autobiographical elements?
S:The novel Gorilla belongs to the genre of Auto Fiction. Its is not just my personal story. I have set out not only my experiences but also the stories and problems I have seen and heard about in the same wave length.
I am from Allaipiddi, a small sandy village. There were 30 young men in my ‘set.’ All of us were related, cousins of sorts. We all grew up together. In the August of 1990, the Sri Lankan army in its attempt to recapture the Jaffna fort, landed in our village. Out of the 30 boys, 23 were killed at the same time by the army and their bodies were thrown into a well. Today that whole village has been destroyed.
I have a thousand stories in my experiences. I wish to tell all of them too. But my intention is not to write our sorrow-drenched tales in the form of literature and evoke pity in the heart of the reader. I wish to ask for justice through my writing. Or even revenge.
ELLE:How difficult has it been to have your voice heard in political as well as literary terms?
S:There has been no difficulty at all. The Tamil nationalists who have been angered by my writings have threatened me, attacked me physically, and posted libelous statements in blogs and other publications. I have been proving to them through my writing that I cannot be silenced except in death.
ELLE:What does the word 'freedom' mean to you?
As a writer of fiction, I can elaborate on the answer to this question in an endless fashion. But I would like to answer this question from a social scientific point of view, that human freedom is dependent upon such elements as class, caste, and gender struggles.
In my view, human freedom is possible only within a communist system. But you should not point to the former Soviet Union or China as examples of communism. If you need to, you can treat them as lessons on the long journey towards human liberation. The road to human freedom would extend far beyond communism too. In fact, it has no end.
ELLE:Do you think we live in an extremely violent world where people are losing their humanity? Why do you think this has happened?
S:I have never thought that way. I am only saddened that people have become more tolerant. Especially in a rapidly globalising world, where the rights of people are being eroded on a daily basis, I am deeply saddened that there is no movement strong enough to gather a weakened population to rise up in arms against multinational corporations.
The state, police, courts, and prison are our society’s foremost violent structures. “The law is the State’s violence; violence is people’s law,” booms the Anarchist’s call, haven’t you heard?
elle FEBRUARY 2008
Tuesday, February 19, 2008
குழந்தைப் போராளி’ , ‘நான் ஒரு மனு விரோதன்’ நூல்களின் வெளியீட்டு நிகழ்வு

குழந்தைப் போராளி’, ‘நான் ஒரு மனு விரோதன்’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு தேசம் சஞ்சிகையினால் லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சைனா கெய்ரெற்ஸி என்பவரால் டொச் மொழயில் எழுதப்பட்ட இந்நூல் சுவிஸ் தேவா அவர்களினால் “குழந்தைப் போராளி” என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. ‘நான் ஒரு மனு விரோதன்’ என்ற மற்றைய நூல் ஆதவன் தீட்சன்யா வழங்கிய நேர்காணல்களின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது.
“குழந்தைப் போராளி” நூல் வெளியீட்டு அமர்விற்கு ராகவன் தலைமை தாங்ககுகிறார். அந்நூலை பௌசர், சந்தோஸ் ஆகியோர் ஆய்வு செய்கிறார்கள். ‘நான் ஒரு மனு விரோதன்’ நூல் வெளியீட்டு அமர்வு ஆர் புதியவன் தலைமையில் நடைபெறுகிறது. சபா நாவலன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகியோர் அந்நூலை ஆய்வு செய்கிறார்கள்.
காலம் . 24 பெப்ரவரி 2008, மாலை 2:30
இடம் . Quackers House Bush Road, Wanstead, London, E11 3AU(Nearest Tube: Leytonstone - Central Line (5 min walk)Buses : 257, W19, 145, 66 (Greenman Roundabout )
Saturday, February 16, 2008
தலித்தியம் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள்

அன்பார்ந்த நண்பர்களே,
வணக்கம்
நேரில் வர இயலாமற்போன சூழலுக்காகவும், முன்னதாகவே அறிவித்து மாற்று ஏற்பாடுகள் செய்ய வழியில்லாமற் செய்வதற்காகவும் தயவுசெய்து என்னை மன்னியுங்கள்.
நான்காண்டுகள் முன்பு காலாவதியாகிப் போன எனது பாஸ்போர்டைப் புதுப்பிக்காமல் விட்டதே பிரச்சினைக்குக் காரணம். பழைய முகவரியில் வந்து பார்த்த காவல்துறையினர் நான் அங்கு இல்லை என அறிக்கை எழுதியதால் பிரச்சினை மேலும் சிக்கலாகியது. எனினும் கடைசிவரை உரிய நேரத்தில் வந்து விடலாம் என்கிற நம்பிக்கை இருந்தது. கடைசி வாரத்தில்தான் அது சாத்தியமில்லை எனத் தெரிந்தது. அதற்குப் பின் நான் வர இயலாமையைச் சொல்லியும் பயனில்லை என்பதால் பேசாமல் விட்டுவிட்டேன். இப்போது பிரச்சினை தீர்ந்து விட்டபோதிலும் தாமதமாகி விட்டதால் விசாவுக்கு விண்ணப்பிக்க இல்லாமற் போய் விட்டது. தயவு செய்து மன்னியுங்கள். வாய்ப்பிருந்தால் மீண்டும் சந்திப்போம். கட்டுரையாக என் உரையை அனுப்பியுள்ளேன். உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் கோருகிறேன்.
தலித்தியம் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள்
இந்தியாவில் உருவான தேசிய இயக்கம் (காங்கிரஸ்) பொதுவுடமை இயக்கம், முஸ்லிம் லீக், பார்ப்பனரல்லாதார் இயக்கம், தனித்தமிழ் இயக்கம், இந்துத்துவ இயக்கங்கள் (ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை) எல்லாவற்றையும் போலவே தலித் இயக்கத்திற்கும் ஒரு நூற்றாண்டு வரலாறு உண்டு. டாக்டர் அம்பேத்கர் அவர்கள் 1920களில் தனது வெளிநாட்டுப் படிப்புகளை முடித்துக்கொண்டு இந்தியா வந்தபின் ஒரு தெளிவான கோட்பாட்டுப் பார்வையையும் இயக்க வடிவத்தையும் அதற்கு அளித்தார்.
முன்னதாக அதற்குரிய சூழல் மகாராஷ்டிரத்தில் ஓரளவு கனிந்திருந்தது. தலித் சமூக முன்னோடிகள் தவிர பார்ப்பனர் உள்ளிட்ட சில உயர்சாதி சீர்திருத்தவாதிகளும் இதில் பங்கு பெற்றனர் என்ற போதிலும் ஒரு தெளிவான பார்வையுடன் அவர்கள் களத்தில் இறங்கவில்லை. உயர்சாதிச் சீர்திருத்தவாதிகளைப் பொருத்தமட்டில் தலித்கள் சந்தித்துக் கொண்டிருந்த சமகால அநீதிகளுக்கெல்லாம் வரலாற்று ரீதியாக என்ன காரணங்கள் என்கிற கேள்விக்குள் அவர்கள் செல்லவில்லை. ஏதோ தலித்களே அவர்களது இரங்கத்தக்க நிலைக்குக் காரணம் என்பதுபோல அவர்களைச் சீர்திருத்துதல், தீய பழக்கங்களை அவர்களிடமிருந்து அகற்றி நல்ல தூய்மையான வழக்கங்களைப் பயிற்றுவித்தல், கல்வி கற்பித்தல் ஆகியவற்றின் மூலமாகவே தலித்களை முன்னேற்றி விடலாம் என்கிற பார்வையே இருந்தது.
அம்பேத்கரும் கூடத் தொடக்கத்தில் இத்தகைய பார்வையுடன்தான் களத்திற்கு வருகிறார். நல்ல பழக்கங்கள், பேச்சுத்திறன், செத்த பிராணிகளை உண்ணுதலைத் தவிர்த்தல் முதலானவற்றிற்கு அழுத்தம் கொடுத்தார். ஆனால் அவர் அத்துடன் நிற்கவில்லை. தலித்துகளுக்கெதிராக இந்து மதம் உருவாக்கியுள்ள சமூகக் கொடுமைகளுக்கு எதிராக மக்களைக் களத்தில் இறக்கினார்.
அந்த நோக்கில் அவரது அமைப்பு (பஹிஷ்கரித் ஹிதகரிணி சபா) உருவாகியது. இந்த சமூகக் கொடுமைகளையும் அவர் இரண்டாகப் பார்த்தார். கோயில், குளம் முதலான பொது இடங்கள் தலித்களுக்கு மறுக்கப்படுவது ஒருபக்கம் என்றால் பொருளாதார ரீதியாக, சாதியை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் கட்டாய இலவச உழைப்பு (“மஹர் வாட்டன்முறை”) முதலான செயற்பாடுகளுக்கு எதிராகவும் அவர் இயக்கங்கள் நடத்தினார்.
மூன்றாவதாக, பிரிட்டிஷ் அரசு உருவாக்கியிருந்த புதிய நிறுவனங்களினூடாக தலித்களை அதிகாரப்படுத்துதல் பற்றியும் அவர் சிந்தித்தார். கல்வி, அரசு வேலை வாய்ப்பு ஆகியவற்றின்பால் அவர் கவனம் திரும்பியது. இந்தக் கல்வியையும்கூட அவர் இருவகைப் பட்டதாகவே அணுகினார். இருக்கும் கல்வி அமைப்பைப் பயன்படுத்தி அவை வழங்கும் சான்றிதழ்கள், பட்டங்கள் வாயிலாகத் தலித்கள் தம்மை அதிகாரப்படுத்திக் கொள்ளுதல் ஒரு பக்கம். ஆனால் தலித்கள் விழிப்புப்பெற, சமூகப் பிரக்ஞை பெற இந்தக் கல்வி போதாது.
இந்த நோக்கிலேயே அவர் ஆரம்பம் முதற்கொண்டு தலித்களுக்கான இதழ் (“மூக் நாயக்” முதலியன)கள் முதலானவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தார். தலித்களுக்கான ஒரு பல்கலைக் கழகம் அமைப்பதென்பது கூட அவரின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. தலித்களை அவர்கள் மீதான சமூகக் கொடுமைகளிலிருந்து விடுவித்து ஆற்றல்படுத்துவதற்கு எல்லா மட்டங்களிலும் இந்து மதம் பெருந்தடையாக இருந்ததை அவரது அனுபவங்களும் ஆய்வுகளும் உணர்த்தின.
இந்து மதத்துடன் போராடி அதைத் திருத்தி அமைப்பதன் சாத்தியமின்மையையும் அவர் வெகு விரைவில் உணர்ந்தார். இந்து மதத்திலிருந்து வெளியேறுவது என்கிற முடிவுக்கு அடுத்த சில ஆண்டுகளிலேயே (1930களில்) அவர் வந்தடைந்தார். ஆலய நுழைவு முதலான போராட்ட வடிவங்களில் அவரது நாட்டம் குறைந்தது. மாறாக இந்துக் கோயில்களை, தலித்களின் வணக்கத்திற்கு உரியதாக இருந்த சொக்கோபா ஆலயம் உட்படப் புறக்கணிக்கச் சொன்னார். காலங்காலமாக இந்தக் கோயிற்படிகளில் உங்களின் நெற்றியைத் தேய்த்துத் தேய்த்து என்னத்தைக் கண்டீர்கள் என சக தலித் மக்களிடம் மன்றாடினார்.
1935ல் இந்திய அரசுச் சட்டத்தை பிரிட்டிஷ் அரசு உருவாக்கி பரவலாகத் தேர்தலை அறிமுகம் செய்தபோது தலித்களுக்கு அரசியலதிகாரம் என்பதை நோக்கி அவர் நகர்ந்தார். தனது இயக்கத்தை அரசியற் கட்சியாக மாற்றினார். சுதந்திரத் தொழிலாளர் கட்சி (ILP) எனப் பெயரிட்டார். டாங்கே முதலான பொதுவுடைமையாளர்களுடன் இணைந்து வேலை நிறுத்தப் போராட்டங்களை எல்லாம் மேற்கொண்டார்.
வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சியிலும், பிந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் அமைச்சரவைகளில் பங்கேற்றார். இந்து சட்டத் திருத்தத்திற்கு முயன்றார். அரசியல் சட்ட அவையில் பங்கேற்று இந்திய அரசியல் சட்ட உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
தலித்களுக்கான தனி வாக்காளர் தொகுதி, தனிக் குடியிருப்பு ஆகியவை குறித்துப் பேசினார். தனி வாக்காளர் தொகுதிக்கென அவர் நடத்திய போராட்டமும் காந்தி அதை முறியடித்ததும் எல்லோரும் அறிந்த கதை. காந்தி இதைச் செய்து முடித்தார் என்கிற போதிலும் அன்றைய ஒட்டுமொத்தச் சமூகமும், அனைத்து அரசியல் கட்சிகளும், சக தலித் தலைவர்களும்கூட அதற்கு எதிராக இருந்தனர். தொடர்ந்து அம்பேத்கர் இந்து மத ஊழல்கள் குறித்தும் சாதி அமைப்பு குறித்தும் மிக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார். இறுதிக் காலத்தில் அவரது ஆய்வு பவுத்தம் குறித்ததாக அமைந்தது.
இடையில் அவர் தனது சுதந்திரத் தொழிலாளர் கட்சி முயற்சியை நிறுத்திவிட்டு “பட்டியல் சாதியினர் கூட்டமைப்பை (SCF)” உருவாக்கினார். இறுதியில் அவர் மீண்டும் தலித்களுக்கான ஒரு அரசியல் கட்சியை (“குடியரசுக் கட்சி”) உருவாக்க முனைந்தார். பெரியாரைப் போலல்லாமல் இந்து மதத்திலிருந்து வெளியேறுவது என தான் சொல்லி வந்த கருத்தை வாழ்நாளில் நிறைவேற்றி, பவுத்தத்திற்கு மாறி, மரணமடைந்தார்.
அம்பேத்கரின் வாழ்வும் எழுத்துக்களும் தலித்தியத்திற்கான செய்தியாக, வழிகாட்டலாக இன்றும் இருப்பதால் இன்றைய சவால்களை நாம் யோசிப்பதற்கு முன்னதாக இவற்றைச் சற்று விரிவாகப் பேச வேண்டியதாயிற்று.
அம்பேத்கருக்கு பிந்திய தலித்திய இயக்கங்களின் செயற்பாடுகள் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கதாக இல்லை. பெரிய அளவில் தேக்கத்தையும் பிளவுகளையும் அவை சந்தித்தன. இதன் பொருள் பிந்தைய தலைவர்களின் பங்களிப்புகளையும், போராட்டங்களையும் மறுப்பதல்ல. எனினும் 1990களில் மீண்டும் ஒரு பெரிய எழுச்சி உருவானது. அம்பேத்கார் நூற்றாண்டை ஒட்டி இது ஏற்பட்டது. உலகளாவிய மாற்றங்களுடன் இதை நாம் புரிந்து கொள்வது அவசியம்.
உலகமயம், தாராளமயம், சந்தைத் திறப்பு, சோஷலிசக் கட்டுமானங்களின் தோல்வி ஆகியவை பின்னணியில் இருந்தன. புரட்சி என்கிற கருத்தாக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டு “அதிகாரப்படுத்துதல்” என்கிற சொல்லாடல் முன்னுக்கு வந்தது. சமூக நீதி என்பதுகூட வலுவான அரசதிகாரத்தின் துணையோடு சட்டபூர்வமாக்கப்படுதல் என்கிற நிலைக்கு மாறாக விருப்ப பூர்வமானதாக (“கார்ப்பரேட் சமூக நீதி”) ஆக்கப்படுதல் என்கிற நிலைபாடுகள் முன்வைக்கப்படும் நிலை உருவாயிற்று.
இட ஒதுக்கீடு என்பதற்கு பதிலாக ‘சமவாய்ப்பு ஆணையங்களை’ உருவாக்குதல் பற்றி இன்று பேசப்படுகிறது, இதுகாறும் பிற்போக்குக் கருத்துக்களாகக் கருதப்பட்டவை ஒரு நியாயபூர்வத் தோரணையுடன் தம்மை முன்னிறுத்திக் கொள்ளத் தொடங்கின.
இந்தப் பின்னணியில் மேலுக்கு வந்த தலித்தியம் அரசியல் தளத்திலும் கருத்தியல் தளத்திலும் பதித்த சுவடுகள், நிகழ்த்திய சாதனைகள் குறிப்பிடத்தக்கவை. இதுகாறும் தலித்கள் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்தே இயங்க வேண்டிய நிலைமாறி தமக்கான தனித்துவத்துடன் அரசியலமைப்புகளை உருவாக்கியதன் மூலம் தலித் மக்கள் மத்தியில் உருவான தன்னம்பிக்கை இதில் முதன்மையாகச் சொல்லப்பட வேண்டிய ஒன்று.
அரசியல், ஊடகம் எல்லாவற்றிலும் இதுகாறும் இருப்பு மறுக்கப்பட்டு வந்த தலித்கள், இன்று எல்லாத்துறைகளிலும் தங்கள் இருப்பை உறுதி செய்யும் நிலை குறிப்பிடத்தக்கது. எந்த அரசியல் கட்சியும் இன்று தலித்தியம் பேசாதிருக்க இயலாது. இன்று எந்தப் பல்கலைக் கழகமும் தலித்தியத்தைப் புறக்கணித்துவிட்டு கருத்தரங்குகள் நடத்த இயலாது. எந்தக் கருத்தரங்குகளிலும், விவாதக் களங்களிலும் தலித் இளைஞர்கள் தமது குரலை இறுமாப்புடன் ஒலிக்கும் நிலையை நாம் காண முடிகிறது. இறுமாப்பு என்பதை நான் இங்கு போற்றத்தக்க பொருளிலேயே குறிப்பிடுகிறேன்.
ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சென்ற ஆண்டு (2007) பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நடந்த மிகப்பெரிய முதல் எழுச்சியான 1857 மக்கள் போரின் 150ம் ஆண்டு விழா இந்தியா முழுமையும் கொண்டாடப்பட்டது. நல்ல பல ஆய்வுகளும், கட்டுரைகளும் அதை ஒட்டி எழுதப்பட்டன. 1857 எழுச்சி குறித்து சமகால அறிஞர்கள் (எடு: கார்ல் மார்க்ஸ்) தொடங்கி இந்த 150 ஆண்டு காலம் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. இது குறித்து நான் சற்று விரிவாக இதழொன்றில் எழுதியுள்ளேன் (தீராநிதி, பிப்ரவரி, மார்ச் 2007). இங்கே ஓரம்சம் மட்டும்.
இந்த எழுச்சியை சிப்பாய் கலகமாய் பார்ப்பதா, விவசாயிகள் எழுச்சியா? இந்து முஸ்லிம் ஒற்றுமையின் ஆகச் சிறந்த வெளிப்பாடு என்பதா? அதிகாரமிழந்த நிலப்பிரப்புத்துவத்தின் எதிர்ப்பு என்பதா? முதல் சுதந்திரப் போராகப் பார்ப்பதா? என்றெல்லாம் பொருட்செறிந்த மிக ஆழமான விவாதங்கள் இந்த 150 ஆண்டுகளிலும் நடைபெற்றுள்ளன. எனினும் இந்த விவாதங்கள் அனைத்திலும் இந்த எழுச்சியில் தலித்கள், விளிம்பு நிலையினர், அரசவை நடனமாதுகள் முதலானோரின் பங்கு குறிப்பிடப்பட்டதே இல்லை.
1907ல் 50ம் ஆண்டு நினைவுகளின்போது அதுகாறும் பிரிட்டிஷாரால் சிப்பாய் கலகமாகப் பார்க்கப்பட்டு வந்த எழுச்சி சுதந்திரப் போராகப் பார்க்கப்பட வேண்டிய அவசியம் சுட்டப்பட்டது. 100ம் ஆண்டு நினைவுகளின்போது, இந்தியா புதிதாய்ச் சுதந்திரமடைந்த பின்னணியில் எழுச்சியின் தேசியப் பரிமாணத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இடையில் மார்க்சியர்கள் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பங்களிப்புகளைச் செய்திருந்தனர். எனினும் இந்த 150ம் ஆண்டு நினைவுகளின்போதுதான் எழுச்சியில் தலித்கள் மற்றும் விளிம்பு நிலையினரின் பங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான எந்த ஆய்வுத் தொகுப்பை எடுத்துக் கொண்டாலும் தலித்களின் பங்கு குறித்த கட்டுரைகள் முக்கியமாய் பளிச்சிடுகின்றன. இதுகாறும் யாரது கவனத்திலும் படாதிருந்த தலித் கதையாடல்கள், கண்ணில் படாதிருந்த தலித் தியாகிகளின் நினைவுச் சின்னங்கள் எல்லாம் முதன் முதலாக இன்றுதான் பதிவு கண்டுள்ளன. 1857 என்றால் தாந்தியாதோபே, பஹதூர்ஷா, மங்கள் பாண்டே, ஜான்சிராணி என்றிருந்த நிலை மாறி முதன் முதலாக ஜல்ஹரிபாய், அவந்திபாய், பண்ணாதாய், உதாதேவி, மதாதின் பங்கி ஆகியோரின் பெயர்கள் இன்று பதிவு காண்கின்றன. வெறும் பதிவுகள் மட்டுமல்லாது வரலாறெழுதியலுக்கு இதன் மூலம் கிடைத்த பங்களிப்பு இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.
அதேபோல அயோத்தி தாசர் குறித்த மறுகண்டுபிடிப்பு, பவுத்தம் குறித்த புதிய பார்வைகள், பவுத்த நோக்கிலிருந்து அணுகுதல், தலித் இலக்கியம் என்கிற புதிய இலக்கியப் பரிமாணம் ஆகியன தலித்தியம் அளித்த கொடைகள்.
தலித்தியம் எதிர்நோக்கும் சமகாலச் சவால்களைப் பற்றி யோசிக்கும் முன் இவற்றையெல்லாம் நாம் ஒருமுறை மனதிற்குள் கூட்டிக் கழித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. எந்த அரசியலும் சவால்களைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும். சவால்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். சவால்களைப் பற்றிப்பேசுவது ஒன்றைக் குறைத்து மதிப்பிடுவதாகாது. சொல்லப்போனால் சவாலைச் சந்திப்பதே நாம் உயிருடன் இருப்பதன் அடையாளம். வலுவுடன் இருப்பதன் அடையாளம். தலித்தியம் சந்திக்கும் சவால்களை நாம் இரு தளங்களிலிருந்து இங்கே ஆராய்வோம். அரசியல் மற்றும் கருத்தியல் தளங்களை மட்டும் இங்கே எடுத்துக் கொள்வோம். கலாச்சாரம், இலக்கியம் தொடர்பாகத் தனியே ஒரு உரை இருப்பதால் இங்கே அதைத் தவிர்க்கிறேன்.
தலித் அரசியல் என்பது ஆரம்பம் முதற்கொண்டே பாராளுமன்ற அரசியலைச் சார்ந்தே இருக்கிறது. அப்படித்தான் இருக்க முடியும். பாராளுமன்றத்தின் ஊழல்களையும், பொய்மைகளையும் கருத்திற்கொண்டு அதைப் புறக்கணித்துவிடும் சாத்தியம் அதற்குக் கிடையாது. தவிரவும் அது குறிப்பிட்ட அளவிற்கு அரசைச் சார்ந்தும் உள்ளது. அரசின் கொடூரங்களைக் காட்டிலும் சமூகத்தின் கொடூரத்தை அது உடனடியாகச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. எனவே சமூகக் கொடுமைகளுக்கு எதிரான ஒரு யுசடிவைசயவழச ஆக அரசை அது அணுகுகிறது.
நடுநிலை என்கிற சொல்லைக் காட்டிலும் Arbitrator என்கிற ஆங்கிலச் சொல்லே பரவாயில்லை என்பதால் அப்படியே பயன்படுத்தியுள்ளேன். எனவே பெரியார், அம்பேத்கர் போன்ற வித்தியாசங்களின் அரசியலைப் பேசியவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு அரசு வலிமையாக இருப்பதையே விரும்பினர். மாறாக காந்தியோ அரசு வலுவற்று இருக்க வேண்டும் என்றார். எந்த அளவுக்கு அரசு குறைவாக உள்ளதோ அந்த அளவு மக்களுக்கு நல்லது என்றார். பதிலாக உள்ளுர் அரசுகள் (பஞ்சாயத்துகள்) வலுவாக இருக்க வேண்டும் என்றார் காந்தி. உள்ளுர் அரசுகள் வலுவடைவது சாதி ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும் என்றார் அம்பேத்கர்.
உலகமயம் இன்று தேசிய அரசுகளை வலுவிழக்கச் செய்துள்ளது. உலக முதலாளியத்தின் உள்ளூர் முகவர்களாகவே இன்று தேசிய அரசுகள் உள்ளன. தேசப் பாதுகாப்பு மட்டுமே அரசின் பணி. தேசப் பொருளாதாரம், சமூக நீதி என்பன அரசின் அதிகார எல்லைக்குள் வரா. சமூக நீதியின் இடத்தில் இப்போது சந்தையின் நீதி வந்துவிட்டது. அரசின் எந்தக் கட்டுப்பாடுகளையும் “இடஒதுக்கீடு” உட்பட இன்று கார்ப்பரேட்கள் சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை. சந்தையே சமத்துவத்தை உருவாக்கிவிடும். கார்ப்பரேட்கள் சமூக நீதியுடன் செயல்படுவர். மக்கள் நல அரசு என்பது இனி சாத்தியமில்லை. கல்வி, மருத்துவம் என எல்லாம் தனி நபர்களின் பொறுப்பு. அரசுக்கு அங்கே இடமில்லை.
தலித்தியம் சந்திக்கும் முதல் சவால் இது. சமூக நீதியைச் சாதிக்க அரசு வலுவாக இருக்க வேண்டும் என்கிற நிலைக்கு நேர்மாறான சூழலை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?
உலகமயத்தைப் பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. உலகமயத்தின் மூலம் உருவாகியுள்ள புதிய வாய்ப்புகளில் தலித்களின் பங்கைக் கோருவதே நமது பணியாக இருக்க இயலும் என்றொரு கருத்து சில ஆண்டுகள் முன்பு இங்கே முன் வைக்கப்பட்டது. கெய்ல் ஓம்வெத் போன்றோர் இதை முன்வைத்தனர். சந்திரபான் பிரசாத் போன்ற தலித் அறிவுஜீவிகளின் முயற்சியால் 2002ல் “போபால் பிரகடனம்” ஒன்று உருவாக்கப்பட்டது. நாங்கள்கூட அதைத் தமிழில் பெயர்த்துப் பரவலாகப் பிரச்சாரம் செய்தோம். தனியார் துறையில் இடஒதுக்கீடு, சந்தையில் ஒதுக்கீடு அதாவது பொருட்களின் வினியோகத்தில் ஒதுக்கீடு ¬தலியவை கோரிக்கைகளாக்கப்பட்டன. “தலித் மூலதனம்” குறித்தும் பேசப்பட்டது.
நீர்வளம், கனிமவளம் ஆகியவற்றை கார்ப்பரேட்களுக்குத் தாரை வார்ப்பது பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? இதுகாறும் நமக்கு மறுக்கப்பட்ட தண்ணீரை கொகோ கோலாக்காரன் உறிஞ்சிக் கொண்டால் நாம் ஏன் போராட வேண்டும் என்றும் கூடச் சிலர் கேள்விகள் எழுப்பினர். தலித்கள், விவசாயிகள் பிரச்சினை குறித்துத் தொடர்ந்து எழுதி வருபவரும் மகாசேசே பரிசு பெற்றவருமான சாய்நாத் இதற்கொரு பதிலைச் சொன்னார். முன்னெல்லாம் கிராமத்திலுள்ள ஊரணியில் தலித்கள் தண்ணீர் எடுக்க முடியாதபோது இரண்டு மைல் நடந்து சென்று ஆற்றிலாவது எடுக்க முடிந்தது. இன்று அந்த ஆற்று நீரும் கொள்ளை போகும்போது முதலில் பாதிக்கப்படுவது தலித்களும் பழங்குடியினரும் தானே என்றார்.
இதன் பொருள் உலகமயம் ஒழிக எனச் சொல்லிவிட்டு அதை எதிர்த்துப் போராடிக் கொண்டு மட்டுமே இருந்து விடவேண்டும் என்பதல்ல. வேறெப்போதும் இல்லாத பல புதிய தேர்வுகள் உலகமயத்தால் உருவாகியுள்ளன. தொழில்நுட்பம் பல சாத்தியங்களைப் படைத்துள்ளது. இவற்றில் தலித்களுக்கான பங்கைக் கோருவது அவசியம். அதே நேரத்தில் உலகமயத்தைத் தலித்களின் விடிவாகவும் நாம் பார்க்கத் தேவையில்லை.
உலகமயத்தின் பலன்களைக் கோருவதுகூட ஓரளவு தலித்களில் படித்த வர்க்கத்தினர் மற்றும் நகர்ப்புறத்தார்களுக்கே சாத்தியம். இவை குறித்தெல்லாம் அறிந்தே இல்லாத எண்பது சதத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய, கிராமப்புறங்களைச் சார்ந்த தலித்களுக்கு அரசு தனது மக்கள் நலத் தன்மையை இழப்பது பெருங்கேடாகும். கல்வியும் மருத்துவமும் ¬ற்றலும் வணிகமயமாகும்போது அதன் பெரும் இழப்புகளை அவர்களே சுமக்க நேரிடுகிறது.
ஏகாதிபத்திய எதிர்ப்பை தலித்திய அரசியலில் இணைப்பது குறித்த பிரக்ஞை இன்று தலித் முன்னோடிகள் மத்தியில் உருவாகத் தொடங்கியுள்ளது. இது தொடர்பான ஆனந்த் டெல்டும்டேயின் நூல் தமிழில் பெயர்க்கப்பட்டு தலித் இளைஞர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்புப் பெறத் தொடங்கியுள்ளது இதற்கொரு எடுத்துக்காட்டு. எனினும் தலித் முன்னோடிகள், அரசியல் தலைவர்கள் இதற்கு முக்கியவத்தும் அளிக்கும் நிலை உருவாகாதது கவலைக்குரியது.
அரசியல் தளத்தில் தலித்கள் சந்திக்கும் இரண்டாவது சவாலாக அதன் பாராளுமன்றப் பாதையில் அது சந்திக்கும் ஒரு சிக்கலை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தலித் என்பது குறித்து நாம் எவ்வளவுதான் விரிந்த பொருளைக் கொண்ட போதும் அது தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களின் அரசியலாகவே உள்ளது. எனவே அதன் ஆதரவுத் தொகுதி (உழளெவவைரநnஉல) அதாவது எண்ணிக்கைக்கு ஒரு எல்லை உண்டு. தமிழகத்தை எடுத்துக் கொண்டால் அது சுமார் 20 சதம். அதற்குள்ளும் ன்று பெரும் பிரிவுகளும் (பறையர், பள்ளர், அருந்ததியர்) தனித்தனியே.
பாராளுமன்ற அதிகாரத்தை நோக்கிச் செல்வதற்கு ஆதரவு பெருக்கப்பட வேண்டும். அப்போது அது தலித் அரசியலைத் தாண்டி வேறு அரசியலைப் பேசியாக வேண்டும். இதனால் தலித் அரசியல் பலவீனப்படுவது ஒரு பக்கம். வேறு என்ன அரசியலைத் தலித்தியம் தேர்வு செய்வது என்பது இன்னொரு கேள்வி. தலித்தியம் சந்திக்கும் இரண்டாவது முக்கிய சவால் இதுவே.
அம்பேத்கரும் இச்சிக்கலைச் சந்திக்கவே செய்தார். பஹிஷ்கரித் ஹிதகரிணிசபா - சுதந்திரத் தொழிலாளர் கட்சி - பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு - குடியரசுக் கட்சி என்பதாக அவரது இயக்கம் இருந்தது. அதாவது, தலித்களுக்கான தனி அமைப்பு - கட்சி - தனி அமைப்பு - கட்சி என்பதாக இருந்தது. கட்சி என ஆகும்போது பெயரைக்கூட தலித் என்கிற வட்டத்தைத் தாண்டி அமைக்க வேண்டியிருந்தது. பரந்த அடையாளம் என்கிற போது அம்பேத்கர் “தொழிலாளர் குடியரசு” முதலானவற்றை தேர்வு செய்தார். கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள் ஆகியோரை அணுகினார்.
கன்ஷிராம் “பகுஜன் சமாஜ்” என்கிற கருத்தை முன்வைத்தார். தலித்கள் + பிற்படுத்தப் பட்டோர் + முஸ்லிம்கள் என்பதாக அவரது அணி சேர்க்கை இருந்தது. பார்ப்பனர், சத்திரியர் முதலான உயர் சாதியினரை அவர் வெளியே நிறுத்தினார்.
தொல்.திருமாவளவன் தமிழ்த்தேசியம் பேசி தமிழர்கள் என்னும் பேரடையாளத்தின் கீழ் தனது ஆதரவுத் தொகுதியை விரிக்க முயல்கிறார். இது குறித்து நான் விரிவாக வேறு சந்தர்ப்பங்களில் பேசியுள்ளேன். இங்கே தவிர்க்கிறேன். ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும். தமிழ்த் தேசியத்தின் இன்னொரு பக்கமாக விடுதலைப் புலிகளை முழுமையாக ஆதரிப்பதன் விளைவாகவே அவரும், அவரது கட்சியினரும் ஈழத்துத் தலித்களின் பிரச்சினையைப் பேசுவதேயில்லை. தலித் இலக்கிய முன்னோடியான கே.டேனியலும் இவ்வாறே புறக்கணிக்கப்பட நேர்கிறது. இதை நான் குறையாகவோ, விமர்சனமாகவோ அன்றி தலித்தியம் எதிர்கொண்டுள்ள ஒரு பிரச்சினையாகவே பார்க்கிறேன்.
மாயாவதி சமீபத்திய உ.பி. தேர்தலில் வைத்து வெற்றி பெற்ற அரசியல் சூத்திரம் பகுஜன் என்கிற வரையறையைத் தலைகீழாக மாற்றியது. பார்ப்பனர்களை அவர் உள்ளடக்கினார். உயர்சாதியினருடனான சகோதரத்துவம் சங்கங்களை ஊர்தோறும் உருவாக்கினார். “பகுஜன்” என்பதற்குப் பதிலாக “சர்வஜன்” என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்தார். உ.பி. வெற்றியைத் தொடர்ந்து தமிழகத்திலும் இப்படியான ஒரு கூட்டணி குறித்து தலித் அறிவுஜீவிகளில் சிலர் பேசினர்.
இந்தியாவைப் பொருத்தமட்டில் சாதி அமைப்பு முறை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை. தமிழகச் சாதி முறைக்கும் ஈழத்து சாதி முறைக்குமுள்ள வித்தியாசம் அப்படியே. ஓரிடத்திற்குப் பொருந்தும் சூத்திரம் அப்படியே இன்னொரு இடத்திற்குப் பொருந்தாது. இந்தியாவின் வட மாநிலங்களில் சத்திரிய வருணம் உள்ளது போல தமிழ்நாட்டில் கிடையாது. உ.பி.யில் பார்ப்பனர்கள் சுமார் 10 சதம். தமிழ்நாட்டில் வெறும் 2 சதம் மட்டுமே. உ.பி.யில் பிற உயர்சாதியினரும் கூட அப்படியே. எல்லோரும் மாயாவதிக்கு வாக்களிக்கவில்லை. பெரும்பாலோர் இம்முறையும் பாரதீய ஜனதாவிற்கே வாக்களித்தனர். மாயாவதிக்கு வாக்களித்த பார்ப்பனர்களும்கூட அப்படிச் செய்ததற்கான அடிப்படை மாயாவாதி ஏற்கனவே அங்கிருந்த சுமார் 22 சதத்திற்கும் மேற்பட்ட தலித்களை முழுமையாக ஒன்றிணைத்திருந்தார். தமிழகத்தில் இந்நிலை இல்லை.
இது தலித்தியம் சந்திக்கும் மூன்றாவது சவால். தலித் ஒற்றுமையைக் கட்டுவது எப்படி? தமிழக தலித் வரலாற்றைப் பார்த்தால் தொடர்ந்து தலித் உட்சாதிகளுக்கிடையே, குறிப்பாக அதன் உட்பிரிவுகளுக்கிடையே ஒரு பகை முரணே இருந்து வந்துள்ளது. அம்பேத்கரைப் பொதுத் தலைவராகவும் வழிகாட்டியாகவும் ஏற்பது, பெரியாரை அணுகுவது முதலான அம்சங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன. இன்று மூன்றில் ஒரு பங்கினரான அருந்ததியர்கள் உள் ஒதுக்கீடு கோருகின்றனர். அவர்களின் கோரிக்கை முற்றிலும் நியாயமானது என்பது பரவலாக உணரப்படுகிறது. அதே போல தலித் கிறிஸ்தவர்களும் கேட்கின்றனர். அதுவும் நியாயமானதே. எனினும் இதற்கு பிற பிரிவுத் தலைவர்களிடம் எதிர்ப்புள்ளது.
தலித் ஒற்றுமை தமிழகத்தைப் பொருத்தமட்டில் இன்று ஒரு கனவாகவே உள்ளது. தலித்தியம் சந்தித்துக் கொண்டிருக்கும் கவலைக்குரிய சவால் இது. பொதுவாக ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கிடையே ஒற்றுமை ஏற்படாதது குறித்து டாக்டர் அம்பேத்கர் சொன்ன காரணம் இங்கே சிந்திக்கத்தக்கது. படி நிலையான அசமத்துவம். அது இங்கேயும் செயல்படுகிறது. தலித்தியம் என்பது ஒரு வித்தியாச அரசியல். அது, தனக்குள்ளும் உள்ள வித்தியாசங்களை ஏற்கத்தக்கதாக இருக்க வேண்டும். அதை ஏற்று, அதன் தேவைகளையும் கோரிக்கைகளையும் அங்கீகரித்து இந்த ஒற்றுமை அமைய வேண்டும்.
இனி கருத்தியல் தளத்தில் தலித்தியம் சந்திக்கும் சவால்களில் சிலவற்றைப் பார்ப்போம். அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி இங்கே தலித்தியம் புத்தெழுச்சி கண்டபோது அத்துடன் பல தளங்களிலிருந்து எதிர்ப்புகள் உருவாகாமலும் இல்லை. தலித்தியத்திற்குத் தத்துவப் பின்புலமில்லை என்பது இவ்வாறு எழுந்த குரல்களில் ஒன்று. நாங்கள் எல்லாம் போஸ்ட் மார்டனிசம் குறித்து எழுதிக் கொண்டிருந்த காலம் அது. பெருங் கதையாடல்களின் சிதைவு, வித்தியாசங்கள் மற்றும் சிதறல்களின் முக்கியத்துவம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த நாங்கள் அந்தக் குற்றாட்டை எதிர்கொண்டோம்.
அதே நேரத்தில் மகராஷ்டிர தலித் எழுத்தாளர் அர்ஜுன் டாங்கே எழுதிய தலித் இலக்கியம் குறித்த நூலொன்று மொழியாக்கப்பட்டு வெளிவந்தது. இதுகாறும் சொல்லப்பட்ட வரலாறுகள், எழுதப்பட்ட இலக்கியங்கள் யாவும் தலித்களைப் புறக்கணித்து, அவர்களின் இருப்பை மறுத்து ஆதிக்க சாதியினரால் எழுதப்பட்டவை. அவை முன்வைக்கும் மதிப்பீடுகள், மொழி எல்லாமே தலித்தியத்தை மறுப்பவை. எனவே தலித்தியம் இந்த எல்லா மதிப்பீடுகளையும் மறுக்க வேண்டும் என்கிற (Negation) கருத்து இங்கே தலித்தியம் பேசியவர்களால் முன்வைக்கப்பட்டது.
பெரியாரின், “நமது இலக்கியம், மொழி, சட்டம், அரசு எல்லாமே சாதி காப்பாற்றுபவை. இதுகாறும் வந்த சீர்திருத்தவாதிகள் எல்லாரும் இந்த அடித்தளத்தை அப்படியே வைத்துவிட்டு மேற்தளத்தில் இருந்த ஓட்டை உடைசல்களை மட்டுமே பூசிக் கொண்டிருந்தனர். நான் மட்டுமே அடித்தளத்தையே தகர்க்க வேண்டுமென்கிறேன். எனவே தான் எல்லோராலும் நல்லது எனக் கூறப்பட்டவற்றை நான் கெட்டது என்கிறேன். எல்லோரும் கெட்டது என்பதை நல்லது என்கிறேன். எல்லோரும் உண்டு என்பதை நான் இல்லை என்பேன். எல்லோரும் இல்லை என்பதை நான் உண்டு என்பேன்…..” என்கிற ரீதியில் சொல்லப்பட்ட வாசகங்கள் எல்லாவற்றையும் மறுத்தல் என்பதற்கான ஒரு வரையறையாகவே அமைந்தது.
தலித்களின் அனுபவங்கள் எல்லாம் எந்த உயர் இலக்கியத்தைக் காட்டிலும் குறைந்தவையல்ல என்பது நிரூபணமாகியது. தலித் அனுபவப் பதிவுகள், அவர்களின் மொழிப் பதிவுகள் எல்லாம் பெரிய அளவில் வரவேற்புக்குள்ளாயின. மாற்று வரலாற்றொன்றைக் கட்டமைப்பது என்கிற பார்வைக்கு அயோத்திதாசர் குறித்த மறுகண்டுபிடிப்பு பெரிதும் உதவியது. தலித்களின் ஆய்வுப் பணிகள், பதிப்பு முயற்சிகள் எல்லாம் முதன் முதலில் கவனிப்பிற்குள்ளாயின. நவீன தமிழிலக்கியத்திற்கு தலித் இயக்கம் மூலம் கிடைத்த பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதாக இருந்தது.
எனினும் இன்று இந்த வளர்ச்சிப் போக்கிலும் ஒரு சிறிய தேக்கம் ஏற்படவே செய்துள்ளது. தலித்தியம் குறித்த வரையறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் கூட இதற்கொரு காரணம் என்றால் மிகையல்ல. மறுப்பின் மறுப்பு என்கிற அணுகல் முறை இடையில் தலித் அறிவுஜீவிகள் சிலரால் புறக்கணிக்கப்பட்டது. அதேபோல தலித் மொழியை, அது நிகழ் மதிப்பீடுகளால் கொச்சை எனக் கருதப்படுவதால் அதை அப்படியே பதிவு செய்வது என்பதும் கூட மறுக்கப்பட்டது. சொல்லப்போனால் இன்று செல்வாக்குடன் இயங்குகிற ஒரு தலித் அரசியல் கட்சியின் இலக்கியப் பிரிவு சார்பாக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை இவற்றை வெளிப்படையாகவே கண்டித்தது.
தலித் அரசியல் தொடர்பாக ஒரு அறிக்கை தலித் முன்னோடிகள் பலருடைய பங்களிப்புடன் இங்கு உருவாக்கப்பட்டது நினைவிருக்கலாம். அதே போன்ற ஒரு தலித் இலக்கியப் பிரகடனம் வெளியிடப்பட வேண்டும் எனச் சொன்னபோது அது தேவையில்லை என்கிற கருத்து முதலில் முன்வைக்கப்பட்டது. பின் அவர்களே சற்று முன்சொன்ன அறிக்கையை வெளியிட்டபோது தொடக்கத்தில் பேசி வந்த பல கருத்துக்கள் மறுக்கப்பட்டன.
ஒரு இறுக்கமான கொள்கைப் பிரகடனம் தேவை என நான் சொல்ல வரவில்லை. மேற்குறித்த இரு பார்வைகளில் ஏதொன்று மட்டுமே சரி எனவும் கூறவில்லை. மாறாக இத்தகைய ஆரோக்கியமான விவாதங்கள் தொடர்ந்து மேலெடுத்துச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அது நடைபெறவில்லை. வலுவான ஒரு கோட்பாட்டுப் பின்புலம் இன்றும் உருவாகாதிருப்பது கருத்தியல் தளத்தில் தலித்தியம் சந்திக்கும் சவால்களில் ஒன்று.
மார்க்சியம், அடித்தள ஆய்வுகள் விளிம்புகளை முன்னிலைப்படுத்தும் நவீன சிந்தனைகள் எல்லாம் தலித்தியத்திற்கு மிகவும் நெருக்கமானவை. இதன் பொருள் அவற்றில் குறைபாடுகள் இல்லை என்பதோ அவை விமர்சனத்திற்குரியவை அல்ல என்பதோ அல்ல. சொல்லப்போனால் மார்க்சியத்திலும், மார்க்சிய நடைமுறையிலுமிருந்த பல குறைபாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது தலித்தியத்தின் மிகவும் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளில் ஒன்று.
இந்தியச் சமூகத்தில் சாதியின் முக்கியத்துவம், அடித்தளம் மேற்கட்டுமானம் என்கிற செவ்வியல் மார்க்சிய வரையறையே அப்படியே இங்கு பிரயோகிப்பதிலுள்ள சிக்கல்கள், மேற்கட்டுமானமாகக் கருதப்படும் சாதியை ஒரு உற்பத்தி உறவாக, அடிக்கட்டுமானக் கூறுகளில் ஒன்றாகப் பார்ப்பது என்கிற அதிரடியான அணுகல்முறை, மார்க்ஸ் முன்வைத்த ஆசிய உற்பத்தி என்கிற கருத்தாக்கத்தின் மீது கவனம் ஆகியவை தலித் அறிவுஜீவிகள் மூலம் கிடைத்த கொடைகள். இன்று இடதுசாரிக் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள பார்வை விசாலிப்பிற்கு இவையே காரணம்.
ஆனாலுங்கூட மார்க்சியம், பெரியாரியம் முதலியன தலித்தியத்திற்கான பகைச் சிந்தனைகள் அல்ல. முற்றாக மறுதலிக்கப்பட வேண்டியவைகள் அல்ல. ஆனால் அதுபோன்ற ஒரு போக்கு இடையில் ஏற்பட்டது. இன்று அந்தப்போக்கு குறித்த மறு பரிசீலனை சகல மட்டங்களிலும் உருவாகியிருப்பது வரவேற்கத்தக்கது. மார்க்சியம், பெரியாரியம், அடித்தள மக்கள் ஆய்வுகள், நவீன சிந்தனைகள் ஆகியவற்றில் எந்தெந்தக் கூறுகளை நாம் இன்று உயர்த்திப் பிடிக்க வேண்டும்? எவற்றை விமர்சிக்க வேண்டும்? எவற்றையெல்லாம் முற்றாக மறுதலிக்க வேண்டும்? இவையும் நம்முன் உள்ள கேள்வி. கடும் உழைப்பையும் அதே நேரத்தில் விசாலமான பார்வையையும் கோரும் பணி இது.
தமிழ்ச் சூழலில் தேசிய இனப் பிரச்சினை முக்கியமான ஒன்று என்பதை விளக்க வேண்டியதில்லை. தேசம், இனம், மொழி, சாதி, மதம் சார்ந்த பற்றுக்களையும் அரசியல்களையும் கடுமையாக விமர்சித்த பெரியாரியப் பாரம்பரியம் தமிழகத்திற்கு உண்டு. அம்பேத்கர் இது குறித்து சில முக்கியப் பங்களிப்புகளைச் செய்துள்ளார். தமிழ்த் தேசியத்தைப் பொருத்தமட்டில் அதன் வரையறையில் தமிழ்நாட்டிலும் சரி, ஈழத்திலும் சரி பார்ப்பனிய சைவச் சிந்தனைகளின் கறை படிந்ததாகவே தேசியம் உருவாகியுள்ளது.
தலித்கள் இந்தத் தேசத்திற்குரியவர்கள், மொழிக்குரியவர்கள், மரபுகளுக்குரியவர்கள் என்கிற அம்சத்தை உயர்த்திப் பிடித்து அதனடிப்படையில் இன்றைய தமிழ்த் தேசியத்துடன், அந்த நீரோட்டத்துடன் வித்தியாசமின்றி இணைந்து கொள்ளும் போக்கும் இங்கே சில தலித் அமைப்புகளிடம் உள்ளதை விரிவாக விளக்க வேண்டியதில்லை. தேசியம் குறித்த நமது அணுகல்முறை என்ன? எவ்வளவு தூரம் அந்த நீரோட்டத்தில் இணைந்து நிற்பது? எவ்வளவு தூரம் விலகி நிற்பது?
ஈழ மக்களின் போராட்டத்தையும் அவர்களின் உரிமை வேட்கையையும் ஆதரிப்பதும், பேரினவாத அரசென்றால் கட்டவிழ்த்துவிடப்படும் கொடூரமான மனித உரிமை மீறல்களை எதிர்ப்பதும் விடுதலைப் புலிகளைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதும் ஒன்றா? இது ஏதோ விடுதலைப் புலிகள் தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல. தமிழ்நாட்டில் செயல்படும் தமிழ்த் தேசியச் சிந்தனைகள் மற்றும் இயக்கங்கள் குறித்த தலித்திய அணுகல்முறை தொடர்பான பிரச்சினையும்கூட. இது குறித்த ஒரு தெளிவான அணுகல் முறையை உருவாக்குவது நம்முன் உள்ள அடுத்த சவால்.
தேசிய வரையறையிலிருந்து எப்போதும் நழுவ விடப்படுபவர்கள் தலித்கள் மட்டுமல்ல. சிறுபான்மையினரும் கூடத்தான். மொழி, மதச் சிறுபான்மையினரைச் சொல்கிறேன். தேசிய அரசியலின் வீச்சுகல் பாதிக்கப்படுபவர்கள் இவர்கள்.
தொண்ணூறுகளுக்குப்பின் மறு உயிர்ப்பு கொள்ளும் பாசிச அரசியலாலும் பாதிக்கப்படுபவர்கள் இவர்கள். இவர்களுடனான தலித்தியத்தின் அணுகல் முறையையும் வரையறுத்தாக வேண்டும்.
இதுகாறும் மறுக்கப்பட்ட பொது நீரோட்டத்தில் நமக்கொரு பங்கு என்கிற நோக்கு சிறுபான்மையிடமிருந்து விலகி நிற்க வழி வகுத்துவிடும். அவ்வப்போதைய பிரச்சினைகளிலிருந்து முடிவெடுப்பது மட்டும் போதாது. இதுவரைக்கும் சிறுபான்மை மக்களிடமிருந்து தலித் அரசியல் பெரிய அளவில் விலகிவிடவில்லை. இந்தப்போக்கு தொடர்வதற்கு இது தொடர்பான ஒரு தெளிவான பார்வை தேவை. இதுவும் நம்முன் உள்ள சவாலே.
இந்து மதத்திலிருந்து வெளியேறுதல் என்பதை அம்பேத்கர் உறுதியாகவும், இறுதியாகவும் உரைத்துச் சென்றார். வாழ்ந்தும் காட்டினார். பெரிய அளவில் வடமாநிலங்களில் பவுத்தத்திற்கு மாற்றம் ஏற்பட்டது. இன்றும்கூட ஆங்காங்கு பவுத்த மத மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன. பவுத்தத்திற்கு மாறுதல் குறித்து இந்துத்துவ பாசிசம் கவலை கொள்ளவில்லை என்ற போதிலும் அது இந்து மத்தின் மீதான வெறுப்பை வெளிக்காட்டும், தீண்டாமைக்கான கண்டனத்தை உமிழும் ஒரு செயல்பாடாக இருந்தது, இருக்கிறது. ஆனால் இதுவும்கூட தமிழகத்தில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் நடைபெறவில்லை.
தொண்ணூறுகளுக்குபின் தலித்தியம் மேலெழுந்தபோது அயோத்திதாசர் ஊடாக இங்கே பவுத்த நோக்கிலான ஒரு வரலாறு கட்டமைக்கும் முயற்சி பாராட்டத்தக்க அளவில் மேற்கொள்ளப்பட்டபோதும் கூட இந்து மதத்திலிருந்து வெளியேறுதல் என்கிற முழக்கம் பெரும்பான்மையாக உள்ள இயக்கங்களால் முன்வைக்கப்படவில்லை. “தலித் முரசு” ¬தலான சில அமைப்புகள் இதைச் செய்த போதிலும் வலுவான அரசியல் இயக்கங்கள் அதைச் செய்யவில்லை.
மைய நீரோட்ட அரசியலில் பங்கு பெறுவதற்கு இத்தகைய விமர்சனங்கள் தடையாக இருக்கும் என்பது ஒரு நியாயமான அச்சமே. இந்த முரண் சூழலை நாம் எவ்வாறு கையாளப் போகிறோம்? இதுவும் நம்முன் உள்ள சவாலே. தலித்தியம் இதிலும் கவனம் செலுத்த வேண்டும். இந்துத்துவ பாசிசத்துடன் கைகோக்கும் தவறை, தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் தலித்தியம் இதுவரை செய்யவில்லை. இந்நிலை தொடர இந்தத் தெளிவு தேவை.
அயோத்திதாசரின் ஊடாக ஒரு மாற்று வரலாற்றைக் கட்டமைக்கும் பணி இங்கு மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் இது தொடர்பாகவும் ஒரு சில பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது. 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் 20ம் நூற்றாண்டின் முதற்பகுதியிலும் இயங்கியவர் அயோத்திதாசர். எவையெல்லாம் சங்க இலக்கியங்கள் என்பதெல்லாம்கூட இன்றைய தெளிவுடன் வரையறுக்கப்படாத காலம் அது. அதற்குப் பிந்தைய காலங்களில் பல வரலாற்றுண்மைகள் வெளிப்பட்டுள்ளன.
வரலாறெழுதியலும் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. இவற்றை எல்லாம் புறக்கணித்துவிட்டு அயோத்திதாசரை முற்று முழுதாக ஏற்று, ஒரு திருஉருவாகக் கட்டமைக்கும் போக்கு எந்த அளவிற்குச் சரியாக இருக்கும்? அயோத்திதாசர், கர்னல் ஆல்காட், தியாசபிகல் சொசைடி, அன்னிபெசன்ட் ஆகியோரின் உறவும் இந்த வகையில் ஆராயப்பட வேண்டிய ஒன்று. இந்து மதத்தின் பல கூறுகளை அவர் பவுத்தம் என ஏற்றுக்கொள்ளும் போக்கையும் ஒருவர் காண முடியும். தலித் பிரிவுகளுக்கிடையேயுள்ள உட்சாதி ஏற்றத்தாழ்வுகளையும் கூட அவர் இந்த வகையில் நியாயப்படுத்த நேரிடுகிறது.
இவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு அவரைத் திருஉருவாகக் கட்டமைக்கும் போது தலித் உட்பிரிவுகளின் ஒற்றுமைக்கும் அது இடையூறாகிவிடும். தவிரவும் சமணத்தையும் பவுத்தத்தையும் அவர் ஒன்றெனக் குழப்புவது வரலாற்றுண்மைகளுக்கு எதிரானது. என்ன பெரிய வரலாற்றுண்மைகள் என்கிற ரீதியில் இவற்றை உதறித் தள்ளிவிடுவதும், அயோத்திதாசர் சொல்லிவிட்டாரே என்கிற ரீதியில் அதுவே சரியானது என நியாயப்படுத்துவதும் வேறு பல பிரச்சினைகளுக்கும் வரலாற்று முரண்கட்டும் இட்டுச் செல்லும். இதுவும் இன்று தலித்தியம் சந்தித்துக் கொண்டுள்ள ஒரு மிகப்பெரிய சவாலே.
வரலாற்று ரீதியாக அடித்தள மக்களின் இயக்கங்களை நாம் உயர்த்திப் பிடிக்கும்போது கிராம்சி குறிப்பிட்ட எச்சரிக்கையை நாம் மறந்துவிடக்கூடாது. அடித்தள மக்களிடம் மோதற் கூறுகள் உள்ளது போலவே சமரசக் கூறுகளும் மிகுந்திருக்கும். உடனடி எதிரியைப் பெரிதாக எண்ணி தொலைவில் உள்ள இன்னும் ஆபத்தான எதிரியை நட்பு சக்தியாகப் பார்க்கும் பார்வையும் அதற்குண்டு. அடித்தள மக்களின் சிந்தனை, செயற்பாடுகள் அனைத்தும் சரியாகவே இருக்கும் என்கிற பார்வை பல பிரச்சினைகளுக்குக் காரணமாகும்.
இந்த சமரசக் கூறுகளைப் பயன்படுத்தி இந்துத்துவ பாசிச சக்திகள் குஜராத், கோவை முதலான இடங்களில் தலித் பிரிவினரை சிறுபான்மையினருக்கு எதிராகப் பயன்படுத்தியதை நாம் மறந்து விடலாகாது. அடித்தள மக்கள் எல்லா அம்சங்களிலும் சரியாக இருப்பார்கள் என்கிற Pழடவைiஉயட ஊழசசநஉவநௌள பார்வை அரசியல் செயலின்மைக்கும் இட்டுச் செல்லும். அவர்கள் மத்தியில் கருத்தியல் ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளைப் பின்னுக்குத் தள்ளிவிடும். இதுவும் தலித்தியம் சந்தித்துக் கொண்டிருக்கும் இன்னொரு பெரிய சவால்.
தலித்தியம் எல்லாவற்றிலும் கருத்துச் சொல்லக் கூடியதாக இருக்க வேண்டும். அமெரிக்காவுடன் ஏற்படுத்தப்படும் அணு ஒப்பந்தமாயினும் சரி, ஈராக் படை எடுப்பாயினும் சரி. கார்ப்பரேட்களின் செயல்பாடுகளாயினும் சரி எல்லாவற்றையும் பற்றி விமர்சிக்கத்தக்க வல்லமை அதற்குண்டு. அந்த வல்லமையை அது தன் அணிகளுக்குக் கையளிக்க வேண்டும். தானாகவே அடித்தள மக்களிடம் அது வந்துவிடும் என எதிர்பார்க்க முடியாது.
அறிவுச் செயல்பாடுகளுக்கு அம்பேத்கர் அளித்த முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கது. ஏராளமான அறிவுச் செல்வத்தை அம்பேத்கர், மார்க்ஸ், பெரியார் முதலியோர் நமக்குக் கையளித்துச் சென்றுள்ளனர். இவற்றை தலித் மக்களிடம் கொண்டு செல்லும் பணி இங்கு மேற்கொள்ளப்படவே இல்லை. பவுத்தத்தின் அற மதிப்பீடுகளும் மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை. தலித்தியத்திற்கு மிகப்பெரிய கருத்தியல் வளம் இருந்தும் கூட தலித் மக்களின், தலித் அரசியலின் கருத்தியல் பலமாக அது மாற்றப்படாதது தலித்தியம் சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்களிலெல்லாம் பெரிது.
தொடக்கத்தில் சொன்ன ஒன்றைச் சொல்லி முடிக்க விரும்புகிறேன். இந்தச் சவால்களை இங்கே முன்வைப்பது தலித்தியத்தைக் குறைத்து மதிப்பிடுவதோ, அதன் மகத்தான பங்களிப்புகளை மறுப்பதோ ஆகாது.
புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் தலித்தியத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஆர்வம் தலித்தியத்தின் மூன்றாவது எழுச்சியாகக் காணத்தக்கது. தேசியம், ஏகாதிபத்தியம், இலக்கியம் ஆகியவை குறித்த வளமான தலித்தியப் பார்வையை விட்டுசென்ற கே.டானியலின் பாரம்பரியம் உங்களுக்குண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக தேசம் மறுக்கப்பட்டு, பல்வேறு இடர்களையும், சவால்களையும் சந்தித்து எங்களைக் காட்டிலும் பல மடங்கு விசாலமான பார்வைச் சாத்தியத்தை அனுபவபூர்வமாகப் பெற்றவர்கள் நீங்கள். உங்களின் பங்கேற்பும், பங்களிப்பும் தலித்தியத்திற்கு எதிர்காலத்தில் பெரும்வளம் சேர்க்கும். தலித்தியம் சமகாலத்தில் சந்தித்துக் கொண்டுள்ள சவால்களை எதிர்கொள்ள அது பெரிதும் உதவும்.
அ.மார்க்ஸ்,
சென்னை- 600 020.
இந்தியா.
Wednesday, February 13, 2008
வாருங்கள் தலித் மாநாட்டிற்கு!
___________________________________________ -துசிடிடெஸ்
எதிர் வரும் 16-17ம் தேதிகளில் இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி இரண்டாவது தலித் மாநாட்டை இலண்டனில் நடத்தவிருக்கிறது. மாநாட்டில் இலங்கையிலிருந்து தோழர். ந. இரவீந்திரனும் தமிழகத்திலிருந்து தோழர்கள் அ.மார்க்சும், ஆதவன் தீட்சண்யாவும் கலந்துகொண்டு உரைவீச்சு நிகழ்த்தவிருக்கிறார்கள். மாநாட்டு அறிவித்தல்கள் வெளியானதும் சென்ற தடவை போலவே இம்முறையும் தலித் அரசியல் குறித்துப் பல்வேறு கேள்விகள் தோழர்களால் இணையத்தளங்களிலும் நேரிலும் எழுப்பப்படுகின்றன.
ஒடுக்கப்பட்ட சாதியினரைக் குறிக்கப் பஞ்சமர் என்ற சொல் வழக்கத்திலிருக்கும்போது அதை மறுத்து 'தலித்' என்ற சொல் ஏன் முன்னிறுத்தப்படுகிறது என்ற எளிமையான கேள்வி மறுபடியும் மறுபடியும் எழுப்பப்படுகிறது. பஞ்சமர் என்பது ஈழத்தில் ஒடுக்கப்பட்ட சாதிகளான பள்ளர், பறையர், நளவர், வண்ணார், அம்பட்டர் ஆகிய அய்ந்து சாதிகளையும் குறிப்பதற்கான சொல் என்றொரு தவறான புரிதல் பலரிடமுண்டு. கே. டானியல், டொமினிக் ஜீவா போன்றவர்கள் கூட இந்த அய்ந்து சாதிகளையும் குறிக்கும் சொல்லே பஞ்சமர் என்று (பஞ்ச பூதங்கள், பஞ்ச பாண்டவர் என்பதைப்போல) பல தடவைகள் பேசியும் எழுதியுமிருக்கிறார்கள். ஆனால் இந்தப் புரிதல் சரியற்றது.
இந்துமத வருணாசிரம நெறிகளின்படி பார்ப்பனர்கள், ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எனப்படும் நான்கு வருணத்தினரும் முறையே பிரம்மனின் தலை, மார்பு, தொடை, பாதம் ஆகிய பகுதிகளிலிருந்து தோன்றியவர்களாம். இந்த நான்கு வருணங்களிற்கும் புறத்தே தள்ளி வைக்கப்பட்ட மக்கள் பிரம்மனிடமிருந்து தோன்றவில்லையாம். எனவே பிரம்மனிடமிருந்து தோன்றாதவர்கள் அ- வருணர்கள் அல்லது அய்ந்தாவது வருணத்தவர்கள் என்று இந்துமதத்தில் குறிப்பிடப்பட்டார்கள். இந்த அய்ந்தாவது வருணக் கோட்பாட்டிலிருந்ததான் 'பஞ்சமர்' என்ற இந்துமதச் சொல், இழிவுச்சொல் உருவாக்கப்பட்டது. காந்தியார் பிரம்மனிடமிருந்து தோன்றாத இந்த மக்கள் பெருமாளிடமிருந்து தோன்றியவர்கள் என்றொரு சொல்லாடலைக் கண்டு பிடித்து பெருமாளின் மக்கள் எனும் பொருள்பட 'அரிஜனங்கள்' என்று பெயரிட்டு அழைத்தார். அரிஜன் என்ற பெயர் காந்தியாரின் காலத்திலேயே பாபா சாகேப் அம்பேத்கரால் நிராகரிக்கப்பட்டது.
ஆக, பஞ்சமர் என்ற பெயர் மட்டுமல்லாமல் அரிஜன், பறையர், பள்ளர் என்ற பெயர்களும் கூட சாதியத்தை உருவாக்கிய ஆதிக்க சாதியினராலும் இந்து மதத்தாலும் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பெயர்களே தவிர தலித் மக்கள் தாங்களே தேடிக்கொண்ட பெயர்கள் கிடையாது. எனவே அந்த இழிவுச் சொற்களை மறுத்து நொருக்கப்பட்ட மக்கள் என்ற பொருள்கொண்ட 'தலித்' என்ற சொல்லை மகராட்டிரத்தில் தலித் சிந்தனையாளர்கள் முன்னிறுத்தினார்கள். உலகம் முழுவதுமுள்ள தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் மற்றும் அடையாளப்படுத்தும் சொல்லாகத் தலித் என்ற சொல் இன்று உருவாகியுள்ளது. முன்பெல்லாம் தீண்டப்படாத மக்களைக் குறிக்க அய்ரோப்பிய மொழிகளில் 'Paraiyas' என்ற வார்த்தை உபயோகிக்கப்பட்டது. இப்போது இந்த மொழிகளில் தலித் என்ற சொல்லே கையாளப்படுகிறது. பல்வேறு சாதிய அடையாளங்களுக்குள் தள்ளிவிடப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை உட்சாதிப் பிரிவுகளைக் கடந்து ஒன்றிணைக்கும் அடையாளமாகவும் தலித் என்ற அடையாளம் திகழ்கிறது.
ஈழத்தில் யோவேல் போல், ஜேக்கப் காந்தி போன்றவர்கள் 1940களிலேயே பஞ்சமர் என்ற சொல்லை நிராகரித்து 'சிறுபான்மைத் தமிழர்கள்' என்ற அடையாளத்தையே முன்னிறுத்தினார்கள். அவர்கள் கட்டியெழுப்பிய சாதியொழிப்பு அமைப்பிற்கு 'சிறுபான்மைத் தமிழர் மகாசபை' என்றுதான் பெயர்.
அப்படியானால் தலித் என்ற சொல்லை விடுத்துச் சிறுபான்மைத் தமிழர்கள் என்று அழைத்துக்கொள்ளலாமே என்றொரு இடக்குமடக்கான கேள்வியும் எழுப்பப்படுகிறது. இப்போது ஈழத்திலிருந்து ஏராளமான வெள்ளாளர்கள் புலம்பெயர்ந்துவிட்டதால் ஈழத்தைப் பொறுத்தவரை அவர்கள்தான் இப்போது சிறுபான்மையினர். வேண்டுமென்றால் வெள்ளாளர்கள் தங்களைச் சிறுபான்மைத் தமிழர்கள் என்று அழைத்துக்கொள்ளட்டும்
என்றாலும் தலித் தமிழ் வார்த்தையில்லையே? என்றுறொரு துணைக்கேள்வியும் அடிக்கடி கேட்கப்படுகிறது. பஞ்சமர் மட்டும் தமிழ் வார்த்தையா என்ன? அதுவும் வடமொழி வார்த்தைதானே. சாதி என்ற வார்த்தையும் வடமொழிதான். தமிழில் புழக்கத்திலிருக்கும் தேசம், ஜனநாயகம், சோசலிசம், கொம்யூனிஸம், போன்ற ஊருப்பட்ட வார்த்தைகளைத் தமிழ்மொழி பிறமொழிகளிலிருந்துதானே ஏற்றுக்கொண்டுள்ளது. ஏன் சூரிய தேவன், துவக்கு, துப்பாக்கி போன்றவை கூட பிறமொழி வார்த்தைகள்தானே! இதைவிட அன்றாட வாழ்வியற் சொற்களில் கூட எண்ணுக்கணக்கற்ற பிறமொழிச் சொற்களைத் தமிழ்மொழி உள்வாங்கித்தானேயிருக்கிறது. ஒரு மொழி பிறமொழிச் சொற்களைக் கொள்வதும் கொடுப்பதும் தவிர்க்க முடியாததே. இன்று புழக்கத்திலிருக்கும் எல்லா மொழிகளுமே பிறமொழிச் சொற்களை - குறிப்பாக அரசியலிலும் அறிவியலிலும் - உள்வாங்கியுள்ளன. தேசம் என்னும்போதோ சோசலிசம் என்னும்போதோ சூரியதேவன் என்னும்போதோ வாயைப் பொத்திக்கொண்டிருப்பவர்களுக்குத் தலித் என்று நாங்கள் சொன்னால் மட்டும் தனித் தமிழ்பற்றுப் பொங்கிவருவதை என்னவென்று சொல்வது!
'புலம்பெயர் தேசங்களிலுள்ள தலித் அரசியலாளர்கள் மார்க்ஸிய எதிரிகள்' என்று ஒரு நான்கு மடையர்கள் எப்போதும் கூக்குரலிட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். மார்க்ஸியத்தின் போதாமைகள் குறித்து நாங்கள் பேசியிருக்கிறோம். பின்நவீனத்தைக் கொண்டாடும் அதே தருணத்தில் 'பின்நவீனத்துவநிலை என்பது ஒரு தத்துவமோ, அரசியல் இயக்கத்தின் வேலைத்திட்டமோ, இலக்கியக் கோட்பாடோ கிடையாது. அது அறிதல் முறைகளின் தொகுப்பு மட்டுமே' என்று நாங்கள் மறுபடியும் மறுபடியும் சொல்லிவருகிறோம். மார்க்ஸியம் சாதிச் சமூகத்தின் தனித்துவமான இயங்குமுறைகளைக் கவனத்திலெடுத்து வளர்த்தெடுக்கப்பட வேண்டியது என்கிறோம். தமிழகத்திலும் ஈழத்திலும் தொடர்ந்து மார்க்ஸியர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறோம். எங்கள் இணையத்தளங்களிலும் இதழ்களிலும் அவர்களின் எழுத்துகளை மகிழ்வுடன் பிரசுரிக்கிறோம். இதன் பொருள் நாங்கள் மார்க்ஸிய விரோதிகள் என்பதா?
இலண்டன் தலித் மாநாட்டில் உரைவீச்சு நிகழ்த்த அழைக்கப்பட்டிருப்பவர்களின் பெயர்களைச் சற்றுக் கவனியுங்கள். தோழர் ந. இரவீந்திரன் இலங்கையிலுள்ள குறிப்பிடக்கூடிய மார்க்ஸியச் சிந்தனையாளர்களில் ஒருவர், புதிய ஜனநாயக் கட்சியில் இயங்குபவர், தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்பாட்டாளர். தோழர் ஆதவன் தீட்சண்யா இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கியப் பிரிவான முற்போக்கு எழுத்தளர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர். தோழர் அ. மார்க்ஸ் நீண்ட நாட்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் செயற்பட்டு எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவான நிலையெடுத்ததால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். இன்றுவரை தன்னை மார்க்ஸிஸ்டாக உறுதியோடு அடையாளப்படுத்துபவர். நக்ஸல்பாரிகளோடு அவர் இயங்கிய காலத்தையே தனது அரசியல் வாழ்வின் உன்னதமான தருணங்கள் என்பவர். இவற்றைத் தனது எழுத்துகளிலும் பதிவு செய்திருப்பவர்.
நவீனத்துக்குப் பிந்திய சிந்தனை முறைமைகளை அறிமுகப்படுத்துவதும் அவை குறித்து உரையாடுவதும் இன்றைய குறிப்பான புறச்சூழல்களுக்கும் குறிப்பான சமூக அமைப்புகளுக்கு ஏற்றவாறு மார்க்ஸியத்தை வளர்த்தெடுக்க வேண்டுமென்பதும் மார்க்ஸிய விரோதமாகாது. தலித் அரசியல் தனக்கு மிக நெருங்கிய அரசியல் போக்காக மட்டுமல்லாமல் தாய் அரசியலாகவும் மார்க்ஸியத்தைத்தான் கருதுகிறது. அதே வேளையில் அது வரட்டுவாத மார்க்ஸியர்களை ஈவிரக்கமின்றி நிராகரிக்கிறது. இந்தத் அரைகுறை மார்க்ஸியர்களோடு மல்லுக்கட்டுவதிலும் எந்தப் பயனுமில்லை. ஏனெனில் "நூறு அறிஞர்களோடு மோதுவதைவிட ஒரு முட்டாளோடு மோதுவது சிரமமானது" என்று எங்களுக்குப் பெரியார் சொல்லித் தந்திருக்கிறார்.
'தேசியம் ஒரு கற்பிதம்' என்கிறார்கள் தலித் அரசியலாளர்கள் என்று இன்னொரு காட்டமான விமர்சனமும் வைக்கப்படுகிறது. தேசியம் ஒரு கற்பிதம் என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் தெரிந்துவைத்துக்கொண்டு தேசியம் ஒரு மாயை அல்லது பிரமை என்ற பொருள்பட எளிமைப்படுத்திப் புரிந்துகொள்வதால் நேரும் தவறிது. பெனடிக்ற் அன்டர்ஸனின் 'Imagined Communities' என்ற நூலை முன்வைத்துத்தான் தமிழில் இந்த உரையாடல் நிறப்பிரிகையால் தொடக்கிவைக்கப்பட்டது. 'தேசியம் ஒரு சமூகமாகக் கற்பிதம் செய்யப்படுகிறது. ஆனால் ஒரு சனநாயகச் சமூகத்துக்குரிய பண்புகள் தேசியமாகக் கற்பிதம் செய்யப்பட்ட சமூகத்திற்குக் கிடையாது. அது தனக்குள்ளே ஒடுக்குமுறைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. அதேவேளையில் ஒடுக்குபவனையும் ஒடுக்கப்படுபவனையும் தேசியம் என்ற மந்திரச் சொல்லால் ஒரே சமூகக் கயிற்றில் கட்டிப்போடுகிறது. ஒடுக்கப்படுபவனை தேசியத்தின் பெயரால் ஒடுக்குமுறைகளைச் சகித்துக்கொள்ள நிர்ப்பந்திக்கிறது. எனவே தேசியம் ஒரு இயல்பாய் உருவாக்கமான சமூகம் கிடையாது. அது அதிகாரத்தால் கட்டமைக்கப்படுவது' என்பதுதான் அன்டர்சனின் கருத்தாக்கம். இந்தக் கருத்தாக்கம் வேறுயாருக்கு முக்கியமோ இல்லையோ தலித் மக்களுக்கு மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் தேசியம், தமிழர் போன்ற பேரடையாளங்களால் சாதிய ஒடுக்குமுறைகளைச் சகித்துக்கொள்ளுமாறு தலிததுகள் வரலாறு முழுவதும் நிர்பந்திக்கப்பட்டே வந்திருக்கிறார்கள். அம்பேத்கரையும் பெரியாரையும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பேரால் ஆதிக்கசாதியினர் நிராகரித்திருக்கிறார்கள். பெரியாரோ சுதந்திர தினத்தை துக்க தினமாகப் பிரகடனப்படுத்தியவர். தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தை தமிழ் தேசியப் பேரடையாளத்துக்குள் ஒழித்துக்கட்டிவிட தமிழரசுக் கட்சி முயன்றது. ஆனால் தலித் மக்களின் தனிப்பெரும் தலைவர் எம். சி. சுப்பிரமணியமோ தனித் தலித் தேசியம் என்றே முழங்கினார். தேசியம் என்கிற கட்டமைக்கப்பட்ட சமுகத்துள்ளிருக்கும் சிக்கல்களை நாங்கள் பேசுவதால் தேசியமே கிடையாது அது மாயையானது என்று நாங்கள் சொல்வதாகப் பொருள் கிடையாது. தோழர்கள் பெனடிக்ற் அண்டர்சனின் நூலையும், நிறப்பிரிகை வெளியிட்ட 'தேசியம் ஒரு கற்பிதம்' என்ற நூலையும் படித்துப் பார்க்க வேண்டும்.
தலித்தியம் பேசி சாதியத்தை நாங்கள் வளர்க்க முயல்கிறோம் தமிழர்களிடையே பிரிவினையை உருவாக்க முயல்கிறோம் என்றும் குற்றச்சாட்டப்படுகிறோம். இது ஒரு அயோக்கியத்தனமான குற்றச்சாட்டு. நாங்கள் சாதிய அரசியலை முன்னிறுத்துவது கிடையாது. நாங்கள் சாதிகளை முற்றுமுழுதாக ஒழிக்கவேண்டுமென்று சாதியொழிப்பு அரசியலைத்தான் முன்னிறுத்தி வருகின்றோம். சாதியொழிப்புக் குரல்கள்தான் புதிதாகத் தமிழர்களிடையே பிளவுகளை ஏற்படுத்த வேண்டுமென்றில்லை. ஏனெனில் தமிழர்கள் ஏற்கனவே பல நூற்றாண்டுகளாகச் சாதியால் திட்டவட்டமாகப் பிளவுண்டுதான் கிடக்கிறார்கள். எனவே சாதியொழிப்புத்தான் தமிழர்களிடையே அய்க்கியத்திற்கு முன்நிபந்தனையாக அமையும். எனவே சாதியொழிப்புக் குரல்கள் தமிழர்களின் உரிமைப் போரட்டத்திற்கு எதிரானது வர்க்கப்போராட்டத்திற்கு எதிரானது என்ற குற்றச்சாட்டுகள் ஆதிக்கசாதிச் சாதிப்பற்றை மறைப்பதற்கான தந்திரங்களே தவிர வேறல்ல.
சென்ற தலித் மாநாட்டுக்கு வீ. ஆனந்தசங்கரியும், EPRLF (ப.நா) செயலாளர் சிறீதரனும் வாழ்த்துகளை அனுப்பியிருந்தார்கள். மாநாட்டில் ஒருசில ENDLF, PLOTE, EPRLF உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள். எனவே தலித் அரசியல் துரோக அரசியல் என்றொரு குற்றச்சாட்டுமுண்டு. என்னைப் பொறுத்தவரை நான் புலிகளைக் கண்டிப்பதைப் போலவே எப்போதும் கூட்டணியையும் மற்ற இயக்கங்களையும் கண்டித்து வந்துள்ளேன். அதே வேளையில் புலிகள் இயக்கத்திலும் சரி பிற அமைப்புகளிலும் சரி சாதிய விடுதலையில் அக்கறைகொண்ட தலித்துகளும் சொற்ப அளவில் தலித் அல்லாதவர்களுமிருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் மறந்துவிட முடியாது. ஒரு தலித் புலியாயிருக்கலாம், புளட்டாய் இருக்கலாம் கொம்யூனிஸ்டாக இருக்கலாம். ஆனால் அவர் தன்னளவில் சாதியத் தளையிலிருந்து விடுபடவே விரும்புவார். ஆதிக்கசாதியினருக்கு எதிரான தார்மீகக் கோபம் அவரது உள்ளத்தில் கனன்றுகொண்டுதானிருக்கும். எனவே இந்த இயக்க அரசியல்களுக்குப் புறத்தே சாதியொழிப்பு என்ற தளத்தில் சாதியத்திற்கு எதிரான சக்திகளைச் சாத்தியமான வழிகளிலெல்லாம் அய்க்கியப்படுத்த வேண்டும். சாதியம் குறித்து மிகக் கூர்மையான பார்வையும் எழுத்து வன்மையும் கொண்ட சிவா சின்னப்பொடி, 'வெப் ஈழம்' சபேசன் போன்றவர்களெல்லாம் தலித் அரசியலுக்கு வெளியே இருப்பது தலித் அரசியலுக்கு நிச்சயமாகவே இழப்புத்தான்.
எனவே இந்தத் மாவீர அரசியல் X துரோக அரசியல் எதிர்வுகளுக்குப் புறத்தே சாதியொழிப்பை விரும்புவர்கள் அய்க்கியப்பட வேண்டும். இது நடக்க முடியாத ஒன்றல்ல. வரலாற்றில் நமக்கொரு முன்னுதாரணமும் இருக்கிறது. ஈழத்தில் சாதியொழிப்புப் போராட்டங்களைத் தொடக்கிக் கணிசமான வெற்றிகளைச் சாதித்த சிறுபான்மைத் தமிழர் மகாசபையில் கொம்யூனிஸ்டுகளும் இருந்தார்கள். தமிழரசுக் கட்சியினரும் இருந்தார்கள். எதிரும் புதிருமான அரசியல் நிலைகளுக்கு அப்பாலும் தலித் விடுதலை என்ற உணர்வு அவர்களை அய்க்கியப்படுத்தியது.
மாநாடு நடத்துவதால் தலித்துகளுக்கு விடுதலை கிடைத்துவிடுமா என்றொரு கேள்வியும் கேட்கப்படுகிறது. 'நாங்கள் தலித்துகளிற்கு விடுதலை பெற்றுக் கொடுத்துவிடுவோம், அதற்கான வேலைத் திட்டம் எங்கள் கையிலிருக்கிறது' என்றெல்லாம் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியோ அதன் ஆதரவாளர்களோ ஒருபோதும் சொன்னதில்லை. சாதியக் கட்டமைப்பின் பண்புகள் மற்றும் சாதிக்கட்டமைப்பிலிருந்து மீள்வதற்கான வழிகளை உருவாக்குதல் போன்றவற்றை ஆராய்வதற்கும் உரையாடுவதற்குமான முயற்சியிலேயே தலித் மாநாடுகள் கூட்டப்படுகின்றன. இந்த உரையாடல்கள் வழியேதான் காலப்போக்கில் ஈழத்தில் சாதிய விடுதலைக்கான ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை உருவாக்கிக்கொள்ள முடியுமென்று நாங்கள் நம்புகிறோம்.
மாநாட்டிற்கு இலங்கை அரசு நிதிவழங்குகிறது, பிரஞ்சு அரசு நிதியுதவி வழங்குகிறது போன்ற ஆதாரமற்ற அவதூறுகளிற்கு நான் ஏற்கனவே சத்தியக்கடதாசியில் பதிலளித்திருக்கிறேன். நிரூபிக்க முடியுமா? என்று அவதூறுகளை விதைத்தவர்களிடம் கேள்வியெழுப்பியுள்ளேன். அவர்கள் இன்றுவரை தங்களது குற்றச்சாட்டுகளிற்கு ஆதாரங்களைத் தெரிவிக்கவில்லை, அயோக்கியப் பயல்கள்!
'புகலிடத்தில் எல்லாக் கோயில்களுக்குள்ளும் தலித்துகள் போகலாம்' என்றொரு கருத்தை 'தேசம்' இணையத்தளத்தில் ஒரு தோழர் முன்வைத்திருக்கிறார். ஆனால் அந்தக் கோயில்களின் கருவறைகளுக்குள் ஏன் பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை? ஏன் பார்ப்பனர்கள் தவிர்ந்த மற்றைய சாதியினருக்கு அர்ச்சகராகும் உரிமை கிடையாது என்ற கேள்வியையும் அந்தத் தோழர் கேட்டுப்பார்க்க வேண்டும். இது தீண்டாமையில்லையா? வெறுமனே வீரகேசரியிலும் தினக்குரலிலும் வெளியாகும் சாதியத் திருமண விளம்பரங்களைப் படித்தாலே ஒருவரால் புகலிடத்திலும் உறைந்துகிடக்கும் சாதிய மனநிலைகளை விளங்கிக்கொள்ள முடியுமே!
நம் கடவுள் சாதி காப்பாற்றும் கடவுள்,
நம் மதம் சாதி காப்பாற்றும் மதம்,
நம் இலக்கியம் சாதி காப்பாற்றும் இலக்கியம்,
நம் மொழி சாதி காப்பாற்றும் மொழியென்றார் தந்தை பெரியார். இங்கே பொதுவான தமிழ்ப் பண்பாடென்றோ பொதுவான தமிழ்க் கலாச்சாரமென்றோ எதுவுமே கிடையாது. நமது கலாச்சாரம் சாதியத்தாலேயே வடிவமைக்கப்பட்டது. பிறப்புச் சடங்குகள் தொடங்கி திருமணம், இறப்புச் சடங்குகள்வரை சாதி சார்ந்தே நமது தமிழ்க் கலாச்சாரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாதியக் கலாச்சாரத்திலிருந்து புகலிடம் கூடத் தப்பிக்கவில்லை.
சாதியம் என்பது வறுமை, சீதனம் போன்ற ஒரு சமூகக் குறைபாடு கிடையாது. சாதியம் ஒரு வாழ்வியல் முறைமையாக இங்கே கட்டமைக்கப்பட்டுள்ளது. மதம், மொழி, இலக்கியம் என எல்லாப் பரப்புகளிலும் சாதியம் தனது நீண்ட கரங்களை எறிந்து வைத்துள்ளது. எனவே நமக்கு இப்போது தேவை ஒரு கலாச்சாரப் புரட்சி. சாதியத்திற்கு, சாதிய மனநிலைக்கு முடிவுகட்டாமல் வேறெந்த விடுதலை குறித்தும் நாங்கள் பேசவே முடியாது.
இவை குறித்துப் பேசவும் விவாதிக்கவும் இன்னும் ஏராளமிருக்கிறது. தோழர்களே! தலித் மாநாட்டிற்கு வாருங்கள். விவாதத்திற்கும் கருத்துரைப்புகளிற்கும் மாநாட்டில் போதியளவு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சாதியொழிப்பைக் குறித்த கூட்டுவிவாதத்தின் மூலம் ஒரு பொதுக்கருத்தை இந்த மாநாட்டில் உருவாக்க நீங்களும் பங்களிப்புச் செய்ய வேண்டும்!
- ஷோபாசக்தி
13.02.2008
Friday, February 01, 2008
இரண்டாவது தலித் மாநாடு லண்டன்
மாநாட்டு நிகழ்ச்சி நிரல்_ விபரங்கட்கு
Monday, January 07, 2008
புத்தக சந்தையை விழுங்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள்
கருப்புப் பிரதிகள் பதிப்பகம் எப்படி உருவானது?
கருப்புப் பிரதிகள் பெரிய பின்புலத்தோடோ, பணமுதலீட்டோடோ, திட்டமிட்டோ தொடங்கப்பட்டதல்ல. ஐ.ஐ.டிக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டிருந்த பிரசுரத்தையும், தலித் முரசு வெளியிட்டிருந்த ‘வடநாட்டுப் பெரியார், தென்னாட்டு அம்பேத்கர்’ பிரசுரத்தையும் விற்பனை செய்யும் வேலையாகத் தான் முதலில் ஆரம்பித்தேன். அப்போது தான் பிரசுரங்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
அதன் பின் தலித்துகளுக்கு ஆதரவாக அ.மார்க்ஸ் எழுதிய ஒரு பிரச்சாரப் புத்தகத்தை வெளியிட்டோம். பிரசுரங்கள் ஏற்படுத்திய பாதிப்பும், அது கொடுத்த அரசியல் அனுபவமும் தான் ‘கருப்புப் பிரதிகள்’ உருவாகக் காரணமாய் இருந்தது. கருப்புப் பிரதிகள் இதுவரை வெளியிட்ட அத்தனை புத்தகங்களும் அரசியல், சமூகம் சார்ந்த இலக்கியங்கள் மட்டுமே. பொழுதுபோக்கு இலக்கியம் என்பது என் பதிப்பகத்தில் எதிர்காலத்திலும் வெளிவராது.
தமிழ்ப் பதிப்பகச் சூழல் தற்போது எப்படி உள்ளது?
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மாற்றுப் பத்திரிகைகளோ, புத்தகங்களோ நடத்துவது என்பது கனவாகத் தான் இருந்தது. ஆனால் இன்றைக்கு நிலைமை ஓரளவுக்கு மாறியிருக்கிறது. மாற்றுக் கருத்துக்களுக்கும் இடம் வேண்டும் என்ற சிந்தனையோடு இடதுசாரிகள் பதிப்பகத் துறையில் கால்வைத்திருப்பது இதற்கு ஒரு காரணம். பாரதி புத்தகாலயத்தை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
ஈழத்தமிழர்கள் தான் தமிழ் புத்தகங்களை அதிக அளவு வாசிப்பவர்கள். ஆனால் அவர்களிடம் நமது மாற்றுச் சிந்தனை புத்தகங்கள் போய்ச் சேருவதில்லை. உயிர்மை, காலச்சுவடு பதிப்பகங்கள்தான் தங்கள் புத்தகங்களை அவர்களிடம் அதிக அளவில் விற்று வருகின்றன. இவர்கள் விற்பனையில் செலுத்துகிற கவனத்தை புத்தகங்களின் அரசியலை, எழுத்தின் தன்மையைக் கவனிப்பதில் செலவிடுவதில்லை. இங்குள்ள பதிப்பகத்தார் மாற்றுச் சிந்தனைகளை புத்தகங்களாகக் கொண்டு வருவதில் காட்டிய ஆர்வத்தை, உலகம் முழுவதும் புத்தகங்களைக் கொண்டு செல்வதில் காட்டவில்லை. குறிப்பாக பாலியல் தொழிலாளிகள் குறித்த பார்வையை, அவர்கள் வாழ்க்கையை விளக்கும் சொற்களை மாற்றியமைத்தது பெரியாரியத் தோழர்களும், இடதுசாரித் தோழர்களும் தான். அரசியலை உற்பத்தி செய்த தளம் நம்முடையதாக இருந்தாலும், விற்பனைத் தளம் காலச்சுவடு, உயிர்மை போன்ற பதிப்பகங்களிடம் தான் இருக்கிறது. அரசு சார்ந்த இடங்களில் தன்னுடைய ஆட்களை அனுப்பி அதன் அனுகூலங்களை பெறுபவர்கள் காலச்சுவடு பதிப்பகத்தினர். நூலக ஆணையை எதிர்பார்த்து தான் பதிப்பக ஆட்கள் இயங்குகிறார்கள். ஆனால் அரசின் நூலக ஆணையும், கோடிக்கணக்கான பணமும் மாற்றுச் சிந்தனையாளர்களின் பதிப்பகங்களுக்கோ, எழுத்தாளர்களுக்கோ போய்ச்சேருவதில்லை. எந்தவித வரலாறும், போராட்டங்களும் தெரியாமல் சாப்பிட்டு, குடித்து கும்மாளம் அடிப்பவர்களுக்குத் தான் இந்தப்பணம் போய்ச் சேருகிறது. மேலும் புத்தக பதிப்பிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்துவிட்டன. அவர்களிடமும் ஒரு அரசியலும் இல்லை.
ஈழத்தமிழர்களின் பிரச்சனை ஓயும்போது இங்குள்ள பதிப்பகங்கள் அரசியல் சார்ந்த பதிப்பகங்கள், அரசியலற்ற பதிப்பகங்கள் என இரண்டாகப் பிரியும். அப்போது தான் அரசியல் சார்ந்த பதிப்பகங்களின் செயல்பாடுகளை நாம் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.
ஈழத் தமிழர்களின் வாசிப்பு அனுபவம் எந்த மாதிரியாக இருக்கிறது?
நாவலாசிரியை ரமணிச்சந்திரனை சிற்றிதழ் உலகில் யாருக்கும் தெரியாது. ஆனால் அவரது புத்தகங்களைத் தான் ஈழத்தமிழர்கள் அதிகம் படிக்கிறார்கள். ஐரோப்பாவிற்கு புத்தகம் ஏற்றுமதி செய்கிறவர்களைக் கேட்டால் நீங்கள் ரமணிச்சந்திரன் நாவலைப் போடுங்கள் அதிகம் விற்பனையாகும் என்றுதான் சொல்கிறார்கள். சோளகர் தொட்டி பற்றியோ, ஷோபா சக்தியின் நாவல் பற்றியோ அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை.
பதிப்பகத் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்துவிட்டதை பற்றிக் குறிப்பிட்டீர்கள். அவர்களது அரசியல் என்னவாக இருக்கிறது?
கார்ப்பரேட் நிறுவனங்கள் சேகுவேரா பற்றி புத்தகங்கள் வெளியிடுவதில் ஒரு சமூக அக்கறையும் கிடையாது. சேகுவேரா இவர்களுக்கு ஒரு Icon அவ்வளவுதான். பார்ப்பனர்கள் சேகுவேரா டி ஷர்ட்டை போட்டுக்கொண்டு திரிவார்கள். அம்பேத்கர் படத்தையோ, பெரியார் படத்தையோ போடமாட்டார்கள். அவர்கள் இருவரும் தான் உள்நாட்டுப் பிரச்சனைகளையும், இங்குள்ள சாதீய உள்கட்டமைப்பு குறித்தும் பேசியவர்கள்.சேகுவேரா லத்தீன் அமெரிக்க நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடியவர். நம் தமிழ்ச் சமூகத்தில் இப்போது அமெரிக்காவை எதிர்ப்பது என்பது ஒரு பேஷனாகி விட்டது. அதைத்தான் இதுபோன்ற புத்தகங்களை வெளியிடுபவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ம.க.இ.க.வைப் போல் அதை ஒரு கடமையாகச் செய்வதில்லை. தாமிரபரணியை உறிஞ்சும் கோக்கை எதிர்த்து ம.க.இ.க.தோழர்கள் தான் அடி, உதை வாங்கினார்கள். சித்திரவதைகளை மீறி துண்டுப் பிரசுரங்கள் விற்றார்கள்.
எப்போதுமே ஒரு பிரச்சனைக்காக உழைப்பது நாமாகவும், அதன் பயனை அனுபவிப்பது அவர்களாகவும் இருந்துகொண்டு இருக்கிறார்கள். தலித் பிரச்சனையை எடுத்துக் கொண்டாலும் அதற்காக போராடியது நம்முடைய இயக்கங்கள்தான். சொந்த வேலையையும் பார்த்துக் கொண்டு இயக்கங்களுக்காக புத்தகங்களை பல கிலோமீட்டர் சைக்கிளில் போய் விற்று தோழர்கள் எவ்வளவு சிரமப்பட்டார்கள். இந்த அரசியலை உருவாக்குவதற்காக பெரும்பாடுபடுபவர்களாகவும், சிறைக்குச் செல்பவர்களாகவும் நாம் இருக்க, சந்தைப்படுத்தி விற்று இலாபம் பார்ப்பவர்களாக கார்ப்பரேட் பார்ப்பன நிறுவனங்கள் இருக்கின்றன.
அவர்களது சந்தையை ஏன் நம்மால் கைப்பற்ற முடியவில்லை?
சேகுவேரா ஒரு அரசியல், சமூக அடையாளமாக இருக்கலாம். ஆனால் 'கிழக்குப் பதிப்பகம்' போடும் புத்தகத்தில் அரசியலற்ற தன்மை தான் இருக்கும். அதேபோல் பதிப்பகத்துறையில் அட்டை வடிவமைப்பு, அச்சு போன்றவற்றிலும் உலகமயமாக்கலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதை என்.ஆர்.ஐக்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பொதுவாகவே பார்ப்பனர்கள் சிறுபத்திரிகை உலகிற்கு அடிக்கடி வருவார்கள். திரும்பி தங்களது அக்ரஹாரத்திற்குள் சென்று பச்சைப் பார்ப்பனர்களாகவும் நடந்து கொள்வார்கள். அதாவது பொழுதுபோக்கிற்காக இலக்கியம் பேசுவார்கள். இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் இடம் ஒரே நாளில் உருவானதல்ல. ஏற்கனவே தன்னுடைய புத்தகத்தைத் தானே அச்சிட்டு சலித்துப்போன எழுத்தாளர்களும் சேர்ந்துதான் இந்த தளத்தை உருவாக்கியிருக்கிறார்கள். பெரியாரிய வழியில் வந்த எனக்கு எப்போதுமே தமிழ் இலக்கியம் குறித்து ஒரு அச்சம் இருக்கும். சாதி, மதங்களின் பெயரால் இங்கு நடக்கும் அடிமைத்தனத்தையும், அநியாயங்களையும் பார்த்து கொதித்துப்போய் இருக்கும் எனக்கு இந்த இலக்கியத்தில் என்ன இடம் என்ற கேள்வி இருந்ததுண்டு. இங்கு இருக்கிற எல்லாப் பத்திரிகைகளும் புரியாத தன்மையோடும், ஒரு மிரட்டல் தன்மையோடும் தான் இருந்தது.‘நிறப்பிரிகை’க்குள் தான் என்னால் அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் நுழைய முடிந்தது. பெரியார் ஏற்படுத்தியிருந்த பார்ப்பனர் அல்லாத அச்சமற்ற தன்மையை இலக்கியத்திற்குள் நிறப்பிரிகை மட்டுமே ஏற்படுத்தியிருந்தது. இன்றைக்கு இருக்கிற தலித் அரசியலின் கச்சாப்பொருள் எனக்குத் தெரிந்து நிறப்பிரிகை தான். ஆனால் இன்றைக்கு அது காணாமல் போய்விட்டது. வணிக நோக்கிலான பத்திரிகைகள் தான் இதற்குக் காரணம்.
நிறப்பிரிகையில் இருந்த ஆ.சிவசுப்பிரமணியம், தொ.பரமசிவம் போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் இன்று 'காலச்சுவடு' பதிப்பக வெளியீடாக வருகின்றன. சிவசுப்பிரமணியத்தின் அரசியலில் தான் நாங்கள் உருவானோம். இலக்கியம் தான் கலாச்சாரத்தை கற்றுக்கொடுக்கிறது, இதற்குள் பார்ப்பனர்கள் எப்படி நுட்பமாக இயங்குகிறார்கள் என்று பார்க்க சொல்லிக்கொடுத்தவர்கள் ஆ.சிவசுப்பிரமணியமும், தொ.பரமசிவமும். ஆனால் இன்று அவர்கள் காலச்சுவடு பதிப்பகத்தில் தங்கள் புத்தகத்தை வெளியிடுகிறார்கள். வணிக நோக்கோடு தங்கள் புத்தகத்தை இன்னும் அதிகம் பேரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று இவர்கள் நினைக்கக்கூடும். 90களுக்குப் பிறகு மாற்று அரசியலையும் சார்ந்து இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் தமிழ்ச் சூழலில் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் காலச்சுவடு ஆசிரியர் குழுவில் இரண்டு தலித்துகள் இருந்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியலில் இதற்கு முன்பு எப்போது செய்தி ஒலிபரப்புத் துறை தலித்துக்கு கொடுக்கப்பட்டது? காலச்சுவடாக இருக்கலாம், தமிழக அரசாக இருக்கலாம். இந்த மாற்றம் எப்போது நிகழ்ந்தது?தலித் அரசியலை நேர்மையாகப் பேசக்கூடிய ஒரு தோழர், தன்னுடன் தலித் ஒருவர் இருந்தால் தான் தான் பேசுவது நேர்மையாக இருக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இது அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாமல் அவர்களையும் தங்கள் வியாபாரத்தில் இணைத்துக் கொள்ளும் முயற்சி.
தலித் அரசியலை முன்னிலைப்படுத்திய, அம்பேத்கர் புத்தகங்களை அதிக அளவில் கொண்டுவந்த பல பதிப்பகங்கள் தங்கள் செயலை விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை. ஆனால் ராஜ்கவுதமனையும், ரவிக்குமாரையும் வைத்துக்கொண்டுள்ள காலச்சுவடின் தொனி வேறுவிதமானது. அதாவது தங்களது பார்ப்பன, சனாதன முகங்களை மறைத்துக்கொள்ளத்தான் இந்த கார்ப்பரேட் பதிப்பகங்கள் சமூக அக்கறையுடன் புத்தகங்கள் வெளியிடுவதாய் காட்டிக்கொள்கிறார்கள். புத்தகங்களை சந்தைப்படுத்தும்போது பதிப்பகத்தின் அடிப்படை கட்டமைப்பை அதிகப்படுத்த வேண்டும். அப்போது பதிப்பகங்கள் நிறுவனங்களாகி விடுகின்றன. எனக்கு இருக்கிற அடிப்படை அரசியல் காரணமாக என்னுடைய பதிப்பகத்தை நிறுவனமாக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.
புத்தகச்சந்தை நடத்தும் பபாசி மாதிரியான நிறுவனங்கள் சிறு பதிப்பகங்களுக்கு எந்த மாதிரியான ஆதரவைத் தருகின்றன?
ஒரு ஆதரவும் இல்லையென்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. கார்ப்பரேட் கலாச்சாரத்திற்குள் முழுமையாக நுழைந்து விட்ட ஒரு சங்கமாக பபாசி மாறிவிட்டது. இதன் விளைவாக எளிமை என்கிற என் கொள்கையின் மீதே எனக்கு அவநம்பிக்கைகளும், சந்தேகங்களும் வந்துவிட்டன. புத்தகங்களின் வடிவமைப்பு எங்கேயோ போய்விட்டது. நானும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையான தரத்தில் புத்தகங்களைப் போட வேண்டிய நிலையில் இருக்கிறேன். எல்லோருக்கும் பபாசி இடம் கொடுக்கிறதா என்றால் என்னைப் போல் சிறு பதிப்பகங்கள் கோபத்தோடும், விமர்சனங்களோடும் இல்லையென்று சொல்ல வேண்டியிருக்கிறது.
உறுப்பினராகச் சேர்வது கூட சிரமமான காரியமா?
கடந்த வாரத்தில் நண்பர் ஒருவர் எனக்குப் போன் செய்தார். இன்னும் அரைமணி நேரத்தில் ஐந்தாயிரம் ரூபாய் செக் எடுத்துக் கொண்டு வந்தால் உறுப்பினராக சேர்ந்திடலாம் என்று. அரைமணி நேரத்தில் ஐந்தாயிரம் ரூபாய் திரட்டும் அளவுக்கு எனக்கு பலம் இல்லை. ஒரு பத்தாயிரம் ரூபாய் கிடைத்தால் இன்னுமொரு புத்தகம் கொண்டு வந்துவிடலாம் என்ற நிலையில் தான் நான் இருக்கிறேன். என்னுடைய முதலீடு, உழைப்பு என எல்லாமே புத்தகங்கள் கொண்டு வருவதற்காக செலவாகிறது. இங்கு என்னுடைய கேள்வி, உறுப்பினர் சேர்ப்பதை பபாசி பகிரங்கமாக அறிவித்துச் செய்ய வேண்டாமா? பதிப்புச் சார்ந்த தளங்களிலாவது அறிவிக்கப்பட வேண்டாமா என்பதுதான்.
கடந்த புத்தகச் சந்தையின்போது கூட கிழக்கு, ஆனந்த விகடன் பதிப்பகங்கள் தான் அதிகம் புத்தகங்களை விற்றன. ஏன் இவர்களது இடத்திற்கு நம்மால் செல்ல முடியவில்லை?
நம்முடைய பதிப்பு முயற்சி என்று தனியாக எதுவுமில்லை. நம்முடைய அரசியல் முயற்சிதான் நம்முடைய பதிப்பு முயற்சி. என்னுடைய புத்தகங்களை நான் புழுதி நிறைந்த வீதிகளில் தான் விற்கிறேன். மறுபடியும் மறுபடியும் தூசி தட்டித் தான் விற்க வேண்டியிருக்கிறது. ஆனால் அவர்கள் அப்படியல்ல. வாங்க வரும் வாசகன் அந்தப் புத்தகத்தை ஒரு referenceக்கு கூட பார்த்து விடக்கூடாது என்று பிளாஸ்டிக் அட்டைகளில் பூட்டி வைக்கிறார்கள். காலங்காலமாக வேறு யாரும் கல்வி கற்கக்கூடாது என்று பூட்டிவைத்த மனநிலைதானே இது.
உதவித்தொகை வாங்கிக்கொண்டு ஒண்டுக்குடித்தனம் நடத்தும் ஒரு மாணவனுக்கு ஆய்வுக்காக என்னால் ஒரு புத்தகத்தை காசு வாங்காமல் கொடுக்க முடியும். நான் கற்ற அரசியல் அப்படி. ஆனால் அவர்களால் முடியாது. படிக்க ஆர்வமுள்ள ஒரு மாணவனால் ஒரு புத்தகத்தை விலைகொடுத்து வாங்க முடியாத சூழ்நிலையும் இங்குதானே நிலவுகிறது. அவன் புத்தகத்தை பிரித்துக்கூட பார்க்கக்கூடாது என்று பூட்டி வைக்கிறார்கள். இதை உடைத்தெறிவதற்கான சாத்தியங்களோ, பலமோ என் போன்றோரிடம் கிடையாது.
புத்தகக் கண்காட்சிகளில் சுய முன்னேற்ற நூல்கள், வாஸ்து, ஜோதிடம், சமையல் புத்தகங்கள் தான் அதிகம் விற்பனையாவதாகத் தெரிகிறது. வாசகர்களின் ரசனை இப்படித்தான் இருக்கிறதா?
இப்படித்தான் இருக்கிறது என்பதை விட இப்படித்தான் உருவாக்கியிருக்கிறோம். இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாட்டில் அதிக விவாதங்கள் நடைபெற்றன. ஆனால் எங்காவது போராட்டம் நடந்ததா என்றால் இல்லை. தமிழ்நாடு தான் இட ஒதுக்கீட்டை முதன் முதலில் பேசி சட்டமாக்கியது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இதுதொடர்பான விழிப்புணர்வும் தற்போது அதிகரித்துள்ளது.ஆனால் நம் இரண்டாம், மூன்றாம் தலைமுறை இளைஞர்கள் பெரும்பாலும் இடதுசாரி, வலதுசாரித் தன்மைக்கு நடுவில் இருக்கிறார்கள். வாசிப்பைப் பொறுத்தவரை வலதுசாரிகள் தங்கள் புத்தகங்களை இந்த இளைஞர்களிடம் எளிதில் கொண்டு போய் சேர்த்து விடுகிறார்கள். அச்சு ஊடகங்களை விட காட்சி ஊடகங்கள் தாங்களே காட்சிகளைக் கொண்டு போய் இளைஞர்களிடம் சேர்த்து விடுகின்றன. எந்த விஷயம் தங்களுக்கு எளிதாகக் கிடைக்கிறதோ அந்த விஷயம் சார்ந்து தான் வாசகர்களும், இளைஞர்களும் இயங்குகிறார்கள்.இந்த இளைஞர்களிடம் கிரிக்கெட்டும், தேசபக்தியும் தான் மீடியாவால் கொண்டு சேர்க்கப்படுகின்றன. நவீன சமூகம் சார்ந்த இலக்கியங்களோ, அரசியலோ போய்ச் சேருவதில்லை. நம்முடைய இயக்கங்களும் இளைஞர்களுக்கு அரசியல் கல்வி எடுப்பதை நிறுத்தி வைத்துள்ளன. இதில் திராவிட இயக்கங்களோடு ஒப்பிடும்போது இடதுசாரி இயக்கங்கள் பரவாயில்லை என்று தோன்றுகிறது.
சேது பாலம் விவகாரத்தில் தீக்கதிர் பத்திரிகை தான் தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இந்த விஷயத்தில் 'முரசொலி', 'விடுதலை' போன்ற பத்திரிகைகள் மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளன. கலைஞர் தன்னுடைய தனிக்கருத்தாக சேது பாலம் பற்றிப் பேசுகிறார். எனக்குத் தெரிந்து அவருடைய அரசியல், வாசக தளத்தில் “ஏன் தலைவர் இந்த விஷயத்தில் எல்லாம் தலையிடறார்” என்று கேட்கும் மனநிலையில்தான் இருக்கிறது. டீக்கடையில் தி.மு.க. தொண்டனுக்கு கலைஞரின் பேட்டியைப் புரியவைக்கும் வேலையை என்னைப் போன்றவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது. இதன் விளைவு ஒரே நாளில் இந்த இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தி வலதுசாரிகள் கைப்பற்றிக் கொள்ளக் கூடிய சாத்தியம் இருக்கிறது. நாம் இயங்காத தளங்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்படித்தான் வாஸ்துவையும், சமையலையும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். பெருந்தீனி தின்னும் சமூகமாகத் தானே நம்முடைய சமூகம் மாறிக்கொண்டிருக்கிறது. நுகர்வோர் கலாச்சாரமும், உலகமயமாக்கலும் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. உடல் உழைப்பற்ற சமூகத்தை தானே நாம் உருவாக்க ஆசைப்படுகிறோம். கார்ப்பரேட் கம்பெனியில் வேலைபார்ப்பது தான் கவுரவமாக கருதப்படுகிறது. உழைப்பு சார்ந்த சமூகம் வேகமாக பின்னுக்குத் தள்ளப்படுகிறது.
அப்படியானால் முன்னேறுவதாக நாம் கூறும் சமூகத்தை பின்பற்றித்தானே புத்தகங்கள் விற்கப்படும்.
ஆனாலும் புத்தகம் விற்பதே சிரமம் என்ற நிலையில் இருந்து ஆயிரத்து இருநூறு புத்தகங்கள் விற்கப்படும் நிலையை இன்று நாம் உருவாக்கியிருக்கிறோம். புத்தகச் சந்தைகள் மூலம் மட்டுமே இந்த நிலையை மாற்றி விட முடியாது. இயக்கங்களால் மட்டுமே முடியும். பாரதி புத்தகாலயத்துக்குப் பின்புலமாக ஓர் அரசியல் இயக்கம் இருப்பதைப் போல் நிறைய புத்தகாலயங்கள் உருவாக வேண்டும். இயக்கத்தின் மூலம் குறிப்பிட்ட இளைஞர்களைத் தான் அரசியலோடு உருவாக்க முடியும். ஆனால் அந்த இளைஞர்களுக்கும் பிற இளைஞர்களுக்கும் ஒரு தொடர்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
மாற்றுப் பதிப்பகங்கள் நடத்துபவர்களுக்கு அரசிடம் இருந்து ஏதாவது உதவிகள் கிடைக்கிறதா?
பெரிய உதவிகள் எதுவும் கிடைப்பதில்லை. ஒரு பதிப்பகத்தில் இருந்து சிரமப்பட்டு நாற்பது புத்தகங்கள் வெளிவருகிறது என்றால் இரண்டு மூன்று புத்தகங்களை நூலக ஆணைக்கு எடுத்துக்கொள்வார்கள். ஆனால் அனைத்து புத்தகங்களுமே இந்த சமூக மாற்றத்துக்கான புத்தகங்களாக இருக்கும். பழமைவாதங்களோடு, பார்ப்பனியத்தை ஆதரிக்கும் பதிப்பகங்களில் இருந்து எடுக்கப்படும் புத்தகங்கள் அளவுக்கு மாற்று பதிப்பகங்களில் இருந்து வாங்கப்படுவதில்லை. புத்தகங்களைத் தேர்வு செய்பவர்களுக்கு பதிப்பகங்களின் அரசியல் குறித்து எதுவும் தெரியாது. காலச்சுவடு பதிப்பகம் தங்கள் ஆட்களை எல்லா இடங்களிலும் வைத்துக் கொண்டு வேலைகளை செய்து கொள்கிறது.பதிப்பக சிக்கல்களுக்கு என்னதான் தீர்வு?இயக்கங்கள் நடத்துவதன் மூலமாக மக்களிடம் நேரடியாகச் சென்று புத்தகங்கள் விற்கலாம். இதை பாரதி புத்தகாலயம் ஓரளவு நன்றாகவே செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இதன் மூலம் கட்சி சார்ந்த வாசகர்கள் மட்டுமே உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் தலித் எழுத்தை எப்படி படிப்பார்கள்? எனவே ஒரு பரந்த வாசிப்பை இவர்களிடம் உருவாக்க வேண்டும்.அரசு இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகளாக புத்தகங்களை அச்சடித்து வைத்துக்கொண்டு நூலக ஆணைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் புத்தகங்கள் வாங்கப்படும் விலை இருபது ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்டது. இப்போது தயாரிப்புச் செலவு அதிகரித்து விட்டது. காகிதத்திற்கான வாட் வரி மட்டும் 12 சதவீதம். ஒவ்வொன்றிலும் விலை ஏறிவிட்டது. பெரிய பதிப்பகங்களுக்கு இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. விளம்பரங்கள், அரசியலற்ற தன்மை போன்றவற்றால் அவர்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர். என்னைப் போன்றவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறோம்.
தேர்வுக்குழு என்ன மனநிலையோடு புத்தகங்களைத் தேர்வு செய்கிறது என்பது எனக்கு இன்றுவரை புரியவேயில்லை. தமிழில் கடந்த பத்து வருடங்களில் வெளிவந்த எந்த இலக்கியத்தோடு ஒப்பிட்டாலும் மிகச்சிறந்தது ஷோபாசக்தியின் ‘ம்’ நாவல். அதற்கு கடந்த இரண்டு வருடங்களாக நூலக ஆணை கிடைக்கவில்லை. இது போன்ற செயல்களால் நான் தளர்ச்சியடைந்து கொண்டே இருக்கிறேன். நூல்களைத் தேர்வு செய்வதில் பாரபட்சம், விற்பனை விலையை உயர்த்துவது போன்றவற்றை அரசு உடனடியாக கவனிக்க வேண்டும்.இன்னொருபுறம் அரசு நூலகத்துறையை மட்டும் சார்ந்தே பதிப்பகங்கள் இயங்குவதை நான் ஆரோக்கியமான ஒன்றாகக் கருதவில்லை.
முற்போக்கு எழுத்தாளர்கள் என்று காட்டிக்கொண்ட பலர் பார்ப்பன பத்திரிகைகளுக்கு தொடர்ச்சியாக எழுதுகிறார்கள். என்ன மாதிரியான உறவு இது?
இப்போது எழுதிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களிடம் காத்திரமான அரசியல் இருக்கிறது என்று சொல்ல முடியாது. காத்திரத்தோடு இயங்கிய முதல் தலைமுறை ஓய்ந்து விட்டது. இரண்டாவது தலைமுறை உயிர்மை பதிப்பகத்திற்கும், காலச்சுவட்டிற்கும் எழுதிக் கொண்டிருக்கிறது. அ. முத்துலிங்கம் சுவாரஸ்யமாக எழுதுகிறார் அவ்வளவுதான். அவரிடம் எந்த அரசியலும் இல்லை அதனால் தான் அவரால் காலச்சுவட்டில் எழுத முடிகிறது.அதே நேரத்தில் ஷோபாசக்தி தன்னுடைய நாட்டின் ஜாதீய சமூகத்தோடு வேறுபடுகிறார். மத, ஜாதி, தேசியம் என்கிற எல்லாவற்றோடும் முரண்படுகிறார். அதற்குள்ளே ஒழுங்குகளை கட்டமைப்பவர்களோடும் சண்டையிடுகிறார். இது எதுவும் இல்லாதவர்தான் அ.முத்துலிங்கம். காலச்சுவடுக்கு காத்திரமான படைப்புகள் தேவையில்லை. பக்கங்களை நிரப்பும் பிரதிநிதிகளைத் தான் அது தேர்ந்தெடுக்கிறது. இது புரியாமல் பெண் எழுத்தாளர்களும் அதில் போய் எழுதுகிறார்கள்.ஆண்களின் எழுத்தில் இருந்து விடுபட்டு தன்னைப்பற்றி அவர்கள் எழுத வந்தது சந்தோஷமான விஷயம் தான். பெண்ணுடல் அடிமைப்படுத்தப்பட்டதற்குக் காரணம் இந்து மதமும், இங்குள்ள ஜாதிய கட்டமைப்பும் தான் என்பதை அவர்கள் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். காலச்சுவடில் இருந்து விலகி நிற்கும் குட்டிரேவதி போன்றவர்களால் தான் இதைச் சொல்ல முடிகிறது.
பெண் எழுத்தாளர்களில் காத்திரமான படைப்புகளை எழுதும் மாலதி மைத்ரி ஏன் காலச்சுவடுக்கு எழுதுகிறார்? காலச்சுவடு இஸ்லாமிய பயங்கரவாதம் என்று ஓர் இதழ் போடுவதைப் பற்றி மாலதிக்கு என்ன கருத்து இருக்கிறது? அதில் அவருக்கு கருத்து முரண்பாடு இருப்பதாகக் கூறியிருக்கிறார். அப்படியானால் அந்தப் பத்திரிகையோடு அவரால் எப்படி இயங்க முடிகிறது? மாலதியின் இயக்கமற்றப் போக்குதான் காலச்சுவடோடு இணைந்து வேலை செய்ய வைக்கிறது.காலச்சுவடின் செயல்பாடு மிகவும் தந்திரமானது. தஸ்லிமா நஸ்ரின் பிரச்சனையில் களந்தை பீர்முகம்மதுவை வைத்துத்தான் எழுத வைப்பார்கள். அ. மார்க்ஸ்க்குப் பதில் எழுத ரவிக்குமாரைப் பயன்படுத்துவார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் பதில் எழுத தனித்தனியாக ஆள் வைத்திருக்கிறார்கள். இதெல்லாமே ஒருவித தந்திரம் தான். இது தெரியாமல் அதில் இந்த எழுத்தாளர்கள் போய் விழுந்து விடுகிறார்கள். எழுதவரும்போது தங்கள் அரசியலை அடையாளமாகக் கொண்டு எழுத வருகிறார்கள். கொஞ்சம் வளர்ச்சி அடைந்த பிறகு பரந்துபட்ட இடத்திற்குப் போக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனந்த விகடனிலோ, குமுதத்திலோ எழுதுவது பரந்துபட்ட இடம் என்று நினைத்தால் கூட பரவாயில்லை. காலச்சுவடையும், உயிர்மையையும் பரந்துபட்ட இடம் என்று நினைக்கிறார்கள். ஆதவன் தீட்சண்யா, அழகியபெரியவன், மதிவண்ணன் போன்றவர்கள் தான் யாருக்கு எழுதுகிறோம் என்பதில் தெளிவாகவும், தன்னுடைய ஒவ்வொரு எழுத்தையும் காத்திரமாகவும் வெளிப்படுத்துகிறார்கள்.
தலித், முஸ்லிம், விளிம்புநிலை எழுத்தாளர்கள் என்று அடையாளங்களோடு தான் முதலில் எழுத வருகிறார்கள். இந்த அடையாளங்களை அரசியல் இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யத் தவறி விடுவதால் தான் காலச்சுவடு, உயிர்மை போன்றவற்றில் போய் தஞ்சமடைந்து விடுகிறார்கள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கார்த்திகேயனுக்கு எதிராக திராவிட இயக்கத் தோழர்கள் தான் போராடினார்கள். பார்ப்பன எழுத்தாளர்கள் அனைவரும் மரணதண்டனை தவறானது என்ற கோஷத்தில் போய் ஒழிந்து கொண்டார்கள். சுந்தரராமசாமியும் அந்த கோஷத்தில் கலந்து கொண்டார். அதை வைத்துக்கொண்டு சுந்தரராமசாமி மரண தண்டனைக்கு எதிரானவர் என்று இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்சலுக்கு ஆதரவாகப் பேசுவதற்கு இவர்கள் யாரும் தயாராக இல்லை. அவருக்கு ஆதரவாக இடதுசாரி, பெரியாரிய, நக்சலைட் தோழர்கள் தான் பேசுகிறார்கள்.
ஆரம்பத்திலிருந்தே காலச்சுவடை கடுமையாக விமர்சித்து வருகிறீர்கள். அதன் பார்ப்பனத் தன்மையை எப்போது கண்டு கொண்டீர்கள்?
நான் நிறப்பிரிகையில் இருந்து வந்தவன். பெரியாரும், அம்பேத்கரும் கற்றுத்தந்த அரசியல் எனக்கு மற்றவர்களைப் புரிந்து கொள்ள உதவியிருக்கிறது. ஆரம்பத்தில் காலச்சுவட்டின் பார்ப்பனத் தன்மையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது அவர்கள் நம்ப மறுத்தார்கள். அதன்பின் ஒவ்வொரு கட்டுரையிலும் காலச்சுவடு தன்னுடைய பார்ப்பனத் தன்மையை தோலுரித்துக் காட்டியது. பெரியார்-125 இதழ், இஸ்லாமிய பயங்கரவாத இதழ், உச்சகட்டமாக சுந்தர ராமசாமி இறந்தபோது அவர்கள் நடத்திய கூத்துகள் அவர்களை தோலுரித்துக் காட்டின.
நண்பர் ஷோபாசக்தி சமீபத்தில் புதுவிசை பேட்டியில், ‘காலச்சுவடு என்று ஏன் பூச்சாண்டி காட்டுகிறீர்கள் அது அவ்வளவு பெரிய விஷயமா’ என்று கேட்டிருந்தார். இது மிகவும் தவறு. ஆயிரத்து ஐநூறு பிரதிகள் விக்கிற புத்தகம் தானே என்று விட்டுவிடக் கூடாது.ஆரம்பத்தில் அது ஒரு இலக்கியப் பத்திரிகையாக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் வணிகப் பத்திரிகையாக தன்னை விரிவுபடுத்திக் கொண்டு இயங்க ஆரம்பித்தது. வந்தோமா, சம்பாதித்தோமா என்பதைத் தாண்டி வரலாறு, இலக்கியம் எல்லாவற்றிற்கும் ஒரு ஆவணக்காப்பகம் போல் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு செயல்பட ஆரம்பித்தது.நான், அ.மார்க்ஸ், வீ.அரசு போன்றவர்களிடம் தான் அவர்களைப் பற்றிய இந்த நுட்பமான பார்வை இருக்கிறது. நடிகர் சிவாஜி கணேசனை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் காலச்சுவடு இன்று வரை அந்த இடத்தில் சிவாஜிக்குப் பதிலாக ஒரு பார்ப்பன ஆளை நிறுத்தப் பார்க்கிறது.
வரலாற்றில், இலக்கியத்தில் என எல்லா இடங்களிலும் காலச்சுவடு இந்த மாதிரியான திரிபு வேலைகளைத் தான் செய்கிறது.Visual Communication படிக்கிற மாணவர்கள் தங்களது Referenceகாக ஏதாவது ஒரு காலச்சுவடு புத்தகத்தை படிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அந்தப் புத்தகத்தில் இருக்கும் வரலாறு நிஜமானதல்ல, காலச்சுவடால் திரிக்கப்பட்டது. இதன் மூலம் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். தூவிக்கொண்டிருக்கின்ற விஷத்தை காலச்சுவடும் நுட்பமாக தூவிக்கொண்டே இருக்கிறது. வரலாறு, சமூகம், பண்பாடு போன்றவை ஒன்று கிடையாது. அதற்குள் எத்தனையோ பிரிவுகள் இருக்கிறது என்று பேசத்தொடங்கியது நிறப்பிரிகைதான். இந்த நோக்கில் நகர்ந்திருந்தால் காலச்சுவடு ஜனநாயக அரசியலை நோக்கி நகர்ந்திருக்கும். ஆனால் காலச்சுவடு பார்ப்பனீயம், இந்துத்துவம் போன்றவற்றைத் தான் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்கிறது.இஸ்லாமியர்களை தொடர்ந்து பயங்கரவாதிகள் என்று சித்தரிப்பது, தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்துவது இதுதான் காலச்சுவடின் வேலை.
சங்கராச்சாரியார் கைதின் போது எழுத்தாளர்கள் இதைக் கண்டிக்க வேண்டும் என்று சுந்தரராமசாமி எழுதினார். அதன் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட எழுத்தாளர் பிரபஞ்சன், “சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டால் சுந்தரராமசாமி ஏன் வருந்த வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.சுந்தரராமசாமியால் அரசை எதிர்த்து எழுதவும் முடியவில்லை. அதே நேரத்தில் ஒரு அதிகாரமிக்க பார்ப்பான் கைது செய்யப்பட்டதையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த சங்கராச்சாரியார் கைது செய்யப்படுவதற்கு முன் தனி விமானத்தில் போய் முஸ்லீம்களை மிரட்டிக் கொண்டிருந்தவர். அவர் கைது செய்யப்பட்டபோது தமிழ்ச் சமூகம் அவ்வளவு சந்தோஷப்பட்டது. ஆனால் காலச்சுவடின் குரலும், சுந்தரராமசாமியின் குரலும் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.அந்த நேரத்தில் சங்கரமடத்தின் அள்ளக்கையாக சரியாக செயல்பட்டவர் ரவிக்குமார். பிற்படுத்தப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் சங்கரமடம் என்று பார்ப்பனர்களை மிஞ்சும் வகையில் புளுகியிருந்தார் அவர்.
சமீபத்தில் உத்திரப்பிரதேச தேர்தலில் மாயாவதி வெற்றி பெற்றதைப் பற்றி குட்டிரேவதி ஒரு பத்திரிகையில் கருத்து சொல்லியிருந்தார். “மாயாவதி பார்ப்பனர்களோடு இணைந்து கொண்டு செயல்படப்போகும் இந்த வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.அதை மேற்கோள் காட்டி காலச்சுவடு பத்திரிகையில் கண்ணன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் காமராஜரும் பார்ப்பனர்களோடு இணைந்து ஆட்சியைக் கைப்பற்றினார் என்றொரு பச்சைப் பொய்யை எழுதியிருந்தார். காங்கிரசில் இருந்த பார்ப்பனர் அல்லாதவர்களை இணைத்துக்கொண்டு தான் காமராஜர் வெற்றி பெற்றார். மேலும் பெரியார் உக்கிரமாக இருந்த காலகட்டம் அது. பெரியார் மாநாட்டில் பேசுகிற விஷயங்கள் காமராஜர் ஆட்சியில் செயல்திட்டமாக மாறுவதாக கல்கி பத்திரிகை தலையங்கமே எழுதியது. ஆனால் கண்ணன் அதை திரிக்கப் பார்க்கிறார்.காலச்சுவடில் குட்டிரேவதியின் கருத்து குறித்து கண்ணன் எழுதியதன் அர்த்தம் இதுதான். ‘உங்கள் நாடார் இனத்தைச் சேர்ந்த காமராஜர் ஜெயிப்பதற்கு பார்ப்பனர்கள் தேவை, அதேபோல் மாயாவதி பார்ப்பனர் ஆதரவோடு ஜெயித்தால் என்ன’ என்பதுதான் அது. நீ யாரைப் பற்றியாவது பேசினால் நான் உன் ஜாதியைச் சொல்லி உன்னைத் தாக்குவேன் என்கிற தந்திரம் தான் அது. மேலும் அ.மார்க்ஸ் இதுகுறித்து பேசக்கூடாது, பேசினால் அவரையும் ஜாதியைச் சொல்லித் தாக்கலாம் என்கிற தந்திரமும் அதில் அடங்கியுள்ளது. ஏனெனில் மார்க்ஸ் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். பொதுவாகவே இம்மாதிரியான செயல்களினால் காலச்சுவடு மீது எல்லோருக்கும் ஒரு அதிருப்தி இருக்கத்தான் செய்கிறது.
மிகக் காத்திரமான மாற்று இதழ் ஒன்றைக் கொண்டு வருவதன் மூலமே காலச்சுவடின் தந்திரத்தை முறியடிக்க முடியும். எங்கள் ‘அநிச்ச’ இதழ் அந்த நோக்கத்தில் தான் கொண்டு வரப்பட்டது. ஆனால் நுட்பமாக இயங்குபவர்களுக்குள்ளும் பிரச்சனைகள் வரும் என்பதால் அது தடைபட்டு விட்டது. இப்போதிருக்கும் நிலையில் ஆதவன் தீட்சண்யாவின் புதுவிசையைத் தவிர வேறு எதுவும் காத்திரமாக இயங்கவில்லை. தலித் முரசு அரசியல் பத்திரிகையாக வருகிறது. இலக்கியத்திற்கான இடம் அங்கு நிரப்பப்படவேயில்லை.
காலச்சுவடின் அரசியலில் இருந்து உயிர்மை என்ன மாதிரியாக வேறுபடுகிறது?
வியாபாரத்திற்காக வாசகனை முட்டாளாக்குகிற வேலையைத் தான் அதுவும் செய்து கொண்டிருக்கிறது. என்றாலும் காலச்சுவடோடு ஒப்பிடும்போது உயிர்மை பரவாயில்லை. அது சுதாரித்துக்கொண்டு தன்னுடைய செயல்பாடுகளை மாற்றியிருக்கிறது. ஆனாலும் சுஜாதா என்கிற பார்ப்பானை கடவுளாகக் கொண்டாடுவதை மட்டும் நிறுத்தவேயில்லை. உயிர்மையில் எழுதும் சாருநிவேதிதா உலகத்தில் உள்ள எல்லோரையும், எல்லா சம்பவங்களையும் விமர்சிப்பார். சுஜாதாவை மட்டும் அவர் விமர்சிப்பதேயில்லை.
'அநிச்ச' வெளிவந்த இரண்டு இதழ்களிலும் மனுஷ்யபுத்திரன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தீர்கள். அதன்பிறகு அவர் நடவடிக்கைகளில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா?
மனுஷ்யபுத்திரன் பத்திரிகை ஆரம்பித்ததற்கு பெரிய சமூக நோக்கம் எதுவும் கிடையாது. அவர் காலச்சுவடில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்கான காரணத்தை அவர் சொல்லத் தயாராக இல்லை. தனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என்பதற்காக அவர் ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார். தனக்கென்று ஒரு அரசியலோடு பத்திரிகையில் தலையங்கம் எழுதுவதை நிறப்பிரிகை தான் ஆரம்பித்து வைத்தது. அதனால் பின்னால் வந்தவர்களுக்கு தலையங்கங்கள் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது.பத்திரிகை முழுவதையும் எந்த அரசியலும் இல்லாத இலக்கியத்தால் நிரப்பினாலும் அரசியலோடு தலையங்கம் எழுதுவது அவசியமாகி விட்டது. அரசியல் முகம் இல்லாமல் ஒரு பத்திரிகை நடத்த முடியாது என்பதே நாம் இங்கு ஜெயித்திருக்கிறோம் என்பதன் அடையாளம் தான். இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக பத்திரிகையின் எல்லாப் பக்கங்களும் அரசியலாகத் தான் இருக்க வேண்டும் என்பதாகத் தான் இருக்க வேண்டும். இந்த நிலை வந்தால் உயிர்மையால் நிற்க முடியாது.அப்சல் குரு விவகாரம் பரபரப்பாக இருந்தபோது ஒரு கூட்டத்தில் மனுஷ்யபுத்திரன் இவ்வாறு பேசியிருக்கிறார். ‘உயிர்மை தொடங்கப்பட்ட பத்தாண்டுகளில் எவ்வளவோ கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம். ஆனால் அப்சலுக்கு ஆதரவாக வெளியிட்ட கட்டுரை பெரிய பிரச்சனைகளைக் கிளப்பிவிட்டது. நீங்கள் இஸ்லாமிய மனோபாவத்தோடு செயல்பட்டு அடிப்படைவாதத்தை ஆதரிக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டினார்கள். நண்பர்கள் என்று நினைத்தவர்களே எதிரிகளாகி விட்டார்கள். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது’ என்று பேசினார்.ஒருநாள் இந்தப் பிரச்சனையை அனுபவிக்கும்போதே மனுஷ்யபுத்திரனுக்கு இவ்வளவு கோபமும், ஆயாசமும், மன விகசிப்பும் வருகிறதே, அப்படியானால் என்னைப் போன்ற மாற்றுப் பத்திரிகையாளர்களின் நிலை என்ன? இது தொடர்பாக ஒவ்வொரு நாளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் மனிதனைப் பற்றிய பதிவுகள் உயிர்மை புத்தகத்தில் என்னவாக இருந்திருக்கிறது? ஒரு பிரசுரத்தைக் கொண்டு போய் விற்று விட்டு வருவதற்குள் போலிசிடமிருந்து, பிற இயக்கத்தினரிடம் இருந்து எவ்வளவு பிரச்சனைகளை மாற்று இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் எதிர்கொள்கிறார்கள்.
ரொமான்டிக்காக ஒரு பத்திரிகை நடத்தி விட்டுப் போகலாமென்று நினைக்கிறார் மனுஷ்யபுத்திரன். அது நடக்காது. 'சோளகர் தொட்டி' வெளிவந்தபோது காலச்சுவடு அதை நிராகரித்தது. ஆனால் அந்தப் புத்தகம் இப்போது ஐந்து பதிப்புகள் விற்று விட்டது. காலச்சுவடு, உயிர்மை பத்திரிகைகளுக்கு தமிழ்ச் சூழலில் எதையும் தீர்மானிக்கிற இடம் கிடையாது. இளைஞர்களைத் திசைதிருப்பி விடலாம் அவ்வளவுதான். ‘பார்ப்பனர்களால் நல்ல படிப்பாளிகளாக இருக்க முடியும், படைப்பாளிகளாக இருக்க முடியாது’ என்று அம்பேத்கர் குறிப்பிட்டது கண்முன்னே நிதர்சனமாகிக் கொண்டிருக்கிறது. நமக்குக் கிடைக்கும் வாழ்க்கைமுறை, அனுபவம் போன்றவற்றால் தான் ஒருவன் எழுத முடிகிறது. எனக்குக் கிடைத்த அனுபவத்தோடு ஒப்பிடும்போது நீ வெகு கீழே இருக்கிறாய். என்ன அனுபவம் இருக்கிறது உனக்கு? நிறப்பிரிகைக்குப் பிறகு அரசியலோடு தலையங்கங்கள் எழுத வேண்டிய அவசியமும், பார்ப்பனத் தன்மை அற்றதாக தன்னை காட்டிக்கொள்ள வேண்டி பெண்கள், தலித் போன்றவர்களை ஆசிரியர் குழுவில் அமர்த்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. ஆனால் அப்படி ஆசிரியர் குழுவில் இடம் பெற்றவர்கள் தாங்கள் எங்கேயிருந்து வந்தோமோ அந்த இடத்தின் பிரதிநிதிகளாக இயங்குகிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
புத்தகத்தில் எல்லாமே அரசியலாகத்தான் எழுத வேண்டும் என்றால் தனிமனித உறவுகள் இல்லையா, அதை எழுதக்கூடாதா?
எல்லா உறவுகளும் சமூகத்தில் நடைபெறும் அரசியலின் விளைவால் ஏற்படுபவை தான். இதன் பிரதிபலிப்பாகத்தான் இலக்கியம் இருக்க முடியும். தொலைக்காட்சித் தொடர்களைக் கூட இதன் அருகில் வைத்துத்தான் பார்க்க வேண்டும் என்று பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுவார். இந்த இடத்தில் நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். எல்லா ஆண் எழுத்தாளர்களும் வெட்கமேயில்லாமல் டி.வி. சீரியல் பார்க்கும் பெண்களைத் திட்டுவார்கள். சமீபகாலமாக இது அதிகரித்து விட்டது. இங்கு இயங்கும் சமூக இயக்கங்கள் பெண்களை வீட்டுக்குள்ளேயே வைத்திருப்பதால் தான் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து சீரியல்களைப் பார்க்கிறார்கள். வெளிக்கலாச்சாரம், வெளிப்பண்பாட்டில் பெண்களை நாம் அழைத்து வரவில்லை என்பதால் தானே டி.வி.க்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். நம்மால் அரைமணி நேரம் பார்க்க முடியாத தொடர்களை பெண்கள் மாய்ந்து மாய்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நம் வாழ்க்கை முறையும் அவர்கள் வாழ்க்கை முறையும் வேறு வேறு என்றுதானே அர்த்தம். இதில் எல்லா ஆண்களுக்கும் பங்கு இருக்கிறது.ஆண்களுக்கு ஒருநாளைக்கு ஒரு லட்சம் காட்சிகள் காணக் கிடைக்கிறதாம். ஆனால் பெண்களுக்கு குடும்பத்தைத் தாண்டி என்ன இருக்கிறது? பெண்களை குடும்பம் என்கிற அமைப்பிற்குள் பூட்டி வைத்து விட்டு அவர்கள் குடும்பக்கதைகள் வரும் தொடர்களையே பார்க்கிறார்கள் என்று சொல்வது என்ன நியாயம்?
நிறப்பிரிகைக்குப் பிறகு நல்ல பத்திரிகைகள் என்று எதையாவது குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?
மிகக்குறைவு தான். நிறப்பிரிகை அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு நம்பிக்கை தரக்கூடிய இதழாக 'புதுவிசை' வெளிவருகிறது. விசையின் சமீபத்திய இதழ்கள் பிரமாதமாக இருக்கின்றன. 'உயிர் எழுத்து' பத்திரிகையும் அரசியல் அடையாளத்தோடு வெளிவருகிறது. மாற்று அரசியல் சார்ந்த புத்தகங்களை வெளியிடும் தங்களைப் போன்றவர்களுக்கு, மாற்று அரசியல் இயக்கங்கள் காட்டும் ஆதரவு எத்தகையதாக இருக்கிறது?இன்றைக்கு இருக்கிற இயக்கங்கள் விளிம்பு நிலை மக்களுக்காக போராடினாலும் அவர்களது வரலாறு விருப்பு வெறுப்புகளோடு தான் பதிவு செய்யப்படுகிறது. பாடநூல்களில் வரலாற்றை பாரதீய ஜனதா மாற்றி எழுதியது. இதை அ.மார்க்ஸ், நான், 'அயன்புரம்' ராஜேந்திரன் மூவரும் தான் இங்கே தெரியப்படுத்தினோம். பிறகு இடதுசாரித்தோழர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் இதில் இணைந்ததன் விளைவாக அது பெரிய வீச்சாக அமைந்தது.
இந்த வரலாற்று திரிப்பு தொடர்பாக மார்க்ஸ் எழுதிய நூலை எங்கள் குழு கலைஞரை சந்தித்துக் கொடுத்தது. இது தொடர்பாக தி.மு.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டணியில் இருந்தபோதும், பாரதீய ஜனதா மீது ஒரு குற்றச்சாட்டாக தி.மு.க. வைத்தது. இதில் எங்களுக்கு இருந்த பங்கை எந்தப் பத்திரிக்கையும் பதிவு செய்யவில்லை. தீக்கதிர் போன்ற இடதுசாரி பத்திரிகைகளும், த.மு.மு.க.வின் ஒற்றுமை என்கிற பத்திரிகையும் தான் இதைப் பதிவு செய்தன. திராவிடர் கழகம் மற்றும் பெரியார் திராவிடக் கழகத்தின் ஏடுகளில் கூட இதுகுறித்து எந்தப் பதிவும் இல்லை. நான் அங்கிருந்து வெளியேறியவன் என்பது கூட காரணமாக இருக்கலாம்.நான் இறந்தபிறகு என்னை எப்படி இந்த சமூகத்தில் அடையாளப்படுத்துவது? உங்கள் சிந்தனையோடு, கருத்துக்களோடு நான் முரண்பட்டிருக்கலாம். அதற்காக என்னைப் பற்றி பதிவு செய்யாமல் இருப்பது என்ன நியாயம்? எங்கேயோ இருந்த சேகுவேராவை நாம் கொண்டாடுவதன் காரணம் அவரது வரலாறு பதிவு பெற்றிருப்பது தானே. விருப்பு வெறுப்புகளற்ற எந்தப் பதிவும் நம் சூழலில் கிடையாது. இதைச் சொன்னால் தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொள்வதாக சொல்வார்கள். ஆம் அப்படித்தான் செய்ய வேண்டியிருக்கிறது. பார்ப்பன பத்திரிகைகள் ஏற்படுத்திய இந்த விருப்பு வெறுப்பு மனோபாவம் நம்மிடமும் தொற்றிக் கொண்டு விட்டது. அதனால் தான் அவன் ஆளு, இவன் ஆளு என்று குழுக்களாக சிதைந்து கிடக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் நம்முடைய செயல்பாடுகளையும் சேர்த்தே வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டிய அவசியமிருக்கிறது. இடதுசாரி பதிப்பகங்கள் என்னுடைய புத்தகத்தை வாங்கி விற்பதில்லை என்ற கழிவிரக்கம் எனக்கு உண்டு. ஆனால் அந்த கழிவிரக்கத்தோடு நான் நின்றுவிட முடியாது. தொடர்ந்து இயங்குவதன் மூலமே நான் வாழ்ந்தேன் என்ற சந்தோஷம் எனக்கு இருக்கும்.
நேர்கண்டவர்கள்: மினர்வா - நந்தன்
நன்றி: கீற்று இணையத்தளம்.
Monday, December 17, 2007
Para has expired
We deeply regret to inform you that our great friend and comrade Para has passed away. He expired in Berlin yesterday night on the 16th of December around 11.30 p.m. on his 73rd Birthday.
For funeral arrangements and other related information kindly contact:
Sivarajan: + 49 711 441 17 69
Suseendran: + 49 178 938 18 11
Friday, December 14, 2007
Tuesday, December 11, 2007
இரண்டாவது தலித் மாநாடு - லண்டன்
விபரங்களுக்கு…..